Saturday, 8 June 2013
பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி தளங்களின் சர்வர்களை உளவு பார்க்கும் அமெரிக்கா!
கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட பல முன்னணி வலைத்தளங்களின் சர்வர்களில் நுழைந்து அமெரிக்கா உளவு பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனிநபர்களைக் குறிவைத்து மைக்ரோசாஃப்ட்டின் ஹாட்மெயில், யாஹு, கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள், யூடியூப், அமெரிக்கன் ஆன்லைன், ஸ்கைப் உள்ளிட்ட 9 முன்னணி நிறுவனங்களின் சர்வர்களில் நுழைந்து, அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ. உளவு பார்ப்பதாக அமெரிக்காவின் 'தி வாஷிங்டன் போஸ்ட்' மற்றும் பிரிட்டனின் 'தி கார்டியன்' பத்திரிகையும் செய்தி வெளியிட்டன.
விரைவில் வெடிக்க இருக்கும் மோடி ‘பலூன்’ : சரத்பவார்!
இந்தியாவில் பலம் வாய்ந்த அரசியல்வாதியாக மாற்ற முயற்சிக்கப்பட்டு தோல்வியை தழுவிய மோடியை, அளவுக்கு அதிகமாக ஊதப்பட்ட பலூனுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்வார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “எனது 40-50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், அளவுக்கு அதிகமாக ஊதப்பட்ட பல பலூன்கள் விரைவில் வெடித்ததை பார்த்திருக்கிறேன்” என்றார்.
அத்வானி கோஷ்டியினரை அடித்து சென்ற மோடி கோஷ்டி! - ஷகீல் அகமது!
கோவா தலைநகர் பனாஜியில்இன்று (சனிக்கிழமை) தொடங்குகிற பாரதீய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் உடல் நலக்குறைவால் அத்வானி கலந்துகொள்வாரா என்பது உறுதியாகவில்லை. மூத்த தலைவர்கள் உமாபாரதி, ஜஸ்வந்த்சிங், ரவிசங்கர்பிரசாத், சத்ருகன் சின்கா, வருண்காந்தி உள்ளிட்டவர்கள் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)