Friday, 27 May 2011

மூடி மறைப்பேன் என்னை !



குறையேதுமில்லை
திரையிட்டு வந்தேன்;
உன் இச்சைக்கொண்ட
பார்வைக்கு எச்சில் துப்பி
எதிர்ப்பேன்!

அரைநிர்வாணம்
அழகாய் தோன்றும் உனக்கு;
உன் அக்காள் தங்கை
காட்டி வந்தாள் முழுக்கோபம் எதற்கு!

மாற்றான் தோட்டத்து
மல்லிகை மட்டும்
மணக்கவேண்டும் உனக்கு;
மானங்கெட்ட மானிடனே
மனைவியை  
பூட்டிவைக்கிறாய் எதற்கு!

போர்த்தியிருக்கும் எங்களை
கழட்டச் சொல்லி கேட்கிறாய்;
கழட்டி வந்த பெண்களிடம்
கைவரிசையைக் காட்டுகிறாய்!

மானம் காக்க
மறைத்திருப்பது
சிறையென்று நீ நினைத்தால்;
ஒத்துக்கொள்கிறேன்
ஒளிந்திருக்கிறேன்
உனக்காகத்தான்;
தப்பிப்பதற்கு!

நன்றி: யாசர் அரஃபாத்
நன்றி: harbour-popularfront.blogspot.com

ஊனம் ஒருதடையல்ல...


    வாழ்க்கையில் சாதிப்பதகு ஊனம் ஒரு தடையல்ல என்பதினை நிரூபிக்கும் பல விதமான மனிதர்களை பற்றி நாம் கேள்விபட்டுள்ளோம். அத்தகைய ஓர் சிறுவனைப் பற்றிய சுவாரஸ்யமான செய்தியே இது.
 அமெரிக்காவைச் சேர்ந்த 9 வயதான கோடி மெக்கஸ் லேண்ட் என்ற அச் சிறுவனிடம் சுமார் 20 செயற்கைக் கால்கள் உள்ளன.
இவை அனைத்தும் வெவ்வேறு விதமான போட்டிகளில் பங்கு பற்றுவதற்காக அச்சிறுவன் தன்னிடம் வைத்துள்ள வையாகும்.
இதுவரை பல விளையாட்டுக்களில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளான் கோடி.
இவன் குழந்தையாக இருக்கும் போதே இவனது கால்கள் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன.
எனினும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காத கோடி தனது முயற்சி மூலம் தன்னால் பல விளையாட்டுக்களில் சாதிக்கமுடியும் என்பதினை நிரூபித்துள் ளனா.
இவனது வெற்றிகளுக்கான இன்னுமோர் முக்கிய காரணம் இவனது பெற்றோ ராகும். அவர்களது ஊக்குவிப்பே இத்தகைய ஓர் தன்னம்பிக்கை மிக்க ஒரு வனாக மாற வழிவகுத்துள்ளது.
கோடியின் தற்போதைய இலக்கு உலக ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் ஓர் தங்கப் பதக்கத்தை வெல்வதே ஆகும்.

10ம் வகுப்பு: முதல் 3 இடங்களை பிடித்த 40 மாணவ மாணவிகளின் பெயர் மற்றும் பள்ளி விபரம்


10ம் வகுப்பு தேர்வில் 5 மாணவிகள் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.. இவர்கள் 500க்கு 496 மார்க் பெற்றுள்ளனர். 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 2வது இடத்தை 11 பேர் பிடித்துள்ளனர். 500க்கு 494 மார்க்குகள் பெற்று 24 பேர் மாநிலத்தில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
500 க்கு 496 மதிப்பெண்கள் பெற்ற 5 மாணவிகள் விவரம் வருமாறு: 
1. எம்.நித்யா, எஸ்.எச். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிப்புத்தூர்.
2. எஸ். ரம்யா, ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபி செட்டிப்பாளையம்.
3. எஸ்.சங்கீதா, முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, பெரியயேரி, சேலம்.
4. எம்.மின்னலாதேவி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு.
5. ஆர்.ஹரிணி (496), அவர்லேடி மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர், சென்னை. 

10ம் வகுப்பு தேர்வு: 5 பேர் முதல் இடம்...


10ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மின்னல் விழி உட்பட 5 மாணவ, மாணவிகள் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.. இவர்கள் 500க்கு 496 மார்க் பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 28ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை 9 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவிகள் 2 ஆயிரத்து 800 மையங்களில் எழுதினார்கள். இவர்களில் 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 பேர் பள்ளிக்கூட மாணவ மாணவிகள். அதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 பேர் மாணவிகள்.

பாப்ரி மஸ்ஜித்:உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ 19 வருடங்களுக்கு பிறகு கைது ..


பாட்னா:பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படும் வேளையில் உணர்ச்சியை தூண்டும் வகையில் உரை நிகழ்த்திய அவுரங்காபாத்தை சார்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ராமாதர் சிங் 19 வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றம் இவரை 14 தினங்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.

1995-ஆம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் ராமாதர் சிங். அவுரங்காபாத் நீதிமன்றம் இவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருந்தது. பீகார் மாநிலத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்த இவர் கடந்தவாரம் பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜினாமா செய்த உடனேயே பாட்னா உயர் நீதிமன்றம் ராமாதர் சிங்கிடம் கீழ் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது. பீகார் மாநிலத்தில் நிதீஷ்குமாரின் ஆட்சியின் நற்பெயரை கெடுக்க கூடாது என்பதால் பதவியை ராஜினாமா செய்வதாக ராமாதர் சிங் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

1992-ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வேளையில் முஸ்லிம்களுக்கு எதிராக வகுப்பு வாத துவேசத்தை உருவாக்கும் வகையில் உரை நிகழ்த்தியதாக ராமாதர் சிங் மீது வழக்கு தொடரப்பட்டது.

அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக ஈராக்கில் பிரம்மாண்ட கண்டன பேரணி


பாக்தாத்:அமெரிக்க ராணுவத்தை நீண்டகாலம் ஈராக்கில் நிறுத்தி வைப்பதற்கான முயற்சி தொடரும் வேளையில் அமெரிக்க ராணுவம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கோரி பாக்தாதில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. ஸதர் நகரத்தில் 20 ஆயிரம் பேர் இப்பேரணியில் கலந்து கொண்டனர். 2011 ஆம் ஆண்டு ராணுவம் வாபஸ் பெறப்படும் என அமெரிக்கா ஏற்கனவே அறிவித்த பொழுதிலும் ஈராக் ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கிறோம் என்ற பெயரில் தற்போதும் ஈராக்கில் தொடர்கிறது.

ஷியா முஸ்லிம் தலைவர் முக்ததா அல் ஸதர் இப்பேரணிக்கு தலைமை வகித்தார். 2011 டிசம்பர் மாதம் அமெரிக்க ராணுவம் நாட்டை விட்டு வெளியேறும் என்பது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருநாடுகளிடையே ஒப்பந்தம் உருவானது. ஒப்பந்தத்தை பேண பிரதமர் நூரி அல் மாலிக்கி தயாராக வேண்டும் என ஸதர் கோரிக்கை விடுத்தார்.

பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டி அமெரிக்கா தலைமயிலான கூட்டணி நாடுகள் ஈராக்கை ஆக்கிரமித்து துவசம் செய்தன. தொடர்ந்து ஈராக் அதிபர் சதாம் ஹுசைனை கைது செய்து விசாரணை நடத்தி கொலை செய்தனர். ஆனால், அமெரிக்காவால் எவ்வித பேரழிவு ஆயுதங்களையும் ஈராக்கில் கண்டுபிடிக்க முடியவில்லை

SDPi வெறும் அரசியல் கட்சியல்ல, ஒரு மிஷன்: இ அபுபக்கர் அவர்கள் தேசிய பிரதிநிதிகள் கவுன்சிலில் ஆற்றிய தலைமையுரை

பெங்களூரு: புதிதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய தலைவர் இ அபுபக்கர் அவர்கள் தேசிய பிரதிநிதிகள் கவுன்சிலில் ஆற்றிய தலைமையுரை:
பெரியோர்களே சகோதர சகோதரிகளே, நாம் மற்றொரு சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் வரலாற்றுச்சிறப்பு மிக்க நிகழ்ச்சிக்கு சாட்சியாளராக இங்கு குழுமி இருக்கிறோம்.




ஜூன் 21, 2009 அன்று கரோல் பாக்கிலுள்ள ஹோட்டலின் அரங்கில் 29 பேர் முன்னிலையில் கட்சி தோற்றுவித்ததற்கான அறிவிப்பை வெளியிட்ட அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நான் நினைவுகூர்கிறேன். அப்போது தற்காலிக குழு அமைக்கப்பட்டது, இது தேர்ந்தெடுக்கப்படவில்லையெறாலும் அது பல்வேறு இந்திய மாநிலத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறத்தக்கவகையில் பிரதிநிதிகளைக்கொண்டு அமைக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்!!


மே 27, புதிதாக ஆட்சியில் அமர்ந்த உடன் ஜெயலலிதா ஒரு அறிவிப்பை செய்தார்.

அது என்ன வென்றால் இனி மக்கள் அஞ்சாமல் நிம்மதியாக வாழலாம் என்று!


அவர் அப்படி சொல்லி ஒரு நாள் கூட, முடியவில்லை சிறுபான்மை சமூக அதிமுக மத்திய அமைச்சர் மரியம் பிச்சை விபத்தின் மூலம் கொல்லப்பட்டார்.


அது சம்மந்தமாக இதுவரை எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. விபத்து நடத்திய லாரி கூட இதுவரை கண்டுப்பிடிக்க படவில்லை.

மாறுவாரா ஜெ!! மக்கள் எதிர்பார்க்கின்றனர்!!

May 27, அரசு திட்டங்கள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் வாய் திறக்க கூடாது என்ற நிலையை, முதல்வர் ஜெயலலிதா மாற்ற வேண்டும்' என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான முந்தைய ஆட்சியின் போது, அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து அவர் மட்டுமே பேசுவார்; அறிவிப்புகளை வெளியிடுவார்.

விழாக்களிலும், செய்தியாளர்கள் கூட்டத்திலும் அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்பட எவரும் வாய் திறக்க மாட்டர்.

மக்களுக்கு உத்தரவாதம் வழங்குதல், நம்பிக்கையான வாக்குறுதி அளித்தல் போன்றவற்றுக்கும் இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மீறுபவர்கள் பதவி பறிக்கப்பட்டதும் உண்டு.

தீர்க்கக்கூடிய பொதுவான பிரச்னையை சாதாரண மனிதன், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனுவாக அனுப்பி, அது முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நிறைவேற்றப்பட்ட பல சம்பவங்கள் உண்டு.

ஆனால், அமைச்சர், அதிகாரிகளிடம் மனுவாக கொடுத்து, அது நிறைவேறிய சம்பவம் மிகச்சொற்பம் தான். அரசு விழாக்களில் அமைச்சர்கள் பேசும் போது கூட, "அம்மா அவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தான் கூறுவார்களே தவிர, தங்கள் துறை தொடர்பான தகவல்கள், முன்னேற்றங்கள், திட்டங்கள் பற்றி வாய் திறக்க மாட்டார்கள் இந்நிலை மாறுமா? மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

குஜராத்தில் லஞ்சம், மது, ஊழல்!! அன்னா ஹசாரே அதிரடி!!


தனது கடந்த கால தவறுகளை திருத்திக்கொண்ட அன்னா ஹசாரே,குஜராத்தின் உண்மை நிலையை நேரில் கண்டு மனம்வெதும்பி அறிக்கை சமர்பித்தார்.

சிறிது நாட்களுக்கு முன் தன்னால் புகழப்பட்ட மனித மிருகம் நரேந்திர மோடியை குறித்து அன்ன ஹசாரே இப்பொழுது அதிர்ச்சி தகவல்களை அளித்துள்ளார்.

இந்தியாவிலேயே குஜராத்தில் 'தான்" அதிகமாக லஞ்ச ஊழல் உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது என்றும் தெரிவித்தார்.