Monday, 27 June 2011

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு

கடந்த 1980க்குப் பின் உலகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரு மடங்காக அதாவது 34.7 கோடியாக அதிகரித்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.



உலக சுகாதார நிறுவனம், அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர் குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தின.

இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் மஜீத் எஸ்ஸாடி தலைமையில் நடந்த இவ்வாய்வில் தெரியவந்துள்ளதாவது: கடந்த 1980ம் ஆண்டுகளில் வயது வந்தவர்களில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 கோடியே 30 லட்சமாக இருந்தது. 2009ல் இந்த எண்ணிக்கை 28 கோடியே 50 லட்சமாக உயர்ந்தது.

தற்போது இது 34 கோடியே 70 லட்சமாக அதிகரித்துள்ளது. இவர்களில் 13 கோடியே 80 லட்சம் பேர் இந்தியா மற்றும் சீனாவில் வசிப்பவர்கள். மூன்று கோடியே 60 லட்சம் பேர் ரஷ்யாவில் உள்ளனர். வளர்ந்த நாடுகளில் அமெரிக்காவில் தான் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. மேற்கு ஐரோப்பாவில் மிகக் குறைவாக உள்ளது.

உலகின் ஒவ்வொரு பகுதியில் உள்ளவர்களையும் நீரிழிவு நோய் பாதிப்பது பொதுவானதாக உள்ளது. அதற்கு காரணம் இந்த நோய் வராமல் தடுக்க முடியாது என்பதே ஆகும்.

No comments:

Post a Comment