Monday 27 June 2011

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் 450 ராக்கெட் வீசித் தாக்குதல்: கர்சாய் குற்றச்சாட்டு

கடந்த மூன்று வாரத்தில் மட்டும் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் 450 ராக்கெட் தாக்குதலை நடத்தி உள்ளது என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் குற்றம் சாட்டினார்.


அருகாமை பகுதியில் உள்ள பாகிஸ்தானின் பயங்கர தாக்குதலால் 12 சிறுவர்கள் உள்பட 36 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள குனார் மற்றும் நான்கரார் மாகாணங்களில் இருந்து நேட்டோ படைகள் வாபஸ் ஆகி உள்ளன. அந்த இடங்களை நோக்கி பாகிஸ்தான் ராக்கெட் தாக்குதலை நடத்துவதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

ஆப்கானிஸ்தான் எல்லை அதிகாரிகள் கூறுகையில்,"பாகிஸ்தானிய தலிபான்கள் மேற்குறிப்பிட்ட மாகாணங்களில் ஊடுருவி உள்ளனர்" என்றும் தெரிவித்தனர்.

சனிக்கிழமை ஈரான் தலைநகர் டெகரானில் பிராந்திய தீவிரவாத எதிர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் ராக்கெட் தாக்குதல் குறித்து அந்த நாட்டின் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரியிடம் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி கர்சாய் கேள்வி எழுப்பினார்.

ஆப்கானிஸ்தான் மீது நடத்தும் தாக்குதலை உடனடியாக பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்றும் கர்சாய் வலியுறுத்தினார். பாகிஸ்தான் தாக்குதல் குறித்து ஆப்கன் நேட்டோ கமாண்டரிடம் கர்சாய் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
பாகிஸ்தான் தாக்குதலால் ஆப்கன் எல்லை பகுதியில் வசித்த 2 ஆயிரம் குடும்பங்கள் தங்கள் குடியிருப்பை விட்டு தப்பி ஓடி உள்ளனர் என ஆப்கன் அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment