தமிழக அரசு இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-முதல் – அமைச்சர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் இன்று மதியம் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பி.எஸ்.ஏ. பியூஜியாட் சிட்ரியான் கார் நிறுவன நிர்வாகிகள் கிரிகோரி ஆலிவர், பிரெடரிக், ஜிதேஷ் கார்டியா, சஞ்யூவ் சகா, சாஸ்ஸிகந்த், வைத்தியநாதன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த கார் தொழிற்சாலை அமைக்க விருப்பம் தெரிவித்தனர்.