Thursday 21 July 2011

கள்ளச்சாராய விற்பனை தடுக்கத் தவறிய மதுவிலக்கு பெண் எஸ்.ஐ., "சஸ்பெண்ட்'

திருவாரூர்: திருவாரூரில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறியதாக மதுவிலக்கு அமல் பிரிவு பெண் எஸ்.ஐ.,யை மாவட்ட எஸ்.பி., தினகரன், அதிரடியாக "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார்.

பருப்பு கொள்முதலில் ரூ.700 கோடி ஊழல் : ஒடிசா ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்

கட்டாக் : ஒடிசாவில் சத்துணவு திட்டத்துக்காக பருப்பு கொள்முதல் செய்ததில், நடந்த ஊழல் குறித்து மாநில ஊழல் கண்காணிப்பு இயக்குனரகம், ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பேஸ்புக்கை கூகிள் பிளஸ் மூலம் அப்டேட் செய்வது எப்படி?


கூகிள் பிளஸை பயன்படுத்த தொடங்கியவர்கள் அதிலிருந்தே பேஸ்புக் ஸ்டேட்டஸையும் அப்டேட்
செய்வது எப்படி என்பது பற்றி பார்க்கலாம்.

சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுக்களின் திடீர் கண்ணிவெடித் தாக்குதல் - 8 காங்கிரஸார் பலி


சட்டீஸ்கரில் மாவோஜிஸ்டுக்களின் கண்ணிவெடி தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 8 காங்கிரஸ் தொண்டர்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமச்சீர் கல்வி: ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: தமிழக அரசின் மேல்முறையீடு நிராகரிப்பு

சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், ஆகஸ்டு 2ம் தேதிக்குள் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகங்களை வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக திங்கள்கிழமை அளித்த தீர்ப்பில், அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்தக் கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மேலும் வரும் 22ம் தேதிக்குள் மாணவர் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

ஈரானில் உளவு பார்த்த அமெரிக்க விமானம் தகர்ப்பு

ஈரானில் பறந்த ஆளில்லா அமெரிக்க உளவு விமானத்தை அந்நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படையினர் தாக்கி அழித்ததாக அந்நாட்டிற்கான இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு அரசின் இணையதளத்தில் ஈரான் அரசியல்வாதியான அலி அகாசாடே கூறியதாக செய்தி வெளியானது.

எகிப்தில் மூன்று கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடத்த முடிவு

எகிப்து நாட்டில் மூன்று கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதாக அந்நாட்டு ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு பார்வையாள்களுக்கும் அனுமதியளித்துள்ளது. மத்திய கிழக்கு நாடான எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு(83) எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

தாய்லாந்து - கம்போடியா எல்லையில் தாய்லாந்து ராணுவம் உடனடியாக வாபஸ் பெற வேண்டும்: சர்வதேச நீதிமன்றம்

தாய்லாந்து, கம்போடியா எல்லையில் சிவன் கோவிலைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினரை வாபஸ் பெற போதிய அவகாசம் வேண்டும் என்று தாய்லாந்து பிரதமர் அபிசிட் வெஜ்ஜாஜிவா கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அபராதம்

இங்கிலாந்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா லண்டன் சென்றார். அப்போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் வாகனம் செல்வதற்கு விதிக்கப்படும் கன்ஜெக்சன் கட்டணத்தை செலுத்த அமெரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்கள் விடுதலை ஆகிறார்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ள ஷார்ஜா நகரில் வேலை பார்த்த மஸ்ரிகான் என்ற பாகிஸ்தான் நாட்டுக்காரரை அவருடன் வசித்த 17 இந்தியர்கள் கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் கொலை செய்தனர். கள்ளச் சாராய விற்பனை தொடர்பாக அவர் கொலை செய்யப்படடார். 

முன்னாள் எம்.எல்.ஏ., அசன்அலி வீட்டில் கொள்ளை

ராமநாதபுரத்தை அடுத்துள்ள கீழக்கரையில் மேலத்தெருவில் முன்னாள் எம்.எல்.ஏ. அசன் அலி குடியிருக்கிறார்.

இவர் தற்போது வெளிநாடு சென்றுள்ளார். இவரது வீட்டின் அருகே சென்னை தொழில் அதிபர் இஸ்மாயில் வீடு உள்ளது.

சீனாவில் 2 துணை மேயர்களுக்கு மரண தண்டனை

பெய்ஜிங் : சீனாவில் லஞ்ச ஊழலில் சிக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று 2 அதிகாரிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தமிழகம் சுயநிதி எம்.பி.பி.எஸ் : 182 முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு தலா ரூ.1.25 லட்சம் சலுகை

சென்னை : தமிழகத்தில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் கடந்த கல்வி ஆண்டில் (2010-11) அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த 182 முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு தலா ரூ.1.25 லட்சம் திரும்பக் கிடைக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  

கர்நாடகா : லோக்ஆயுக்தா மூலம் வெளிச்சத்திற்கு வந்த ஊழல் மன்னர்கள் எடியூரப்பா, குமாரசாமி

பெங்களுரூ: கர்நாடாக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா, அவரது அமைச்சர்கள் ஆகி‌யோர் சட்டவிரோத சுரங்க மோசடியில் ஈடுபட்டதுடன், மிகப்பெரிய அளவில் சுரங்க ஊழல் நடந்திருப்பதை அம்மாநில லோக் ஆயுக்தா அம்பலப்படுத்தியுள்ளது.

நில ஒதுக்கீட்டில் முறைகேடு: நிதிஷ் குமார் ஆட்சிக்கு சிக்கல் எதிர்ப்பு அலை ஓங்குகிறது

பீகாரில், அமைச்சர்களின் உறவினர்கள் சிலருக்கு முறைகேடாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து, முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

மக்கள் நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2வது இடம்

இந்தியாவின் மக்கள் தொகை நெரிசல் மிகுந்த நகரப்பட்டியலில் சென்னை மாநகர் 2வது இடத்தில் உள்ளது.
புதிதாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின்படி தமிழ்நாட்டில் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958. இதில் கிராமப்புறங்களில் 3 கோடியே 7 லட்சத்து 19 ஆயிரம் பேரும், நகர்ப் புறங்களில் 3 கோடியே 4 லட்சத்து 35 ஆயிரம் பேரும் உள்ளனர்.

உஸ்பெகிஸ்தான் - கிரிகிஸ்தான் இடையில் நிலநடுக்கம் - இதுவரை 13 பேர் பலி

மத்திய ஆசியாவின் உஸ்பெகிஸ்தான் - கிர்கிஸ்த்தான் நாடுகளுக்கு இடையிலான எல்லை பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 13 பேர் பலியாகியிருப்பது உறுதியாகியுள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தி : முதலிடத்த்தில் வெனிசுலா

லண்டன் : கச்சா எண்ணெய் உற்பத்தியில் இந்தாண்டு முதல் இடத்தினை வெனிசுலா பெற்றிருப்பதாக, கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் என்ற ஓபெக் அமைப்பு தனது வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காரக்கால் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் கடந்த ஒரு வருட பணிகள்

அன்பார்ந்த வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்!

அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக‌ சேவைகள் நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருப்பது தாங்கள் அறிந்த ஒன்றே. ஒவ்வொரு வருடம் நமது பணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கிறது என்பதை தாங்கள் அறிவீர்கள். சமூகத்தின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும், சுதந்திரமும், நீதியும், பாதுகாப்பும் அனைத்து இந்திய மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற உயர்ந்த அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்பட்டு வருகிறது.

முஸ்லிம்களின் இடஒதுக்கீடு தொடர்பாக சிறுபான்மை துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் பாப்புலர் ஃப்ரண்ட்

முஸ்லிம் சமுதாயத்தின் நியாயமான பிரச்சனையான இட ஒதுக்கீடு கோரிக்கைகளை தீர்க்கும் வகையில் சிறுபான்மை துறை அமைச்சர் சல்வாம் குர்ஷித் அவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

இஷ்ரத் ஜஹான்:எஸ்.ஐ.டிக்கு நான்காவது தலைவராக ராஜீவ் ரஞ்சன் வர்மா நியமனம்

அஹ்மதாபாத்:இஷ்ரத் ஜஹான் உள்பட நான்குபேர் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழுவிற்கு(எஸ்.ஐ.டி) நான்காவது தலைவராக ஐ.பி.எஸ் அதிகாரி ராஜீவ் ரஞ்சன் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வழக்கில் ஒரே வருடத்தில் நான்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோமாலிய நாட்டில் கடும் வறட்சி நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையாக வறட்சி நிலவுகிறது. குறிப்பாக சோமாலியாவில் பஞ்சம் அதிகமாக காணப்படுகிறது.

இதனால் சோமாலியா மக்கள் உயிர் பிழைக்க கென்யா, எத்தியோப்பியா அகதிகள் முகாம்களுக்கு வருகிறார்கள்.

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சி.பி.ஐ விசாரணை தேவை: SDPI வேண்டுகோள்

புதுடெல்லி: மும்பை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பான விசாரணையின் போது போலீஸ் கஸ்டடியில் மரணமடைந்த ஃபயாஸ் உஸ்மானியின் மரணத்தைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும்,

மங்களூர் விமான விபத்து: தலா ரூ 75 லட்சம் இழப்பீடு-உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் : கடந்த ஆண்டு மங்களூர் விமான விபத்தில் உயிரிழந்த 160 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ 75 லட்சம் இழப்பீடு வழங்குமாறும், இந்த இழப்பீட்டை ஒரு ஆண்டுக்குள் அக்குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்றும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.