Monday, 15 August 2011

முஸ்லிம்களின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை...


INDIAN-MUSLIM 1
சுதந்திர தினத்தன்று தமிழகத்தின் தென்மாவட்டமான நெல்லையின் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மேலப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவிருந்த அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
முந்தைய ஆட்சியின் போதும் கடந்த 3 ஆண்டுகளாக பொதுவான இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உள் அரங்கு மைதானங்களில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. தமிழகத்தை ஆளும் அரசுகளின் இத்தகைய அராஜக போக்கு இந்திய அரசியல் சட்டம் உறுதி அளிக்கும் குடிமக்கள் உரிமைகள் குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது.

சுதந்திர தினத்தை கொண்டாட அனுமதி மறுப்பு... தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன் ஆர்ப்பாட்டம்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர அணிவகுப்பை தடை செய்ததை கண்டித்து காவல் துறை மற்றும் தமிழக அரசின் இந்த உரிமை மீறலையும் ,சிறுபான்மை விரோத போக்கை கண்டிக்கும் வகையில் வருகின்ற 17.08.2011 அன்று மாலை 4 மணி முதல் 6 மணி நெல்லைமேலப்பாளையம் சந்தை முக்கில் வைத்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்த தீர்மானிதுள்ளோம் .சுதந்திரம் நமது பிறப்புரிமை ;

அதை எவர் தடுத்தாலும் விட மாட்டோம் என்ற செய்தியை உலகிற்கு பறை சாற்ற ,முஸ்லிம்களின் கண்ணியத்தை பாதுகாக்க ,முஸ்லிம்களின் உரிமையை பறை சாற்ற,முஸ்லிம்களின் கண்ணியத்தை பாதுகாக்க ,முஸ்லிம்களின் உரிமையை நிலை நாட்ட நடைபெறும் இந்த போராட்டத்தில் அணி அணியாய் கலந்து கொண்டு நமது கண்டனத்தை பதிவு செய்ய அலை கடலென ஆர்பரித்து வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்