Friday 31 May 2013

“UAPA- கருப்புச்சட்டத்தை திரும்ப பெறு” பிரச்சார இயக்கம்! - எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவிப்பு!


யுஏபிஏ(UAPA)என்று அழைக்கப்படுகிற கருப்புச்சட்டத்தினை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தினை இந்தியா முழுவதும் மேற்கொண்டு வருகிறது.

ஆட்சியாளர்களிடம் கேள்விகள் எழுப்பாமல் இருக்கவே கறுப்புச் சட்டங்கள் – எஸ்.ஏ.ஆர் கிலானி!

திருவனந்தபுரம்: ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகள் குறித்து மக்கள் கேள்விகள் எழுப்பாமலிருக்கவே யு.ஏ.பி.ஏ போன்ற கறுப்புச் சட்டங்களை ஆளும் வர்க்கம் உருவாக்குகிறது என்று டெல்லி பல்கலைக்கழக பேராசிரியரும், மனித உரிமை ஆர்வலருமான எஸ்.ஏ.ஆர் கிலானி கூறினார். கேரள தலைநகரம் திருவனந்தபுரத்தில் யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்திற்கு எதிராக நடந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட மாநாட்டில் கலந்துகொண்டு எஸ்.ஏ.ஆர்.கிலானி உரையாற்றினார்.

கேரள தலைநகரை ஸ்தம்பிக்க வைத்த கறுப்புச் சட்டத்திற்கு எதிரான ‘ஜன விசாரணை யாத்திரை’யின் பேரணி மற்றும் மாநாடு!

திருவனந்தபுரம்: நேற்று(30/05/2013) கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடந்த யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்திற்குஎதிரான ‘ஜன விசாரணை யாத்திரை’யின் இறுதியில் நடந்த பேரணி, மற்றும் மாநாட்டில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள், பொய்க்கதைகளை ஜோடித்தும், கறுப்புச் சட்டங்களை பிரயோகித்தும் நவீன சமூக எழுச்சிக்கு தடை போட்டுவிடலாம் என்று கனவு காணும் அதிகார, ஆளும் வர்க்கத்திற்கு பதிலடியாக அமைந்தது.

Tuesday 28 May 2013

மௌலான காலித் முஜாஹிதீன் அடித்து படுகொலை! : SDPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

உத்தர பிரதேசத்தில் 2007ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட காலித் முஜாஹித் விசாரணைக்காக நீதி மன்றம் அழைத்து வரும் வழியில் போலிசாரால் அடித்தே கொலை செய்யப்பட்டுளார். 

காலித் முஜாஹிதின் மரணம்:பாரபட்சமற்ற விசாரணை-முஸ்லிம் தலைவர்களிடம் அகிலேஷ் யாதவ் உறுதி!


இச்சம்பவம் தொடர்பாக உள்ளார்ந்த நேர்மையுடனும் மிக கவனத்துடனும் செயல்படுவோம் என்று தன்னை சந்தித்த முஸ்லிம் தலைவர்களிடம் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.காலித் முஜாஹிதின் உறவினர்களுக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கை சிபிஐக்கு மாற்ற மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை!

பெங்களூரு : பெங்களூரூ பாஜக அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்பில் அப்பாவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் உண்மையை வெளிக்கொணர இவ்வழக்கை சிபிஐ வசம் மாற்ற வேண்டும் என்றும் மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன.

முஸ்லிம்கள் நிரபராதிகள் என்று தெரிந்தே வழக்கில் சிக்கவைத்து சித்திரவதைச் செய்யும் போலீஸ்!

தீவிரவாத வழக்குகளை குறித்து விசாரணை நடத்தும் பல்வேறு புலனாய்வு ஏஜன்சிகள் முஸ்லிம் இளைஞர்கள் நிரபராதிகள் என்று தெரிந்தே வழக்குகளில் சிக்கவைத்து, மிருகத்தனமாக சித்திரவதைச் செய்து சிறையில் அடைக்கின்றனர் என்று பிரபல புலனாய்வு செய்தியாளரும், ஊடகவியலாளருமான ஆஷிஷ் கேதானின் புதிய புலனாய்வு அறிக்கை கூறுகிறது. ஆஷிஷ் கேதானின் செய்தி இணையதளமான குலைல் நியூஸில் இந்தியாவின் போலீஸ், உளவுத்துறை ஏஜன்சிகளின் பட்டவர்த்தனமான முஸ்லிம் எதிர்ப்பு அணுகுமுறையை தோலுரித்துக் காட்டும் புலனாய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. 

Monday 27 May 2013

எழுச்சியுடன் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் காஞ்சிபுர மாவட்ட சமூக நீதி மாநாடு!

முஸ்லீம்களுக்கு மத்தியில் 10 சதவீத இடஒதுக்கீட்டையும்மாநிலத்தில் 7 சதவீதஇடஒதுக்கீட்டையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே வலியுறுத்திஎஸ்.டி.பி. கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாமே 26 அன்றுபல்லாவரம் ஆடுதொட்டி மைதானத்தில் கண்ணியமிகு காயிதே மில்லத் திடலில் சமூகநீதி மாநாட்டை நடத்தியது.

Thursday 23 May 2013

ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்புடைய குற்றவாளிகள்! மாலேகான் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!


நான்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகளை குற்றவாளியாக சேர்த்து 2006-ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜன்சி சிறப்பு மோக்கா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. லோகேஷ் சர்மா, டான்சிங், ராஜேந்திர சவுத்ரி,மனோகர் நர்வாரியா ஆகியோரின் பங்கினை தெளிவுப்படுத்தும் இக்குற்றப்பத்திரிகையில் சுவாமி அஸிமானந்தாவின் பெயர் இடம் பெறவில்லை.

Wednesday 22 May 2013

காலித் முஜாஹித் மரணம்: விசாரணை நடத்தக் கோரி உ.பி மாநில சட்டப்பேரவையை நோக்கி எஸ்.டி.பி.ஐ பேரணி!


உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் 2008 டிசம்பரில் எஸ்.டி.எஃப் படையினரால் கைதுச் செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர் காலித் முஜாஹிதின் மர்மமான கஸ்டடி மரணம் குறித்து விசாரணை நடத்தக்கோரி சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவையை நோக்கி பேரணி நடத்தியது.

யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்? - சீமான்!


சென்னை: "ஜம்மு – காஷ்மீர் விடுதலை முன்னணி  தலைவர் யாசின் மாலிக்கை அழைத்து இந்திய அரசு பேசினால், அது சரி! நாங்கள் அழைத்து பேச வைத்தால் அது மட்டும் தவறா?" என நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. கடலூரில் மே-18 எழுச்சி நாள் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக்கை நாம் தமிழர் கட்சி அழைத்து பேசவைத்தது தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுவருகிறது. சீமானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

இஷ்ரத் ஜஹான் நிரபராதி : சரத்பவார்!


மும்பை: குஜராத் போலீஸ் போலி என்கவுண்டர் மூலம் கொலைச் செய்த மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் நிரபராதியான கல்லூரி மாணவி என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத் பவார் கூறியுள்ளார்.

போலி என்கவுண்டரில் போலீஸ் என்னை கொலைச் செய்ய முயன்றது – லியாகத் அலி ஷா!


புதுடெல்லி:போலி என்கவுண்டர் மூலம் டெல்லி போலீஸ் தன்னை கொலைச் செய்ய முயன்றதாக முன்னாள் ஹிஸ்புல் முஜாஹிதீன் உறுப்பினரான லியாகத் அலி ஷா கூறியுள்ளார்.

Monday 20 May 2013

காலித் முஜாஹிதின் மரணம்! - சி.பி.ஐ விசாரணைக்கு பரிந்துரை!


தீவிரவாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காலித் முஜாஹித் போலீஸ் கஸ்டடியில் வைத்து மர்மமான முறையில் மரணித்த நிகழ்வு குறித்து சி.பி.ஐ விசாரணை கோரி உ.பி மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. 2007-ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்ட காலித் முஜாஹிதை ஃபைசாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு லக்னோ சிறைக்கு கொண்டு செல்லும்போது போலீஸ் வாகனத்தில் வைத்து மரணித்ததாக போலீஸ் கூறுகிறது.
அவர் சூரிய ஒளியின் தாக்குதலால் மரணமடைந்தார் என்று போலீஸ் கூறுகிறது. காலிதை பொய் வழக்கில் சிக்கைவைத்ததாகவும், அவரது மரணம் கொலை என்றும் குற்றம் சாட்டி அவரது மாமனார் ஸஹீர் ஆலம் ஃபலாஹி அளித்த புகாரின் அடிப்படையில் 42 போலீஸ் அதிகாரிகள் மீது பாராபங்கி போலீஸ் வழக்கு பதிவுச் செய்துள்ளது.

குஜராத் இன அழிப்பு குற்றவாளி அமித்ஷாவுக்குப் பதவி!


புது டெல்லி: குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இன அழிப்பு வழக்கில் குற்றவாளியான குஜராத் உள்துறை முன்னாள் அமைச்சரும் மோடிக்கு நெருக்கமானவருமான அமித்ஷாவுக்கு பாஜகவில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பிரமுகர்! Vs. பயங்கரவாதி!!


கடந்த மாதம் 17 ஆம் தேதி பெங்களூருவில் பா.ஜ.க அலுவலகம் அருகே குண்டு வெடித்ததைத் தொடர்ந்து 16பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அப்பாவிகள் என்பதால் தமிழக இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ச்சியான போராட்டங்களையும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

Sunday 19 May 2013

நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்ட "காலித் முஜாஹித்" நீதிமன்றக் காவலில் படுகொலை!


தீவிரவாத குற்றச்சாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த காலித் முஜாஹித் நேற்று (18/05) மாலை மர்மமான முறையில் இறந்து விட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு திரும்பும்போது போலீஸ் வேனில் மாரடைப்பால் மரணம் என போலீஸ் கூறுகிறது, ஜெயிலை விட்டு செல்லும்போது பூரண உடல் நலத்துடன் சென்றதாக ஜெயில் கண்காணிப்பாளர் கூறுகிறார். இது திட்டமிட்ட கொலை என்கிறார், காலிதின் வழக்கறிஞர் ரந்தேர் சிங்.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு 6 ஆண்டுகள் நிறைவு! - கைது செய்யப்படாத குற்றவாளிகள்!


9 பேர் கொல்லப்பட்டு, 58 பேர் காயமடைய காரணமான ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு நிகழ்ந்து 6 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளன. ஆனால், இக்குண்டுவெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டிய முக்கிய சூத்திரதாரிகளான சந்தீப் டாங்கே, ராம்ஜி கல்சங்கரா, சுரேஷ் நாயர் ஆகிய ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை இன்னமும் தலைமறைவாகவே உள்ளனர். அவர்களை கைது செய்ய புலனாய்வு ஏஜன்சிகளால் இதுவரை முடியவில்லை.

யு.ஏ.பி.ஏ போன்ற கறுப்புச் சட்டங்கள் ஜனநாயகத்தை கேலிச் செய்கின்றன!-பிரசாந்த் பூஷண்!


கோழிக்கோடு: யு.ஏ.பி.ஏ போன்ற கறுப்புச் சட்டங்கள் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதாக பிரபல மனித உரிமை ஆர்வலரும், உச்சநீதிமன்றத்தில்மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் கூறினார்.

நீதி கேட்டு குடியரசு தலைவருக்கு அப்துல் நாஸர் மஃதனி கடிதம்!


கொச்சி: நிரபராதியான தனக்கு நீதி வேண்டும் என்று கோரி கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கின் பெயரால் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு கைதுச்செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநிலபி.டி.பி கட்சியின் தலைவரான அப்துல் நாஸர் மஃதனி இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தனக்கு நீதி வேண்டும் என்று கோரி 35 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.சிறை சூப்பிரண்டு வழியாக கடந்த வெள்ளிக்கிழமை இக்கடிதம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளத்.இக்கடிதத்தின் நகல் ஊடகங்களுக்கு பி.டி.பி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது ரஜீப் மூலம் அளிக்கப்பட்டது.

Saturday 18 May 2013

கேரளாவில் 21 அப்பாவி முஸ்லிம்கள் கைது சம்பவம்! - போலீஸாரால் ஜோடிக்கப்பட்டது! - மனித உரிமை அமைப்பு அறிக்கை!


கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள நாராத் பகுதியில் வெடிக்குண்டுகளுடன் ஆயுதப் பயிற்சில் செய்ததாக கூறி 21 பேரை கைது செய்த சம்பவம் போலீஸாரால் ஜோடிக்கப்பட்டது என்று உண்மைக் கண்டறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர். தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பான என்.சி.ஹெச்.ஆர்.ஓ குழுவினர் சம்பவம் நடந்த இடத்தில் நடத்திய தீவிர விசாரணையில் போலீசாரின் குற்றச்சாட்டுக்கள் பொய் என்பது நிரூபணமாகியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த பேரா.மார்க்ஸ், புதுவை ஜி.சுகுமாரன் ஆகியோர் அடங்கிய இந்த உண்மை அறியும் குழு இந்த விசாரணையை நடத்தியுள்ளது. 

Friday 17 May 2013

விசாரணை கைதிகளின் விடுதலைக்காக எஸ்.டி.பி.ஐ தேசிய அளவிலான பிரச்சாரம்!


சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (யு.ஏ.பி.ஏ) உள்ளிட்ட கறுப்புச் சட்டங்களை பயன்படுத்தி தீவிரவாத வழக்குகளில் சிக்கவைத்து சிறையிலடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான முஸ்லிம்கள், பழங்குடியினர், மனித உரிமை ஆர்வலர்களை விடுதலைச் செய்யக் கோரி தேசிய அளவில் வலுவான பிரச்சாரத்தை மேற்கொள்ள எஸ்.டி.பி.ஐ தீர்மானித்துள்ளது.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கை சி.பி.ஐ விசாரிக்க இஸ்லாமிய கூட்டமைப்பினர் கோரிக்கை!


பெங்களூரு மல்லேஸ்வரத்தில் நடந்த குண்டுவெடிப்பு பாஜகவின் அரசியல் லாபத்திற்காக நடத்தப்பட்ட சதி செயல் என்றும் இந்த அரசியல் சதிகளுக்கு தமிழகத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் பலிகடா ஆக்கப்படுவதாக, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Wednesday 15 May 2013

மாவீரன் ஹைதர் அலி மற்றும் தீரன் திப்பு சுல்தானிற்கு மணிமண்டபம்! பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்கிறது!



தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் வாசித்த அறிக்கையில் ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன்னுயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை அறிவிப்பு செய்தார். 

மாவீரன் ஹைதர் அலி, திப்புசுல்தானுக்கு தமிழ்நாட்டில் மணிமண்டபம்! : ஜெயலலிதா!


முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:- நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களையும், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குரல் கொடுத்து தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளையும், சமுதாய மேம்பாட்டிற்காக பாடுபட்டவர்களையும் போற்றிப் பெருமைப்படுத்தும் அரும்பணியை எனது தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. 

சொக்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கு : பிஜேபி தலைவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு!


புது டெல்லி: குஜராத்தில் கொல்லப்பட்ட சொக்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் பிஜேபி மூத்த தலைவரும் ராஜஸ்தான் மாநில முன்னாள் உள்துறை அமைச்சருமான குலாப் சந்த் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

படகு கவிழ்ந்ததில் பலர் பலியாகினர்: மியான்மரில் கொடூர சம்பவம்!


வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மகாசேன் புயல், வங்கதேசம் மற்றும் மியான்மர் நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளை புயல் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கன மழையும் பெய்யும் என்பதால், தாழ்வான பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.

இனக்கலவர வழக்கு: முன்னாள் மந்திரிக்கு மரண தண்டனை விதிக்க கோரும் முடிவு நிறுத்தம்! - "நரபலி நாயகன்" அரசு அறிவிப்பு!


குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து திட்டமிட்டபடி கலவரத்தை அரங்கேற்றினர். இதில், நரோடா பாட்டியா சம்பவத்தில் 96 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கை தனிக்கோர்ட்டு விசாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பு வழங்கியது. 

பெங்களூர் குண்டுவெடிப்பு! கோவையை குறிவைக்கும் காவல்துறை!


பெங்களூரு மல்லேஸ்வரம் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அருகே, கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்பது பேர் தமிழக போலீசாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு பெங்களூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Tuesday 14 May 2013

பதவி ஏற்பு விழாவுக்கு மன்மோகன் சிங் வந்தால் மகிழ்ச்சி அடைவேன்! : நவாஸ் ஷெரிப்!


பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நவாஸ் ஷெரிப் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. மூன்றாவது முறையாக நவாஸ் ஷெரிப் பிரதமர் பதவி ஏற்கிறார்.இந்நிலையில் லாகூரில் உள்ள தனது இல்லத்தில் அவர் இன்று கூறியதாவது:

அறிவில்லாமல் வெளியுறவு கொள்கை குறித்து பேசுவதா?: மோடி மீது குர்ஷித் காட்டம்!


சூரத்: "தமக்கு சம்பந்தப்படாத விசயங்களில் போதிய அறிவில்லாமல் மோடி பேசக்கூடாது" இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மோடியைக் காட்டமாக விமர்சித்து பேசியுள்ளார். குஜராத் மாநில 53-வது ஆண்டு தினத்தையொட்டி அமெரிக்காவில் உள்ள குஜராத் மக்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் மோடி பேசும்போது, "சீனா விவகாரத்தில் காங்கிரஸ் அரசின் வெளியுறவுக் கொள்கை, 120 கோடி இந்திய மக்களின் நம்பிக்கையை தகர்த்துவிட்டது" என்று விமர்சனம் செய்திருந்தார்.

3 வயது மகளுடன் பஹ்ரைன் வீதிகளில் தங்கியுள்ள இந்திய இளைஞரின் பரிதாப நிலை!



தொழில் கூட்டாளி மோசம் செய்துவிட்டதால் இந்தியாவை சேர்ந்த ஒருவர் தனது 3 வயது மகளுடன் 6 மாத காலமாக பஹ்ரைன் வீதிகளில் தங்கி வரும் செய்தி அந்நாட்டின் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. 

கைபர்-பக்துன்கவா சட்ட சபையில் ஆட்சி அமைக்கும் இம்ரான்கான் தலிபான்களின் நெருக்கடியை சமாளிப்பாரா?



கைபர்-பக்துன்கவா சட்ட சபையில் ஆட்சி அமைக்கும் இம்ரான்கான் தலிபான்களின் நெருக்கடியை சமாளிப்பாரா? என அரசியல் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி 35 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து கட்சி தொடங்கிய 17 ஆண்டுகளில் இம்ரான்கான் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார்.

Monday 13 May 2013

முஸ்லிம்கள் சந்திக்கும் சவால்கள் குறித்த பொதுக்கூட்டம் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பங்கேற்கிறார்!

கல்வித் துறையில் முஸ்லிம்கள் சந்திக்கும் சவால்கள் குறித்த பொதுக்கூட்டம் மும்பையில் வருகிற 29, 30–ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்க உள்ளது. இதில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பங்கேற்கிறார். ‘மவுலானா ஆசாத் விச்சார் மஞ்ச்’ என்ற அமைப்பு சார்பில் கல்வித்துறையில் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த 2 நாட்கள் பொதுக்கூட்டம் மும்பை கலினா பகுதியில் உள்ள பல்கலைக்கழக மைதானத்தில் வருகிற 29 மற்றும் 30–ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.

மூன்றாவது முறையாக பாகிஸ்தான் பிரதமராகிறார் நவாஸ் ஷெரிஃப்!


பாகிஸ்தான் தேர்தலில், நவாஸ் ஷெரிஃப்பின் கட்சி 107 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற்ற 272 தொகுதிகளில் 235 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் நவாஸ் ஷெரிஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 107 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க மொத்தம் 137 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இருப்பினும், நவாஸ் ஷெரிஃப் கட்சி, சிறிய கட்சிகளி்ன் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ருவைதா சலாம்: ஜம்மு -கஷ்மீரின் முதல் பெண் ஐஏஎஸ்!!


ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் இருந்து முதன்முறையாக பெண் ஒருவர் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இது காஷ்மீர் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

கர்நாடக முதல்வராக இன்று பொறுப்பேற்கிறார் சித்தராமையா!


ர்நாடக மாநிலத்தின் 22வது முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்கிறார். ஸ்ரீ கண்டீரவா விளையாட்டுத் திடலில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில், அந்த மாநில ஆளுநர் பரத்வாஜ், சித்தராமையவுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

பெங்களூர் குண்டுவெடிப்பு! சிம்கார்டு ஆதாரத்தை மறைக்க முயற்சி?


பெங்களூர் மல்லேஸ்வரம் பாஜக அலுவலகம் அருகே, கடந்த 17 ஆம்  தேதி நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சிம் கார்டு ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவருக்கு உரியது என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தொடர்பை மறைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Saturday 11 May 2013

பெங்களூர் குண்டுவெடிப்பு : அப்பாவி இளைஞர்கள் கைதுக்கு எதிராக திரண்ட சமுதாயம்! மிரண்ட ஆட்சியாளர்கள்!!


பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து, சென்னையில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட சிம்கார்டு ஆர்எஸ்எஸ் தலைவருடையது!

Bangalore-Blast
பெங்களூர் மல்லேஸ்வரம் பாஜக அலுவலகம் அருகே, கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சிம் கார்டு ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவருக்கு உரியது என போலீஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அந்த ஆர்எஸ்எஸ் பிரமுகரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை.
குண்டுவெடிப்பு சம்பவத்தில் செல்போன் சிம்கார்டு ரிமோட் கன்ட்ரோலாக பயன்படுத்ததப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர்.
எனினும் குண்டுவெடிப்புக்கு முதல் நாள், அந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் செல்போன் திருடு போனதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக தமிழக போலீசாரின் உதவியுடன் கர்நாடக போலீசார் தமிழகத்தை சேர்ந்த 9 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Source: Thoothuonline.com