Monday, 4 July 2011


முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்; மு.க.வுக்கும் இது புரியும்! 

 நன்றி: முகவை ஹிதாயத்

“இஸ்லாத்தை அறிவோம்”-பஹ்ரைனில் சிறப்புடன் நடைபெற்ற சமூக கருத்தரங்கம்

BAHRAIN INDIA FRATERNITY FORUM  (BIFF) ஏற்பாடு செய்திருந்த  என்ற இஸ்லாமிய சமூக நிகழ்ச்சி கடந்த 01.07.11 வெள்ளியன்று மனாமா செண்டரில் பொலிவுடன் நடைபெற்றது. சரியாக மாலை 7 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. ஆரம்பமாக அருள்மறை வசனங்களை ஓதினார் சகோ. சாலிம் அவர்கள். அதன் பின்னர் சகோ. அப்துல் சத்தார் அவர்கள் அனைவரையும் வரவேற்று, அறிமுகவுரை ஆற்றினார். நிகழ்ச்சியை சகோ .அப்துல் மஜீத் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

தனி தெலுங்கானா :10 எம் பிக்கள் மற்றும் 79 எம்எல்ஏக்கள் ராஜினாமா - ஆந்திராவில் நெருக்கடி

ஹைதராபாத்: தனி தெலுங்கானா மாநிலம் கோரி இன்று காங்கிரஸ் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள், அமைச்சர்கள் சொன்னபடி தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அதேபோல தெலுங்கு தேசம், அதிருப்தி தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் ராஜினாமா செய்ததால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதீபா பாட்டீல் மேஜையில் நிலுவையில் 17 கருணை மனுக்கள்

டெல்லி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் மேஜையில் 17 மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் சிக்கியவர்கள்.

சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்ட விவரத்திற்கு குடியரசுத் தலைவர் அலுவலகம் அளித்த பதில் வருமாறு,

UAE - விசிட் விசாவில் வருபவர்களுக்கு இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடு

இந்தியாவிலிருந்து UAE நாட்டிற்கு பார்வையாளர் (VISITOR) விசாவில் வருபவர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விசா அனுப்பும் நபர் துபாயிலுள்ள இந்திய தூதரகத்தில் படிவம் SD-V(5) - SPONSOR'S DECLARATION FORM ஐ பூர்த்தி செய்து, விசா ஏற்பாடு செய்தவருடைய (Sponsor) கடவுச்சீட்டு (PASSPORT) மற்றும் சம்பள விபரம் (PAY SLIP) நகலையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவர் விடுதிகளில் சேர அழைப்பு

திருவாரூர், ஜூலை 3: திருவாரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத் துறை சார்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் ச. முனியநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.    

கருப்புப் பண விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது சுப்ரீம் கோர்ட்

டெல்லி: கருப்புப் பண விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டுள்ளது.

சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்கள் 26 பேர்களின் கறுப்புப் பணம் பற்றிய விவரத்தை அறிவிக்க வேண்டும் என்று கோரி, உச்சநீதிமன்றத்தில் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி வழக்கு தொடர்ந்தார்.

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்-14 ராமேஸ்வரம் மீனவர்களை பிடித்துச் சென்றது

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது. சமீபத்தில்தான் 23 ராமேஸ்வரம் மீனவர்களை கடத்திச் சென்று தமிழகத்தின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து விடுவித்த இலங்கை கடற்படை காடையர்கள், இன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை கடத்திக் கொண்டு போய் விட்டனர்.

மீண்டும் அமைச்சரவை மாற்றம்-சட்ட அமைச்சர் இசக்கி சுப்பையா நீக்கம்-செந்தூர்ப்பாண்டியன் புதிய அமைச்சர்

சென்னை : தமிழக சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா இன்று அதிரடியாக நீக்கப்பட்டார். புதிய அமைச்சராக கடையநல்லூர் எம்.எல்.ஏ. செந்தூர்ப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவையில் 2வது முறையாக இன்று முதல்வர் ஜெயலலிதா மாற்றம் செய்தார்.

பெயரை மாற்றினால் அதிஷ்டம் அடிக்கும்!மூன்று வருடங்களில் ஒரு லட்சம் பேர் பெயரை மாற்ற மனு!!


தமிழ்நாட்டில் அதிர்ஷ்டத்துக்காக பெயரை மாற்றும் ஆர்வம்
பெயரை மாற்றினால் அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற நம்பிக்கையில் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பம் செய்வோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது.

அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லுரி நிர்வாகத்தை கண்டித்து கேம்பஸ் ஃப்ரன்ட் கண்டன பேரணி



சிறுவன் தில்ஷன் படுகொலை-ராணுவ வீரர்களிடம் சிபிசிஐடி டிஐஜி அதிரடி விசாரணை

சென்னை: சிறுவன் தில்ஷன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது.

சென்னை தீவுத் திடல் அருகே உள்ள ராணுவக் குடியிருப்புக்குள் புகுந்து கீழே விழுந்து கிடந்த பாதாம் பழங்களை எடுக்க முயன்றான் தில்ஷன். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தான்.

முஸ்லிம் இனப்படுகொலை ஆவணங்கள்:பல்டியடிக்கும் மோடி அரசு - பொய் கூறுவதாக காங்கிரஸ்

அஹ்மதாபாத் : 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடியின் தலைமையிலான பாசிச ஹிந்துத்துவா பயங்கரவாத வெறியர்கள் முஸ்லிம்களை கொடூரமாக கொன்று குவித்து மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்தினர். இக்காலக்கட்டத்தின் ஆவணங்களை அழித்துவிட்டதாக மாநில அரசின் வழக்கறிஞர் நானாவதி கமிஷன் முன்பு தெரிவித்திருந்தார்.

தாய்லாந்தின் முதல் பெண் பிரதமர்

தாய்லாந்தில் எதிர்க்கட்சியான ப்யூதாய் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதால் இக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமரின் சகோதரியுமான யிங்லக் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

மொத்தமுள்ள 500 இடங்களில் 260 இடங்களை ப்யூதாய் கட்சி கைப்பற்றியுள்ளது. ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு 163 இடங்கள் கிடைத்துள்ளன.

சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சிறையில் அடைப்பு!!

சென்னை, ஜூலை 4-சேலத்தை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் டி.எஸ். செல்வராஜ் இவர் கந்தன் பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-