Monday, 27 June 2011

அமைச்சரவை மாற்றதிற்கு முன் ஆளுநர்கள் மாற்றம்: மத்திய அரசு முடிவு

மும்பை : மத்திய அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு முன்பாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

தர்மஸ்தலா கோயில் முன்பு சத்தியம் செய்தார் குமாரசாமி- வார்த்தை தவறினார் எதியூரப்பா

தர்மஸ்தலா கோயிலில் சத்தியம் செய்யப்போவதாக கூறிய எதியூரப்பா இன்று காலை அக்கோயிலுக்கு சென்று தரிசனம் மட்டும் செய்துவிட்டு திரும்பினார். ஆனால் குமாரசாமி தான் சவால் விட்டபடி தனது ஆதரவாளர்களுடன் மஞ்சுநாதா சாமி முன்பு நின்று சத்தியம் செய்தார்.


கோகைன் இரவு விருந்து..60 பெண்கள், 240 வாலிபர்கள் சிக்கினர்-போதைத் தடுப்பு இன்ஸ்பெக்டரும் கைது!

நேற்றிரவு மும்பை ரிசார்ட்டில் கஞ்சா, கோகைன் உள்ளிட்ட போதை மருந்துகள் வினியோகத்துடன் நடந்த இரவு நேர களியாட்டத்தில் கலந்து கொண்ட 60 இளம் பெண்கள் உள்பட 300 பேர் பிடிபட்டனர். இந்த போதை ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு உதவிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டரும் கைது செய்யப்பட்டார்.


மத்திய அமைச்சரவையில் எங்களுக்கு இடம் தந்தது தப்பு இளையவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்: ப.சிதம்பரம்

நான் உள்பட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தரக் கூடாது. எங்களுக்குப் பதில் இளையவர்களை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.



இண்டர்போல் தேடும் இலங்கை நபர் விமான நிலையத்தில் கைது!

சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் இண்டர்போல் தேடும் இலங்கை நபரை தடுத்து நிறுத்தி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் 450 ராக்கெட் வீசித் தாக்குதல்: கர்சாய் குற்றச்சாட்டு

கடந்த மூன்று வாரத்தில் மட்டும் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் 450 ராக்கெட் தாக்குதலை நடத்தி உள்ளது என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் குற்றம் சாட்டினார்.


அருகாமை பகுதியில் உள்ள பாகிஸ்தானின் பயங்கர தாக்குதலால் 12 சிறுவர்கள் உள்பட 36 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

திருத்துறைப்பூண்டி அரசுக் கல்லூரியில் விண்ணப்பப் படிவங்கள் விநியோகம்

 திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படவுள்ளதையொட்டி, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
திருத்துறைப்பூண்டி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஆனால், இங்கிருந்து தேர்ச்சி பெறும், மாணவர்கள் திருவாரூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளை நாடி செல்ல வேண்டிய நிலைமையே இருந்தது.

தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதை தடுக்க சட்டம்

தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதை தடுக்க மத்திய அரசு தனி நபர் உரிமை பாதுகாப்பு மசோதா` என்ற புதிய மசோதாவை உருவாக்கி உள்ளது. இந்த மசோதா, அடுத்த பாராளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது.




டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 ரிசல்ட்

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன், முதல் இடத்தைப் பிடித்தார்.


ஆர்.டி.ஓ., - டி.எஸ்.பி., ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 61 பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த ஆண்டு மே மாதம் டி.என்.பி.எஸ்.சி., முதல்நிலைத் தேர்வை நடத்தியது.

திருச்சி, தஞ்சையில் நவீன வசதிகளுடன் பாஸ்போர்ட் மையம்

பாஸ்போர்ட் பெறுவதில் பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியத்தை போக்கும் வகையில் தற்போது மத்திய அரசின் வெளியுறவுத்துறை மூலம் திருச்சி, தஞ்சையில் அதிநவீன பாஸ்போர்ட் சேவை மைய ங்கள் துவங்கப்பட உள்ளன.


இதற்காக திருச்சி கோகினூர் தியேட்டர் அருகே அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டத்தில் வசிப்பவர்களும், தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டத்தில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். அதேசமயம் ஏற்கனவே இங்கு நடைமுறையில் உள்ள 8 மாவட்டத்திற்கும் திருச்சியில் விண்ணப்பிக்க எந்த தடையும் இல்லை.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு

கடந்த 1980க்குப் பின் உலகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரு மடங்காக அதாவது 34.7 கோடியாக அதிகரித்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.



பிரிட்டன் - சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம்: இரு நாட்டு தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

சீனா மற்றும் பிரிட்டன் இடையே 100 கோடி வர்த்தகம் மேற்கொள்வது தொடர்பாக இன்று முடிவு செய்யப்படுகிறது.

பிரிட்டனுக்கு வருகை தந்த சீன பிரதமர் வென்ஜியா பவ் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் இடையே திங்கட்கிழமை சந்திப்பின் போது இந்த வர்த்தக ஒப்பந்த முடிவு எடுக்கப்படுகிறது.

முத்துப்பேட்டை அருகே பயங்கரம் : விவசாயி படுகொலை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் உள்ள இடும்பாவனம் ஊராட்சி மேலவாடியக்காடு பகுதியை சேர்ந்தவர் சிவசுப்ரமணியன் (47). இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டுக்காரர் பரமசிவம்(24). சிவசுப்ரமணியன்& பரமசிவத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்றும் நாளையும் "ஹால் டிக்கெட்' விநியோஹம்!

சென்னை : மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கப்படும்.

இது குறித்து அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் ரேவதி ருக்மாங்கதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சித்த, ஆயுர்வேத படிப்புகளுக்கு விரைவில் விண்ணப்பம்

சென்னை : சித்த மருத்துவம்-ஆயுர்வேதம்-யுனானி மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை பட்டப் படிப்புகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களைச் சேர்க்க விண்ணப்பங்கள் விரைவில் விநியோகிக்கப்பட உள்ளன.

சென்னை அரும்பாக்கம், பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், நாகர்கோவிலில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, மதுரை திருமங்கலத்தில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

சிங்கூரில் விவசாயிகளுக்கு மாற்று இடம்: அரசு நடவடிக்கை

சிங்கூர் : மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடா கார் நிறுவனத்துக்காக கட்டாயப்படுத்தி நிலம் பறிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாற்று இடம் வழங்க மம்தா பானர்ஜி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


மாற்று இடம் பெற்றுக்கொள்ள விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் சிங்கூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் விநியோகிக்கப்படுவதாக ஹூக்ளி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீபிரியா ரங்கராஜன் தெரிவித்தார்.

டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணென்ணெய் விலை உயர்வை மத்திய அரசு உடனே திரும்பப் பெறவேண்டும் – SDPI ன் மாநிலத்தலைவர் வலியுறுத்தல்

SDPI-ன் மாநிலத்தலைவர் KKSM தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : மத்திய அரசு சமையல் எரிவாயு, டீசல், மண்ணென்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது அத்தியாவசிய பொருள்களின்விலையை பன்மடங்கு அதிகரிப்பதற்கு காரணமாக அமையும்.

உ. பி. யில் தொடரும் பெண்களுக்கு எதிராக வன்கொடுமை!

உத்தரபிரதேசத்தில் இளம் பெண்கள், சிறுமிகள் கற்பழிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், இன்றும் 3 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டனர்.


ஜான்சி நகரில் திருமண விழாவுக்கு சென்று விட்டு திரும்பிய 14-வயது சிறுமியை 4 வாலிபர்கள் கடத்திச் சென்று கற்பழித்தனர். அவர்களில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபோல, கன்சிராம் நகர் மாவட்டம் பதேபுர் கலா கிராமத்தை சேர்ந்த 11 வயது தலித் சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் கற்பழித்து விட்டான்.

காஸ்ஸாவுக்கு செல்லும் நிவாரணக்குழுவில் பிரான்சு கப்பல்

பாரிஸ்:காஸ்ஸாவுக்கு நிவாரணப்பொருட்களுடன் புறப்படவிருக்கும் குழுவில் பிரான்சு நாட்டு கப்பலும் இணைகிறது.ஆறுபேரைக்கொண்ட சிறிய கப்பல் காஸ்ஸா உதவுக்குழுவுடன் இணைவதற்காக கோர்ஸிகா துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டிற்குள் அனைத்து அணு மின் நிலையங்களையும் மூட ஜேர்மனி முடிவு

ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு பரவியதை தொடர்ந்து ஜேர்மனியில் உள்ள அனைத்து அணு மின் நிலையங்களையும் 2022ம் ஆண்டில் மூடி விட ஏங்கலா மார்கெலின் ஜேர்மனி அரசு முடிவு செய்தது.

அணு உலைகளை முன்னதாக மூட வேண்டும் என கிறீன் கட்சி முதலில் வலியுறுத்தியது. தற்போது அரசின் முடிவை ஏற்பதாக அக்கட்சி சனிக்கிழமை தெரிவித்தது.

சிரியாவில் கடும் போராட்டம்: லெபனானுக்கு ஓடும் மக்கள்

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது அரசு படைகள் தாக்குதல் நடத்தியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.


சிரியாவில் அதிபர் பஷார் ஆசாத்தை பதவி விலகக் கோரி அதிருப்தியாளர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.