Wednesday 19 October 2011

குஜராத் இனப்படுகொலை:அறிக்கையை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தாக்கல் – எஸ்.ஐ.டி


அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் குல்பர்க் ஸொஸைட்டி கூட்டுப் படுகொலை தொடர்பான விசாரணை அறிக்கையை பொருத்தமான மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி) அறிவித்துள்ளது.

இதுத்தொடர்பாக முன்னர் நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸிற்கு பதிலளிக்கையில் விசாரணை அதிகாரி ஹிமான்சு சுக்லா சிறப்பு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி விசாரணை அறிக்கையை பொருத்தமான நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக எஸ்.ஐ.டி தெரிவித்துள்ளது.

இனப்படுகொலை தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணை அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க எஸ்.ஐ.டிக்கு உத்தரவிடக்கோரி இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் சமர்ப்பித்த மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் எஸ்.ஐ.டிக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு அளித்த பதிலில்தான் எஸ்.ஐ.டி இவ்வாறு கூறியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் தனது கிளைகளை ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம்களில் விரிவாக்க


மும்பை:ஆர்.எஸ்.எஸ் கிராமங்களிலும் டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற பெரு நகரங்களிலும் இளைஞர்களை தனது அமைப்புகளில் சேர்க்க புதிய திட்டங்களை வகுத்துள்ளது. இதன் முக்கியப் பகுதியாக ஐ.ஐ.எம் மற்றும் ஐ.ஐ.டி போன்ற தலைசிறந்த கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களை குறிவைத்து திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் ஆர்.எஸ்.எஸ்யின் தேசிய செயற்குழு கோரக்பூரில் கூடியது. அக்கூட்டத்தில் பேசிய சங்க பரிவார தலைவர் மோகன் பகவத் தற்போது உலகில் உள்ள நவீன தொழிற்நுட்ப சவால்களை சந்திக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் புதிய வழிமுறைகளை மேற்கொள்ளாதது குறித்து தாம் கவலை தெரிவிப்பதாகவும் மேலும் சங்க பரிவார அமைப்புகளை தற்போதைய தொழிற்நுட்பத்திற்கு ஏத்த வகையில் உருவாக்க வேண்டும் என்பதில் தாம் ஆர்வமாக உள்ளதாகவும் கூறினார். எனவே ஆர்.எஸ்.எஸ்ஸை தொழிற்நுட்ப ரீதியில் முன்னேற்றும் பொறுப்பை தங்களின் கிளை அமைப்பான சேவா பாரதியிடம் கொடுத்துள்ளதாகவும் கூறினார். மேலும் அவர் அதனுடைய வளர்ச்சி மற்றும் செயல் திட்டங்களை குறித்து கோரக்பூரில் நடந்து கொண்டிருக்கும் கூட்டத்தில் கேட்டு தெரிந்து கொண்டாதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஃபலஸ்தீன் கைதிகளுக்கு விடுதலை – மகிழ்ச்சியில் காஸ்ஸாவும், மேற்குகரையும்


காஸ்ஸா/டெல்அவீவ்:ஐந்து வருடங்களுக்கு மேலாக ஹமாஸ் போராளிகளால் பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த கிலாத் ஷாலிதிற்கு பதிலாக 477 ஃபலஸ்தீன் கைதிகளை இஸ்ரேல் விடுதலைச் செய்துள்ளது.

இஸ்லாமிய சமுதாயம் படிப்பினை பெறுமா?


எனதருமை இஸ்லாமிய சமுதாயமே! தஃவாபணியின் முக்கியம் பற்றி இந்த சமுதாயம் இனியாவது சிந்நிக்குமா? இன்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ந நபி (ஸல்) அவர்கள் ஒன்றுமே எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக  இருந்தும் 40 ஆண்டு காலம் உண்மையாளன் என்ற பெயர் பெற்றனர்.  அதன் பின் மனித சமுதாயத்திற்கு ஒருவழிகாட்டியாக இறைவனால்  அனுப்பப்பட்ட இனிய தூதர் ஆனார்கள்.
இந்த மனிதசமுதாயத்திற்கு அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டியதோடு மனித நேயத்தை கற்றுக்கொடுத்து, பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்கும் போது தான் மட்டும் உண்ணுவது முறையல்ல என்ற உன்னத மனித நேயத்தையும் கற்றுக்கொடுத்தனர். மனித நேயமிக்க இந்த இஸ்லாமிய  மார்க்கம் இன்று இந்தியாவில் மிகப் பெரிய ஒரு அபாயத்தை எதிர் நோக்கி உள்ளதை எண்ணி வேதனைப்படுகின்றேன்.
இந்தியாவில் இஸ்லாம் எப்படி பரவியது என்பதைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம். இந்தியாவில் முதன் முதலில் வியாபாரமாகத்தான் இஸ்லாம் பரவியது. அவர்கள் செய்த வியாபாரத்தில் நேர்மை இருந்தது. இறையச்சம் மிக்கவர்களாக ஒழுக்க சீலர்களாகதாங்கள் செய்கின்ற அனைத்தும் இறைவனின் பொருத்தத்தை பெறவேண்டும் என எண்ணிச் செய்தார்கள். அதன் காரணமாக இஸ்லாம் இந்திய மண்ணில் பரவியது. இதன் பிறகு இந்திய மண்ணில் 800 ஆண்டுகள் ஆண்ட முஸ்லிம்கள் மன்னர்கள் என்ன செய்தார்கள்? இவர்கள் இம்மக்கள் மத்தியில் புனித இஸ்லாத்தை, இஸ்லாத்தின் ஏற்ற மிகு கொள்கையை எடுத்து வைத்தார்களா? குர்ஆன், ஹதீஸ்படி ஆட்சி நடத்தினார்கள்?

"சுதந்திரம் எங்களது பிறப்புரிமை" கேரளாவில் மாபெரும் பிரச்சார பேரணி


அன்னியப் பெண்ணுடன் கை குலுக்குதல் ...

அன்னியப் பெண்ணுடன் கை குலுக்குதல் 
இஸ்லாமிய சமுதாயத்தில் நுழைந்துள்ள அன்னிய பழக்கங்களில் இதுவும் ஒன்று. முஸ்லிம்கள் பல தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டனர். மார்க்கக் கட்டளைகளைப் புறக்கணித்து விட்டு மேற்கத்திய கலாச்சாரங்களை கண்மூடிப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அன்னியப் பெண்ணுடன் கை குலுக்கும் பழக்கமுடைய ஒருவரிடம் இது தவறானது என்ற மார்க்க கட்டளையை ஆதாரத்துடன் கூறினால் உடனே, நீங்கள் பழமைவாதிகள், சந்தேக எண்ணம் கொண்டவர்கள், உறவினர்களை பிரிப்பவர்கள்... என்றெல்லாம் முத்திரை குத்திவிடுகின்றார்.

சிறிய தந்தையின் மகள், பெரிய தந்தையின் மகள், மாமன் மகள், சகோதரரின் மனைவி... போன்றோருடன் கை குலுக்குவது நம்முடைய சமுதாயத்தில் மிகவும் எளிதான செயலாகிவிட்டது. இச்செயலின் விபரீதங்களை மார்க்கக் கண்ணோட்டத்துடன் பார்ப்பார்களானால் நிச்சயமாக இவ்வாறு செய்யமாட்டார்கள்.

BJP கைதி எண்: 10462?


நில ஆக்கிரமிப்பு புகாரில் லோக் ஆயுக்தா நீதிமன்றம் பாரதிய ஜனதா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு ஜாமீன் மறுத்தது. இதையடுத்து எடியூரப்பாவை போலீசார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற நிலை இருந்தது. 

போலீசில் கைது செய்யப்படுவதை தவிர்க்க லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் எடியூரப்பா சரணடைந்தார். சரணடைந்த அவரை ஒரு வாரம் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தர விட்டது. அவருக்கு கொடுக்கப்பட்ட கைதி எண்: 10462. 

சிந்திக்கவும்: கிழிந்தது லம்பாடி லுங்கி என்ற அடைமொழிதான் நினைவுக்கு வருகிறது.ஹிந்துத்துவா சங்கபரிவாரின் அரசியல் முகமான பாரதிய ஜனதா ஊழலை ஒழிக்க போவதாக இந்தியா  முழுவதும் தம்பட்டம் அடித்து  இந்தியாவிலேயே தாங்கள்தான் கரைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர்கள் என்று பொய்களை புனைந்து வந்தது. கார்க்கில் போரில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதிலும் ஊழல் செய்த பெரிச்சாளிகள்தான் இவர்கள் என்பது நாடறிந்த உண்மையே. இருந்தாலும் இயல்பாக மக்களுக்கு இருக்கும் மறதியை நம்பியே இவர்கள் பிழைப்பு ஓடுகிறது. 

பாரத் மாதா கீ கீ கீ கீ ஜெய்!



இந்தியாவில் தாமரை விரிந்த மாநிலம் கர்நாடகாஇங்கு தாமரை உடைய முதல் மந்திரி எடியுரப்ப என்ற கெட்டப்பா.  இவர் அடித்ததோ மந்திரி ராஜா அடித்ததைவிட எத்தனையோ கோடிகள் அதிகம்