Monday, 27 June 2011

மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்றும் நாளையும் "ஹால் டிக்கெட்' விநியோஹம்!

சென்னை : மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கப்படும்.

இது குறித்து அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் ரேவதி ருக்மாங்கதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஏப்ரல் 2011 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பத்தாம் வகுப்பு தேர்வெழுதி, ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வியுற்ற தேர்வர்களுக்கான சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 29-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

பள்ளி மாணவர்கள்... மார்ச் 2011-ம் ஆண்டில் பள்ளி மாணவர்களாகத் தேர்வெழுதி தோல்வியுற்ற மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளியிலேயே தேர்வுக்கூட அனுமதிச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள்... மார்ச் 2010-ம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் தனித்தேர்வர்களாகத் தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள், அந்தந்த கல்வி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

மெட்ரிக் தேர்வர்களுக்கான மையங்கள்: கல்வி மாவட்டம்-மையம்: செங்கல்பட்டு- செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லாவரம்.

காஞ்சிபுரம்-டபிள்யு. டி.எம். மேல்நிலைப்பள்ளி, வாலாஜாபாத்

பொன்னேரி-வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முகப்பேர் கிழக்கு.

திருவள்ளூர்- ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்.

தென் சென்னை- வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அசோக்நகர், சென்னை- 83.

மத்திய சென்னை- பெசன்ட் தியோசபிக்கல் உயர்நிலைப்பள்ளி, சென்னை-15.

கிழக்கு சென்னை- மியாசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை-67.

வடசென்னை- வள்ளியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அண்ணாநகர், சென்னை-108.

ஆங்கிலோ இந்தியன் தேர்வர்கள் கிரைஸ்ட் சர்ச் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, அண்ணாசாலை, சென்னை-2-ல் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

சான்றிதழ் பெற.. தேர்வு முடிவு வெளியானவுடன் மதிப்பெண் சான்றிதழைப் பெறுவதற்கு, சுய விலாசமிட்டு, ரூ. 30 மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டப்பட்ட உறையை தேர்வு எழுதும் முதல் நாளில் தேர்வுக்கூட தலைமைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். 

No comments:

Post a Comment