பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து எகிப்து செல்லும் ரஃபா எல்லையை எகிப்து அரசு இன்று முழுமையாகத் திறந்தது.
உலகின் மிகப்பெரும் சிறைச்சாலை என்று வர்ணிக்கப்பட்ட காஸா பகுதியில் இருந்து மக்கள் மருத்துவத்திற்காகக் கூட வெளியே செல்ல முடியாத வகையில் இஸ்ரேலும் எகிப்தும் தடைகளை ஏற்படுத்தி வைத்திருந்தது.
2007ஆம் ஆண்டு காஸா பகுதியின் ஆட்சி நிர்வாகம் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் கீழ் வந்ததைத் தொடர்ந்து இஸ்ரேல் இந்தத் தடையை ஏற்படுத்தியிருந்தது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வேண்டுகோளைத் தொடர்ந்து, மக்கள் புரட்சியின் மூலம் ஆட்சியை விட்டு விரட்டப்பட்ட ஹோஸ்னி முபாரக் எகிப்து அதிபராக இருந்த போது, காஸாவில் இருந்து எகிப்து செல்லும் ரஃபா எல்லைக் கதவை முழுமையாக அடைத்தது.