Wednesday 15 June 2011

ஜவாஹிருல்லா கைது வாரண்டு ரத்து

மனித நேய மக்கள் கட்சி தலைவரும், ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா உள்பட 5 பேர் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சி.பி.ஐ. போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.



வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தை முறையான ஆவணங்களை காட்டாமல் பெற்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு எழும்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.


இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது 5 பேரும் ஆஜராக வில்லை.


இதை தொடர்ந்து மாஜிஸ்திரேட்டு மோகன் தாஸ் 5 பேருக்கும் கைது வாரண்டு பிறப்பித்து உத்தர விட்டார்.


வருகிற 20-ம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராகி வாரண்டை திருப்ப பெற வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.


இந்த நிலையில் ஜவாஹிருல்லா, ஹைதர்அலி உள்பட 5 பேரும் இன்று எழும்பூர் கோர்ட்டில் அஜரானார்கள். இதை தொடர்ந்து அவர்கள் மீதான கைது வாரண்டு ரத்து செய்யப்பட்டது.



No comments:

Post a Comment