Friday, 10 June 2011

சிறு வார்த்தைகள் -> சிறுவர்கள் -> இஸ்லாம்


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..

முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் நோக்கி ஈர்க்கப்பட பல காரணங்கள் இருக்கலாம். குர்ஆன் முழுவதையும் படித்த பிறகு சிலர் கவரப்படுவார்கள், சிலரோ குர்ஆனின் சில வசனங்களை கேட்டதாலேயே ஈர்க்கப்பட்டிருப்பார்கள், வேறு சிலரோ முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டிருப்பார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

சமீபத்தில் நான் பார்த்த நபர் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற அந்த ஒரு வார்த்தை தன்னை நோக்கி கூறப்பட, அதனால் ஈர்க்கப்பட்டு, பின்னர் தான் சந்தித்த முஸ்லிம் சிறுவர்களின் நன்னடத்தைகளால் இஸ்லாத்தை கற்றுக்கொண்டு, பின்னர் சிறு போராட்டத்திற்கு பின் இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர். 

அறிவை இஸ்லாமிய மயமாக்கல்.....


“உலக நோக்கு” என்ற இச்சொற்றொடர் பிரபஞ்சம், அதில் மனிதனின் நிலை, மனித வாழ்வு ஆகிய மூன்றையும் பற்றிய கண்ணோட்டத்தையே குறிக்கின்றது. இக்கண்ணோட்டமே ஒரு குறிப்பிட்ட உலக நோக்கில் பிரதிபலிக்கின்றது. இந்த வகையில் மேற்கத்திய அரசியல், பொருளியல், கல்வி, கலாச்சாரம் சுருக்கமாகச் சொன்னால் வாழ்வியல் கோட்பாடுகள் அனைத்தும் மேற்கத்திய உலக நோக்கின் அடிப்படையிலேயே உருவாகின. இந்த உலக நோக்கு தோற்றம்பெற்ற ஐரோப்பிய வரலாற்றுச் சூழலை இங்கு நாம் விளங்குதல் அவசியமாகும்.

இலவச கலர் டிவி திட்டம் ரத்து-மீதமுள்ள டிவிகள் அனாதை இல்லங்களுக்கு அளிக்கப்படும்-ஜெ.


சென்னை: தமிழக அரசின் இலவச கலர் டிவி திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தற்போது அரசின் வசம் மீதமுள்ள 1 லட்சத்து 27 ஆயிரம் கலர் டிவி பெட்டிகளையும் அனாதை இல்லங்கள், மருத்துவமனைகளுக்கு கொடுக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இன்று பதில் அளித்துப் பேசினார்.

வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரங்களின் பட்டியல் வெளியீடு: டோக்கியோ முதலிடம்

சர்வதேச அளவில் சரக்கு மற்றும் சேவை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை ஆகியன அடிப்படையில் வாழ்வதற்கு அதிக செலவு பிடிக்கும் நகரங்கள் குறித்து ஈ.சி.ஏ என்ற சர்வதேச அமைப்பு உலகளவில் ஆய்வு ஒன்றினை நடத்தியது.
அந்த ஆய்வின் அடிப்படையில் அதிக செலவு மிக்க முதல் பத்து நகரங்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் ஆசியாவின் சிங்கப்பூர் கடந்த ஒரு ஆண்டுகளில் 68வது இடத்திலிருந்து 38 இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இது ஜப்பானின் ஹாங்காங் நகரினை காட்டிலும் 5 சதவீதம் அதிகம். ஈ.சி.ஏ என்ற அந்த அமைப்பு வெளியிட்டுள்ள முதல் 10 நகரங்கள் பட்டியல் பின்வருமாறு: 1. டோக்கியோ, 2. நெளகோயா, 3. யாகோமா, 4. கூபோ, 5. சீயோல், 6. சிங்கப்பூர், 7. ஹாங்காங், 8. பீய்ஜிங், 9. ஷாங்கை, 10. பூசான் ஆகும்.

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதலில் தாய்நாட்டில் ஆறடி நிலம் கிடைக்காத எம்.எஃப்.ஹுஸைன்


புதுடெல்லி:பிறந்த மண்ணில் கால்பதிக்கவேண்டும் என்ற ஆசையை மீதம் வைத்துவிட்டு இந்தியாவின் புகழை உலக அரங்கில் ஓங்கச்செய்த ஓவியர் வர்ணங்களின் உலகிலிருந்து பிரியா விடை பெற்றார்.

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் நிரந்தர அச்சுறுத்தலுக்கு ஆளான எம்.எஃப்.ஹுஸைனுக்கு தாய்நாட்டில் திரும்பிவரவேண்டும் என்ற ஆசை இறுதியில் நிறைவேறாமல் போனது.

ஹிந்து தெய்வங்களின் நிர்வாண ஓவியங்களை வரைந்தார் என குற்றம் சாட்டி ஹிந்துத்துவா சக்திகள் ஹுஸைனுக்கு எதிராக திரும்பினர்.

தனது ஓவியங்களை கலை உருவாக்கமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற இந்த கலைஞரின் வார்த்தைகளுக்கு ஹிந்துத்துவா சக்திகள் மதிப்பளிக்கவில்லை.

கோயில்களின் சுவர்களில் ஹிந்து தெய்வங்களின்(?) உருவங்களை நிர்வாணமாக வரைந்து வைத்திருப்பவர்கள்தாம் ஹுஸைன் வரைந்த ஓவியங்களுக்கு எதிராக படை திரட்டினர். கொலை மிரட்டல்கள் மற்றும் தாக்குதல்கள் மூலம் அவர்கள் எம்.எஃப்.ஹுஸைனை நிரந்தரமாக வேட்டையாடினர்.

ராம்தேவ் வெளியிட்ட அரைகுறையான சொத்து விபரங்கள்


ஹரித்துவார்:முற்றும் துறந்த சன்னியாசியாக 9-வது வகுப்பில் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறி ஆன்மீகத்தின் பெயரால் கோடிகணக்கான சொத்துக்களை திரட்டிய ராம்தேவ் ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்திவருபவர்.

இந்நிலையில் அவருடைய சொத்துக்கள் குறித்து சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில் சொத்துக்களை குறித்த விபரங்களை வெளியிடுவேன் என அவர் அறிவித்திருந்தார். நேற்று ஹரித்துவாரில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தனக்கு 1100 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்தார்.

தனது கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நான்கு அறக்கட்டளைகளுக்கு 426.19 கோடி சொத்துக்கள் இருப்பதாகவும் அவற்றின் மீது 751 கோடி ரூபாய் செலவழித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன் பெண் கைதிகளை நிர்வாணப்படுத்திய இஸ்ரேலிய அராஜகம்


இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை ஹஷ்ரோன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலையில் உள்ள நான்கு பலஸ்தீன் பெண் கைதிகளை 'சோதனையிடல்' என்ற பெயரில் நிர்வாணமாக்கி அவமானப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பலஸ்தீன் பெண்கள் அஹ்ரார் சிறைக் கைதிகளுக்கான கற்கைகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்பிடம் தமக்கு நேர்ந்த அநீதியைப் பற்றி முறையிட்டுள்ளனர்.

இப் பெண் கைதிகளில் ஒருவரிடம் கைத்தொலைபேசி ஒன்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சோதனையிடுவதாகக் கூறிய ஆக்கிரமிப்புக் காவலர்கள், பலஸ்தீன் பெண் கைதிகளை நிர்வாணப்படுத்தியுள்ளனர். இதன்போது சம்பவ இடத்தில் 10 பெண் காவலர்கள், 5 ஆண்காவலர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் புலனாய்வுத் துறையினர் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்லேடன் கொலையில் தொடரும் சந்தேகங்கள் மேலும் மேலும் வலுக்கிறது


ஒருங்கிணைந்த ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க உளவுத் துறையான சிஐஏவால் வளர்த்து எடுக்கப்பட்ட பின்லேடன், பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது கொலையில் பல்வேறு சந்தேகங்கள் சர்வதேச சமூகத்தால் முன்வைக்கப்படுகின்றன.

பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்-காயிதாவின் நிறுவனரும் தலைவருமான பின்லேடன், சிஐஏ துணையுடன் அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா சில தினங்களுக்குமுன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் அவரது உடல் கடலில் வீசி எறியப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.