வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மகாசேன் புயல், வங்கதேசம் மற்றும் மியான்மர் நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளை புயல் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கன மழையும் பெய்யும் என்பதால், தாழ்வான பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.
அவர்கள் தங்குவதற்கு தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாக்டாவ் நகர் அருகே ரோகிங்யா முஸ்லிம்கள் 100 பேருடன் சென்ற படகு, பாறையில் மோதி மூழ்கியது. இதில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்பது பற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு பெரும்பான்மையாக உள்ள புத்தர்களுக்கும், சிறுபான்மை முஸ்லிம்களுக்குமிடையே ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமானோர் வீடுகளை இழந்தனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் அரசு முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்கள் வசிக்கும் முகாம்கள் புயலால் பாதிக்கப்படும் என்று ஐ.நா. கடந்த வாரம் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment