Tuesday 17 September 2013

8 மாவட்ட காவல்துறையின் உச்சக்கட்ட பாதுகாப்பில் முத்துப்பேட்டை! -இது தேவையா?

முத்துப்பேட்டையில் இன்று விநாயகர் ஊர்வலம் நடைபெறுவதையொட்டி, திருவாரூர், நாகை, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், புதுகோட்டை, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களின் காவல்துறையின் உச்சக்கட்ட பாதுகாப்பில் இருக்கின்றது மற்றும்  ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனமும் இன்று முத்துப்பேட்டையை நோக்கி இருக்கின்றது.

"புனையப்பட்ட வழக்குகள், புதைக்கப்ட்ட வாழ்வுகள்" : கோவையில் நடந்த புத்தக வெளியீடு

கோவை : "அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்" என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை நடத்த இருக்கும் தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கோவையில் நடந்த துவக்க பொதுக்கூட்டத்தில் "புனையப்ட்ட வழக்குகள், புதைக்கப்ட்ட வாழ்வுகள்" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? கோவையில் எழுச்சியுடன் நடைபெற்ற துவக்க பொதுக்கூட்டம்!

கோவை :  "அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்" என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக  தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6  வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் நடைபெறுகிறது. தொடர் பிரச்சாரத்தின் துவக்க தினமான  செப்டம்பர் 15 அன்று கோவையில் மாபெரும் துவக்க பொதுக்கூட்டமும், நிறைவு தினமான அக்டோபர் 6 அன்று சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு இடங்களில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெறும்.