Thursday 21 July 2011

கள்ளச்சாராய விற்பனை தடுக்கத் தவறிய மதுவிலக்கு பெண் எஸ்.ஐ., "சஸ்பெண்ட்'

திருவாரூர்: திருவாரூரில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறியதாக மதுவிலக்கு அமல் பிரிவு பெண் எஸ்.ஐ.,யை மாவட்ட எஸ்.பி., தினகரன், அதிரடியாக "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார்.


திருவாரூர் மாவட்ட எஸ்.பி., தினகரன் கூறியதாவது: திருவாரூர் மாவட்ட எஸ்.பி.,யாக கடந்த மாதம் 20ம் தேதி பொறுப்பேற்றேன். அன்று முதல் கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜூலை 19ம் தேதி வரை ஒரு மாத காலத்தில் 272 கள்ளச்சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 ஆயிரத்து 735 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளில் 20 பெண்கள் உள்பட 275 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கள்ளச்சாராயம் கடத்தியது தொடர்பாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8 இருச்சக்கர வாகனங்கள், ஒரு நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சாராய வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 26 வாகனங்கள் ஏலம் விடப்பட்டு அரசுக்கு ஆதாயம் சேர்க்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்ட போலீஸார் எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் இடமின்றி கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று சாராய வியாபாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறிய திருவாரூர் மதுவிலக்கு அமல் பிரிவு எஸ்.ஐ., சந்தானமேரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதுபோன்று செயல்களில் ஈடுபடும் போலீஸார் யாராக இருந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment