Friday 27 May 2011

10ம் வகுப்பு தேர்வு: 5 பேர் முதல் இடம்...


10ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மின்னல் விழி உட்பட 5 மாணவ, மாணவிகள் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.. இவர்கள் 500க்கு 496 மார்க் பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 28ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை 9 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவிகள் 2 ஆயிரத்து 800 மையங்களில் எழுதினார்கள். இவர்களில் 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 பேர் பள்ளிக்கூட மாணவ மாணவிகள். அதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 பேர் மாணவிகள்.


சென்னையில் 272 பள்ளிகளை சேர்ந்த 36 ஆயிரத்து 148 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினார்கள்.
ஏப்ரல் 11 ந்தேதி சமூக அறிவியலுடன் தேர்வு முடிந்தது.

விடைத்தாள் திருத்தும் பணி உடனடியாக தொடங்கியது. மே மாதம் 2ந் தேதி விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி முடிந்தது. பின்னர் பாடவாரியாக மார்க்குகள் கம்ப்ழூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்தது. பின்னர் விடைத்தாளில் உள்ள மார்க்கையும் கம்ப்யூட்டரில் உள்ள மார்க்கையும் ஒப்பிட்டு சரிபார்க்கும் வேலை நடந்தது. இப்போது அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு முடிவு வெளியிட தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 27ஆம் தேதி வெளியாகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

மெட்ரிக், ஓ.எஸ்.எஸ்.எல்.சி முடிவுகளும் 27ஆம் தேதி வெளியாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள உங்கள் நக்கீரன் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள். தேர்வு முடிவுகள் வெளியான உடன் உங்கள் செல்போனுக்கு தகவல் அனுப்பப்படும். 

No comments:

Post a Comment