Friday 6 September 2013

முத்துப்பேட்டை: தொடரும் காவல்துறையின் முஸ்லிம் விரோதபோக்கு! அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து கைது செய்ய முயற்சி முறியடிப்பு!

சமீப காலமாக வீண் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துவது முத்துப்பேட்டை காவல் துறையின் நோக்கமாகவுள்ளது. அந்தவகையில் நேற்று இரவு எடையூர் இன்ஸ்பெக்டர் சாமிநாதன்  தலைமையில், முன்னாள் எஸ்.ஐ. பால்ராஜ் உட்பட காவல் துறையினர்  பாப்புலர் ஃப்ரன்ட்  ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அ. அபூபக்கர் சித்திக் அவர்களின் வீட்டில் அத்துமீறி நுழைந்து கைது செய்ய முயற்சி செய்துள்ளனர்.


பெருநாள் அன்று நடைபெற்ற கலவரத்திற்காக அபூபக்கர் சித்திக் மீது இரண்டு வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதனை காரணம் காட்டி கைது செய்ய போவதாக இந்த அத்துமீறலை அரங்கேற்றியுள்ளனர். ஆனால் ஏற்கனவே எல்லா வழக்குகளுக்கும் முறையாக முன்ஜாமீன் பெற்றுள்ளார். இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருவாரூர் மாவட்ட பொது செயலாளர் அவர்கள் காவல்துறைக்கு தெரியபடுதியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் முன்ஜாமீன் பெற்றவுடன் அதனுடைய நகலை சம்பந்தபட்டவருக்கும், காவல்நிலையத்துக்கும் அனுப்பிவைக்கப்படும். இந்த முன்ஜாமீன் நகல் கடந்த 29ம் தேதியே கிடைத்துள்ளது. இருந்தபோதிலும் இதை அனைத்தையும் மூடி மறைத்து முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து மக்களுக்கு மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அதோடல்லாமல், முத்துப்பேட்டை கலவரத்தில் அப்துல் மாலிக் அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பி.ஜே.பி யை சேர்ந்த முருகானந்தம்(கருப்பு), பேட்டை சிவா, குமாரவேல், மாரிமுத்து, மகேஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் முன்ஜாமீன் கூட எடுக்காமல் அனைவரும் போலீஸ் பாதுகாப்புடம் காவல் நலையத்தை சுற்றி வலம் வருகின்றனர். முஸ்லிம்களுக்கு ஒரு நீதி? ஃபாசிசவாதிகளுக்கு ஒரு நீதியா?

சற்று நேரத்தில் செய்தியை அறிந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அபூபக்கர் சித்திக் அவர்களின் வீட்டின் முன்பு கூடினர். இதனை சற்றும் எதிர்பாராத காவல்துறை செய்வதறியாது திகைத்து நின்றனர். கூடி இருந்த மக்கள் அபூபக்கர் சித்திக் அவர்களுக்கு ஆதரவாக கோசங்களை எழுப்பினர்.

இந்த நேரத்தில் வழக்கறிஞர் நிஜாம் அவர்கள் வந்து காவல் துறையை நோக்கி கேள்விபடலத்தை தொடுத்தார். எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் தடுமாறிய காவல்துறையிடமிருந்து "சாரி சார்" என்று மட்டுமே பதிலாக வந்தது.

முன்னாள் எஸ்.ஐ. பால்ராஜ் தொடர்ந்து முஸ்லிம் விரோத போக்கை கையாண்டு வருகிறார் என்பது ஊர் மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. பால்ராஜை பணி நீக்கம் செய்யவேண்டும் என்று  கூடி இருந்த மக்கள் கோரிக்கை வைத்தனர். 

முஸ்லிம் விரோத போக்குடன் செயல்படும்  பால்ராஜை இடமாற்றம் செய்யவலியுறித்தி கடந்த வாரம் நடந்த அமைதி பேச்சிவார்த்தையை முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாத்தினர் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக எதுவும் செய்ய இயலாமல் நின்ற காவல்துறையினர் நடையைகட்டினர். அவர்களுடன் வழக்கறிஞர் அணி காவல் நிலையம் சென்று விளக்கங்களை கேட்டு வந்தனர். 







No comments:

Post a Comment