Wednesday 15 June 2011

பலஸ்தீன் விளைநிலங்களுக்குத் தீமூட்டும் இஸ்ரேலிய அராஜகம்

ரமல்லாவில் உள்ள இஸ்ரேலிய பிரிவினைச் சுவரை அடுத்திருக்கும் பலஸ்தீன் விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்களுக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை எரியூட்டியுள்ளமை அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த திங்கட்கிழமை (13.06.2011) இரவு ஸஃபா எனும் பலஸ்தீன் கிராமத்தில் இந்த அக்கிரமம் அரங்கேறியுள்ளது. நூற்றுக்கணக்கான தூனம் (1 தூனம் = 1000 சதுர அடிகள்) பரப்புள்ள பெரும் நிலப்பரப்பு தீமூட்டப்பட்டதையடுத்து, கிராவாசிகள் தீயை அணைப்பதற்காக முன்வந்தபோது, அவர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் தடுத்துநிறுத்தப்பட்டனர் என்றும், பயிர்நிலம் முற்றாக எரிந்து முடியும்வரை இந்த நிலைமை நீடித்தது என்றும் உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவரின் காஸா விஜயம்

கடந்த திங்கட்கிழமை (13.06.2011) ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ஜெர்ஸி புஸெக் காஸா மக்களின் வாழ்வியல் நிலைமைகளை நேரில் கண்டறியுமுகமாக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.



ஐ.நா.வின் பலஸ்தீன் அகதிகளுக்கான புனர்வாழ்வுப் பணிகள் மையத்தின் கீழ் இயங்கும் செவிப் புலனற்றோர் சங்கத்தையும், காஸாவின் மேற்குப் பகுதியில் தற்போது நிர்மாணிக்கப்பட்டுவரும் பள்ளிக்கூடங்களையும் பார்வையிடுவதற்காக அவரின் விஜயம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு: "தத்கால்' திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

சென்னை,ஜூன் 13: எஸ்.எஸ்.எல்.சி மற்றும் ஓ.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத் தேர்வுக்கு உடனடி அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.


இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:


ஜூன், ஜூலை 2011-ல் நடைபெறவுள்ள இந்தத் தேர்வுக்கு அறிவிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்காமல் இருப்பவர்கள், உடனடி அனுமதி திட்டத்தின் கீழ் ஜூன் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதிகபட்சம் மூன்று பாடங்கள் வரை தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமே இந்த சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஜவாஹிருல்லா கைது வாரண்டு ரத்து

மனித நேய மக்கள் கட்சி தலைவரும், ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா உள்பட 5 பேர் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சி.பி.ஐ. போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.



வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தை முறையான ஆவணங்களை காட்டாமல் பெற்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு எழும்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.


இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது 5 பேரும் ஆஜராக வில்லை.

சமச்சீர்கல்வி – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், விளைவும்!

தமிழக அரசு தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே அமலில் இருக்கும் சமச்சீர் பாடத்திட்டம் தொடரவேண்டும். மற்ற வகுப்புகளுக்கான பாடநூல்களில் பல பிரச்சினைகள் இருப்பதாக தமிழக அரசு கூறியிருப்பதால், அவற்றை ஆராய தமிழக அரசு ஒரு நிபுணர் குழுவை நியமிக்கவேண்டும். அந்த நிபுணர் குழு 3 வாரத்திற்குள் தனது அறிக்கையை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன் மீது சென்னை உயர்நீதி மன்றம் விசாரணை நடத்தி பாடத்திட்டத்தின் மீது இறுதித் தீர்ப்பு சொல்லவேண்டும்.



ரூ.2130 கோடியை இழந்த மாறன் சகோதரர்கள்: ஒரு அதிர்ச்சித் தகவல்

மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் மாறன் சகோதரர்களின் சொத்துக்களில் கிட்டத்தட்ட 2000 கோடி ரூபாயை மாயமாக மறைய வைத்திருக்கின்றது.


அதாவது கடந்த 10 நாட்களுக்குள் அவர்களது சொத்து மதிப்பில் 2000 கோடி ரூபாய் குறைந்திருக்கின்றது. மாறன் சகோதரர்களின் நிகர வர்த்தகச் சொத்து மதிப்பில் முக்கிய பங்கு வகிப்பவை இரண்டு நிறுவனங்கள்.


பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் யார்?

வாஷிங்டன், ஜூன் 15: குஜராத் கலவர விடியோ காட்சிகளால் நான் இந்தியாவுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டேன் என டேவிட் ஹெட்லி சிகாகோ நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.



மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அமெரிக்கவாழ் பாகிஸ்தானியர் டேவிட் ஹெட்லி மீது சிகாகோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.