Tuesday 14 June 2011

மதுரை அரசு மருத்துவமனையில் 100 குழந்தைகளை திருடிய கும்பல்-பெண் ஊழியர் உடந்தை!

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை திருடி விற்ற புரோக்கரையும் அவருக்கு உடந்தையாக இருந்த அரசு மருத்துவமனை பெண் ஊழியரையும் போலீசார் கைது செய்தனர்.




மதுரை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் அடிக்கடி குழந்தைகள் திருட்டு போவதாக எழுந்த புகாரை அடுத்து அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு நாட்களாக அண்ணாநகர் போலீசார் சாதாரண உடையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. மீது பிணையில்லா கைது வாரண்ட்!

மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா மற்றும் நான்கு பேர் மீது பிணையில்லா கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.



வெளிநாட்டு முதலீடு சீரமைப்பு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் நான்கு பேர் மீது, சென்னை எழும்பூர் கூடுதல் முதன்மை மாநகர மாஜிஸ்ட்ரேட், பிணையில்லா கைது வாரண்ட் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

டெல்லி:ஆயுத வியாபாரி கமலா கைது-ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு தொடர்பா?

புதுடெல்லி:இந்திய தலைநகர் டெல்லியில் ஆயுதவியாபாரியான கமலா என்ற பெண்மணியும் அவரது உதவியாளரும் கைதுச்செய்யப்பட்டுள்ளனர்.



கைதுச்செய்யப்பட்டவர்கள் டெல்லி மற்றும் என்.சி.ஆரில் நவீன ஆயுதங்களை கடத்தி வியாபாரம் செய்யும் கும்பல் என க்ரைம் டி.சி.பி அசோக் சந்த் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில் இஸ்லாத்தை அறிவோம் பயிற்சி முகாம் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

இஸ்லாம் காட்டிதந்த வாழ்வியல் நெறியை கடைபிடிக்கவும், இன்றைய சமூகத்தில் நடைபெறும் சீர்கேட்டை அகற்றும் வழிமுறைகள் பற்றியும், ஒரு குடும்பத்தை இஸ்லாமிய ரீதியாக நடத்திச் செல்வது பற்றியும், தனி மனித வாழ்வில் மாற்றம் கொண்டு வருவது மற்றும் அதன் மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வருதல் போன்ற விஷயங்களை போதிக்கும் முகமாக இஸ்லாத்தை அறிவோம் என்ற பயிற்சி முகாமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்தியா முழுவதும் நடத்தப்பட உள்ளது.


தமிழகத்தில் பயிற்சி முகாம்கள் நடைபெறற்ற இடங்கள்-



                                                                  சென்னை


ஸ்கூல் சலோ - பாப்புலர் ஃப்ரண்ட்டின் பள்ளி செல்வோம் பிரச்சாரம்

தொடக்கக் கல்வி முதல் உயர்நிலைக் கல்வி வரை ஆண் மற்றும் பெண் குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க பள்ளிக்கூடம் செல்ல ஊக்குவிக்க பாப்புலர் ஃப்ரண்ட்டின் "ஸ்கூல் சலோ" அல்லது "பள்ளிக்கூடம் செல்வோம்" பிரசாரம் இன்று முதல் தொடங்கியுள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் பள்ளிகூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் பல மாநிலங்களில் பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் களப்பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.


இணைகின்றன மார்க்சிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்!

ஹைதராபாத்: கடந்த மக்களவைத் தேர்தலிலும், சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் படுதோல்வியை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒன்றாக இணைக்க இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.


எதற்காக தனித்தனியாக கட்சி நடத்துகிறோம் என்ற காரணமே தெரியாத கட்சிகள் இவை இரண்டும். வழக்கமாக எல்லா பிரச்சனைகளிலும் இரு கட்சிகளுக்கும் ஒரே நிலை தான். தேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எந்த முடிவை எடுத்தாலும் அதை இந்திய கம்யூனிஸ்ட் ஆதரிக்கும்.

வெளிநாட்டு தொழிலாளர்களை கட்டுப்படுத்த சௌதி அரசு முடிவு

உள்நாட்டுத் தொழிலாளர்களின் வேலைவாய்பினை அதிகரிக்கும் வகையில் செளதி அரேபியா அரசு முக்கிய திட்டங்களை வகுத்துள்ளது.


உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு


வெளிநாடுகளில் இருந்து சௌதி அரேபியாவிற்கு தேவையான தொழிலாளர்களை தேர்வு செய்யும் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளையும் சௌதி அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான உத்தரவினை தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து சௌதியில் வந்து பணிபுரியும் தொழிலாளர்களின் திறனைப் பொறுத்து பணி நிர்யணம் செய்யப்படுகிறது. இதற்காக ‘நிடாகாட்’ என்ற திட்டத்தை வகுத்துள்ளது. உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.

சிறுமி கொலை: சிபி-சிஐடி விசாரணைக்கு மாயாவதி உத்தரவு

லக்னோ ஜூன் 13: உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல் நிலைய வளாகத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட புகார் குறித்து சிபி-சிஐடி விசாரணைக்கு, முதல்வர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.


உத்தரப் பிரதேச மாநிலம் லகிம்பூர் மாவட்டத்தில், 14 வயது சிறுமியை கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தேடிவந்தனர்.


ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் சலுகைகள்: மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா அறிவிப்பு

புதுதில்லி,ஜூன் 13: ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் இந்தியப் பயணிகளுக்கு மேலும் சில சலுகைகளை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா திங்கள்கிழமை அறிவித்தார். எழுபது வயதுக்கு மேற்பட்ட பயணிகள் உடன் துணைக்கு ஒருவரை அழைத்துச் செல்லலாம்.



தொடர்ந்து 3 ஆண்டுகளாக விண்ணப்பித்து தேர்வு செய்யப்படாதவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் சீட்டு குலுக்கல் ஏதும் இல்லாமல் தேர்வு செய்யப்பட்டுவிடுவார்கள். பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தால், போலீஸ் சரிபார்ப்புகூட இல்லாமல், 8 மாதங்களுக்குச் செல்லத்தக்கதாக பாஸ்போர்ட் வழங்கப்படும்.

அமெரிக்காவுடன் இணைந்து உக்ரைன் போர் ஒத்திகை: ரஷ்யா கடும் எதிர்ப்பு

சோவித் ரஷியாவில் இருந்து தனி நாடாக பிரிந்துள்ள உக்ரைனுடன் இணைந்து அமெரிக்கா கப்பற்படை கருங்கடலில் போர் ஒத்திகை நடத்த உள்ளது. அதற்காக அமெரிக்காவின் அதிநவீன போர்க் கப்பல் அங்கு நிறுத்தப்பட உள்ளது.



இதற்கு உக்ரைனின் பக்கத்து நாடான ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய பகுதியில் உலகளாவிய ஏவுகணை தடுப்பு நடவடிக்கையில் அமெரிக்க ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் ரஷியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்று தெரிவித்துள்ளது.

சமச்சீர் கல்வி வழ‌க்கு: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் இன்று விசாரணை

சமச்சீர் கல்வி தொடர்பான த‌மிழக அர‌சி‌ன் மே‌ல்முறை‌யீ‌ட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இ‌ன்று ‌விசாரணைக்கு வரு‌கிறது.

தி.மு.க. அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும், பாடப் புத்தகங்கள் தரமானதாக இல்லை என்றும் கூறி சமச்சீர் கல்வித் திட்டத்தை அ.இ.அ.‌தி.மு.க. அரசு ‌நிறு‌த்‌தி வை‌த்தது.