Saturday, 4 June 2011

காவித் தீவிரவாதத்திலிருந்து திசை திருப்பவே 5 ஸ்டார் சத்தியாகிரகம் : திக்விஜய் சிங்!

POPULAR FRONT - MUTHUPET
பாபா ராம்தேவ் மீதான தாக்குதலை அதிகப்படுத்தியுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், யோகா குரு பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது 5 நட்சத்திர சத்தியாகிரகம் போல் உள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காவித் தீவிரவாதத்தில் இருந்து மக்களின் கவனத்தை திருப்ப, ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பி ஆதரவுடன் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் என்பது தற்போது தெளிவாகியுள்ளது என்று திக் விஜய் சிங் கூறினார்.


யூதத் தலைநகர் குறித்து இஸ்லாமிய – கிறிஸ்தவ கமிஷன் எச்சரிக்கை

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை, ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரைத் தன்னுடைய நிரந்தரத் தலைநகராக மாற்றியமைக்கும் முயற்சிகளில் மிக வேகமாக ஈடுபட்டு வருகின்றது என இஸ்லாமிய – கிறிஸ்தவ கமிஷன் (ICC) எச்சரிக்கை விடுத்துள்ளது.



இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ அமெரிக்கக் காங்கிரஸில் உரை நிகழ்த்தியபோது, 'இஸ்ரேல் தன்னுடைய தற்போதைய ஆள்புலத்தை 1967 ஆம் ஆண்டு எல்லைகளை நோக்கி ஒருபோதும் சுருக்கிக்கொள்ளப் போவதில்லை என்றும், இஸ்ரேலின் நிரந்தரத் தலைநகராக ஒருங்கிணைக்கப்பட்ட ஜெரூசலமே அமைதல் வேண்டும் எனத் தான் விரும்புவதாக'வும் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாராசிங் போலி என்கவுண்டர்:குற்றப்பத்திரிகையில் முன்னாள் பா.ஜ.க அமைச்சர் பெயர்

ஜெய்ப்பூர்: தாராசிங் போலி என்கவுண்டர் வழக்கில் சி.பி.ஐ சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் மூத்த பா.ஜ.க தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர ராத்தோர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.இவர் வசுந்தர ராஜே அமைச்சரவையில் பாராளுமன்ற விவகார அமைச்சராக பதவி வகித்தார்.



ஜெய்ப்பூரில் சாராய மாஃபியா கும்பலைச்சார்ந்த குண்டரான தாராசிங் கடந்த 2006-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போலீசாருடன் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டார். பின்னர் தாராசிங்கின் உறவினர்கள் என்கவுண்டர் போலியானது

என புகார் அளித்தனர்.உறவினர்களின் கோரிக்கையை ஏற்று 2010 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் சி.பி.ஐ யிடம் வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தது. இவ்வழக்கில் தொடர்புடைய நான்கு போலீஸ்காரர்களை சி.பி.ஐ

முன்னர் கைதுச்செய்திருந்தது.

வெற்றி பெறுவதற்கு...




1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறை களில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.

5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

போர்க்குற்றவாளி மிளாடிச் நீதிமன்றத்தில் ஆஜர்

ஹேக்:போஸ்னியாவில் அப்பாவி முஸ்லிகளை கூட்டுப்படுகொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் போஸ்னியன் செர்ப் ராணுவ தலைவன் ராத்கோ மிளாடிச் நேற்று ஐ.நா சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.



தான் ஒரு நோயாளி எனக்கூறிய மிளாடிச், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை புரிந்துகொள்ள கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு நீதிபதி அல்போன்ஸ் ஓரியிடம் கோரிக்கை விடுத்தான். ’எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் வாசிக்க தேவையில்லை. குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக புகார் அளிக்கும் எண்ணமும் இல்லை. நான் எனது மக்கள் மற்றும் நாட்டை பாதுகாத்துள்ளேன்’ என மிளாடிச் தெரிவித்தான்.

ரூ. 5.6 லட்சம் கோடி செலவில் 16 அணு உலைகளைக் கட்டும் செளதி அரேபியா

ரியாத்: பெருகி வரும் மின் தேவையை சமாளிக்க 16 அணு மின் நிலையங்களை அமைக்க செளதி அரேபியா திட்டமிட்டுள்ளது.

பெட்ரோலிய ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடான செளதி இப்போது பெட்ரோலி கச்சா எண்ணெய்யை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் மூலமே தனது மின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

ஆனால், மின்சாரத்தில் தேவை மிக மிக அதிகமாகி வருவதாலும், எதிர்காலத்தில் கச்சா எண்ணெய்யின் விலை மிக மிக அதிகமாக இருக்கும் என்றும் கருதும் செளதி, அந்த எண்ணெய்யை ஏற்றுமதி செய்யாமல் அதை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்வது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என்று கருதுகிறது.

எச்.ஐ.வி பாதிப்பு: இந்தியாவுக்கு பத்தாவது இடம்

வளரும் தலைமுறையினரில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் தினமும் எய்ட்ஸ் நோய்க்கு தாக்குதலுக்கு உள்ளாவதாக ஐ.நா சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 10 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறையினரில் பெண்கள் சுமார் 46 ஆயிரமும், ஆண்களில் சுமார் 49 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லிபிய தலைநகரில் அமெரிக்கப் படைகள் தொடர் குண்டு மழை: 40 பேர் பலி

லிபியா அதிபர் கடாபி பதவி விலக வேண்டும் என்று வற்புறுத்தி அந்த நாட்டு பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களை கடாபி ராணுவம் ஒடுக்கி வருகிறது. இதனால் அமெரிக்க கூட்டு படைகள் லிபியா மீது போர் தொடுத்துள்ளன.



தினமும் விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று இரவு அமெரிக்க கூட்டுப்படை விமானங்கள் திரிபோலி நகரில் அடுத்தடுத்து குண்டு வீசி தாக்கின. ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் யின் களவு காதலன்!!


 நம்நாட்டில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்.

ஒரு கால் நொண்டி ரெண்டு கால் நொண்டியை பார்த்து நொண்டி என்றானாம்.
இது எப்படி இருக்கு? இந்த கூத்துதான் இப்ப நம்ம நாட்டில் நடந்துகொண்டிருகிறது.

ஏற்கனவே ஒரு காந்தியவாதி ஊழலுக்கு எதிராக களத்திற்கு வந்தார் அவரை பற்றிய வண்டவாளங்கள் வெளிவந்த உடன் ஹிந்து பாசிஸ்டுகள் தங்களது நேரடி ஆதரவாளரை களத்திற்கு கொண்டு வருகிறார்கள்.

இவராவது நல்லவராக இருப்பாரா? என்று எண்ணு வதற்கு முன்பே இதோ வெளி வந்து வந்து விட்டது இந்த பாவப்பட்ட கோடீஸ்வரனின் ஜகஜால வண்டவாளங்கள் இதோ!

அதிபர் மாளிகை மீது குண்டு வீசித் தாக்குதல்


ஏமன் அதிபர் மாளிகை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அலி அப்துல்லா சலேத் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை அதிபர் ஆதரவு படையினருக்கும் பழங்குடியினர் அமைப்பைச் சேர்ந்த குழுவினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் அதிபர் மாளிகை மீது திடீரென குண்டுகள் வீசப்பட்டன.


இதில் அலி அப்துல்லா சலேத் உயிரிழந்து விட்டதாக எதிர்க்கட்சியினரால் நடத்தப்படும் தொலைக்காட்சி ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டது.