Tuesday 21 June 2011


ஆப்பிள் தோலில் உள்ள மருத்துவ குணங்கள்

Muthupet PFI -- 21/06/2011
An apple a day keeps the doctor away... இப்படி ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது. அதாவது தினசரி ஒரு ஆப்பிள் பழத்தை உண்ணுவதன் மூலம் வைத்தியர்களை நம் அருகில் நெருங்கவிடாமல் வைத்திருக்கலாம். அதாவது நோய்கள் இன்றி வாழலாம். இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதில் புது விடயம் என்னவென்றால் இந்த ஆப்பிள் பழங்களை அவற்றின் தோலுடன் சாப்பிட வேண்டும் என்பது தான்.


15 ஆண்டில் இல்லாத அதிகம்

உலகம் முழுவதும் 4.37 கோடி அகதிகள்

Muthupet PFI -- 21/June/2011
உலகம் முழுவதும் 4.37 கோடி பேர் அகதிகளாக வாழ்ந்து வருவதாக ஐ.நா.வின் துணை அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவர்களில் 80 சதவீதத்தினர் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள்.


ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான தூதரக அலுவலகம் யு.என்.எச்.சி.ஆர். அதன் சார்பில் கடந்த ஆண்டு இறுதி வரை உலகம் முழுவதும் அகதிகள் எண்ணிக்கை பற்றி ஆய்வு நடந்தது. அதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியதாவது:

ரஷ்யாவில் விமான விபத்து: 44 பேர் பலி

வடமேற்கு ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.



9 ஊழியர்கள் உள்ளிட்ட 52 பேருடன் வந்த டியூப்லெவ்-134 விமானம் பெட்ரோஜவாத்ஸ்க் நகருக்கு வெளியே பெஸோவெட்ஸ் விமானநிலையத்தில் ஓடுபாதையில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் சாலை அருகே மோதி தீப்பற்றியது.


சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க முக்கியத்துவம்


திருவாரூர் : சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார் திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்ற முனைவர் ஆர். தினகரன்


திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக முனைவர் ஆர். தினகரன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த இவர் வேளாண் பட்டதாரி. வேளாண்மை குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

+2 க்கு பிறகு உயர் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கும் வட்டியில்லா கடன் உதவித்தொகை


Muthupet PFI -- 20-June-2011
புதுடெல்லி:இரண்டுமாத காலமாக இந்தியா முழுவதும் நடைபெற்ற தேசிய அளவிலான ‘பள்ளி செல்வோம் (ஸ்கூல் சலோ)’ பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டும் வேளையில் +2க்கு பிறகு உயர்கல்வி கற்க விரும்பும் ஏழையான அதே வேளையில் திறமையான மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் உதவித் தொகை வழங்கப்படும் என பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.


2011-12 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வியை கற்க விரும்பும் மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமச்சீர் கல்வி குறித்து ஆராய புதிய குழு: முதல்வர் ஜெயலலிதா

சமச்சீர் கல்வி குறித்து ஆராய்வதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு ஒன்றை நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.



இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய தரமான மற்றும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டும் நோக்கில் 2010ம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டத்திற்கு எனது அரசால் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

ராஜகம்பீரத்தில் இலவச நோட் மற்றும் புத்தகம் வழங்கும் விழா

ஸக்கரியா மாஸ்டர் டிரஸ்ட் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இணைந்து ராஜகம்பீரத்தில் சுமார் 50,000ரூபாய் அளவில் பணமும் மற்றும் நோட் புத்தகங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டது.




தொடர் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் மீது குற்றப்பத்திரிக்கை!

JUNE 21, சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாத சாமியார் அசீமானந்த் உள்ளிட்ட ஐந்து பேர் மீது தேசிய புலணாய்வு நிறுவனம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.




2007ஆம் ஆண்டு இந்தியா VS பாகிஸ்தான் இடையேயான சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்தது. இதில் பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர்.


உபியில் இரண்டே நாட்களில் 5 பெண்கள் கற்பழிப்பு: பெண்கள் பீதி

இடா: உத்தரபிரதேசத்தில் 35 வயது விதவையை ஒரு கும்பல் கற்பழித்து, தீ வைத்துவிட்டு கொன்றுவி்ட்டு தப்பியோடிவிட்டது. மேலும் பிரோசாபாத் பகுதியில் 2 இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இது அம்மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் நடந்துள்ள 5-வது கற்பழிப்பாகும்.



உத்தரபிரதேசத்தில் கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. நேற்று தான் ராணிபூர் பெலாடி கிராமத்தில் ஒரு 18 வயது இளம் தலித் பெண் கற்பழிக்கப்பட்டார். அதே நாளில் 14 வயது பெண் ஒருவரை ஒரு கும்பல் கடத்திச் சென்று கற்பழிக்க முயன்றுள்ளது. போராடிய அப்பெண்ணைத் தாக்கி, கண்களை சேதப்படுத்திவிட்டு அந்த கும்பல் தப்பியது.


அமெரிக்க விமான விபத்தில் தமிழக டாக்டர் தம்பதி பலி

வாஷிங்டன் : அமெரிக்காவில் நடந்த விமான விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மூளைப் புற்று நோய் நிபுணர் விஸ்வநாதன் ராஜாராமன், அவரது மனைவி உயிரிழந்தனர்.


காப்பி அடித்து ஆங்கில நாவல் ஒன்றை எழுதியதாக 2006ல் சர்ச்சையில் சிக்கிய நாவலாசிரியர் காவ்யாவின் பெற்றோர் இவர்கள்.

பி.இ. கலந்தாய்வு: ஜூலை 8-ல் தொடங்குகிறது

சென்னை: பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதி தொடங்குகிறது.


தொடர்ந்து 35 நாள்களுக்கு இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது. இத்தகவலை தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் திங்கள்கிழமை (ஜூன் 20) வெளியிட்டார்.


சமச்சீர் கல்வி தமிழக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு

புது தில்லி: நீதிமன்ற உத்தரவை மீறி விட்டதாக தமிழக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

வழக்கறிஞர் ஹரீஷ் குமார் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

சட்டம் மட்டுமே போதாது!

காமாலைக் கண்ணால் பார்த்தால் எல்லாமே மஞ்சளாகத்தான் தெரியும் என்பார்கள், அதேபோல, கடந்த 64 ஆண்டுகளில் இந்தியாவில் உருப்படியாக எதுவுமே நடக்கவில்லை என்று யாராவது சொன்னால், அது காமாலைப் பார்வை என்றுதான் கூறவேண்டும். நாம் முன்னேறியிருக்க வேண்டிய அளவுக்கு முன்னேறவில்லையே தவிர, இந்தியாவின் முன்னேற்றம் அபரிமிதமானது என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.


நமது வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கற்களாக இருப்பவை, மக்கள் மத்தியில் தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும், நமது நியாயமான உரிமைகளைக் கேட்டுப்பெற வேண்டும் என்கிற உணர்வு இல்லாமல் இருப்பதும், ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் "சிவப்பு நாடா' கலாசாரமும்தான். இவை இரண்டுமே, காலனிய அடிப்படைச் சிந்தனைகள்தான் என்பதை 64 ஆண்டுகளாகியும் நாம் உணர்ந்து அதிலிருந்து விடுபடாமல் தொடர்வதுதான் துர்பாக்கியம்.

சம்ஜெளதா குண்டுவெடிப்பு: அசீமானந்த் உள்ளிட்ட ஐவர் மீது குற்றப்பத்திரிகை!

Muthupet PFI -- 20-June-2011

கடந்த நான்கரை ஆண்டு கால விசாரணைக்குப் பின், சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் இந்துத்துவா சாமியாரான அசீமானந்த் உள்ளிட்ட ஐந்து பேர் மீது தேசிய புலணாய்வு நிறுவனம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.



2007ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்தது. இதில் பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர்.

தாக்குதலில் பொதுமக்கள் பலி: நேட்டோ படைகள் மன்னிப்பு கோரியது

திரிபோலியில் நிகழ்ந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் ஒன்பது பேர் பலியானதற்கு பொறுப்பேற்று நேட்டோ படை வருத்தம் தெரிவித்துள்ளது.


லிபியா தலைநகர் திரிபோலியில் நேற்று முன்தினம் நேட்டோ படையினர் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர்.

அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்பும் படி மக்களுக்கு அதிபர் அழைப்பு

சிரியாவில் நடந்து வரும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் சிறிய குழுக்களை கொண்ட நாசவேலைக்காரர்களின் செயல். எனவே பொதுமக்கள் அமைதி பேச்சுக்கு திரும்ப வேண்டும் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.


சிரியா அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மூன்றாவது முறையாக நாட்டு மக்களுக்கு அதிபர் பஷர் அல் அசாத் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார்.