Friday, 10 June 2011

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதலில் தாய்நாட்டில் ஆறடி நிலம் கிடைக்காத எம்.எஃப்.ஹுஸைன்


புதுடெல்லி:பிறந்த மண்ணில் கால்பதிக்கவேண்டும் என்ற ஆசையை மீதம் வைத்துவிட்டு இந்தியாவின் புகழை உலக அரங்கில் ஓங்கச்செய்த ஓவியர் வர்ணங்களின் உலகிலிருந்து பிரியா விடை பெற்றார்.

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் நிரந்தர அச்சுறுத்தலுக்கு ஆளான எம்.எஃப்.ஹுஸைனுக்கு தாய்நாட்டில் திரும்பிவரவேண்டும் என்ற ஆசை இறுதியில் நிறைவேறாமல் போனது.

ஹிந்து தெய்வங்களின் நிர்வாண ஓவியங்களை வரைந்தார் என குற்றம் சாட்டி ஹிந்துத்துவா சக்திகள் ஹுஸைனுக்கு எதிராக திரும்பினர்.

தனது ஓவியங்களை கலை உருவாக்கமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற இந்த கலைஞரின் வார்த்தைகளுக்கு ஹிந்துத்துவா சக்திகள் மதிப்பளிக்கவில்லை.

கோயில்களின் சுவர்களில் ஹிந்து தெய்வங்களின்(?) உருவங்களை நிர்வாணமாக வரைந்து வைத்திருப்பவர்கள்தாம் ஹுஸைன் வரைந்த ஓவியங்களுக்கு எதிராக படை திரட்டினர். கொலை மிரட்டல்கள் மற்றும் தாக்குதல்கள் மூலம் அவர்கள் எம்.எஃப்.ஹுஸைனை நிரந்தரமாக வேட்டையாடினர்.


அவருடைய ஓவியக்கண்காட்சிகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் வழக்காகின.சிவசேனா, ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல்களுக்கு தலைமை வகித்தன.

மஹாராஷ்ட்ராவில் பாந்தர்பூரில் பிறந்த ஹுஸைனுக்கு அவருடைய சொந்த மாநிலத்தின் தலைநகரான மும்பையில் ஓவியக்கண்காட்சி கூட நடத்த சிவசேனா அனுமதிக்கவில்லை.இந்தியாவின் பிகாஸோ என அழைக்கப்படும் எம்.எஃப்.ஹுஸைனின் பல விலைமதிக்க முடியாத ஓவியங்களை இந்த பயங்கரவாதிகள் ஓவியக்கண்காட்சிகளில் வைத்து சேதப்படுத்தினர்.

ஓவியக்கலையில் உலக பிரசித்திப்பெற்றதால் இந்தியாவின் சிவில் விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகியவற்றைப் பெற்ற முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான எம்.எஃப்.ஹுஸைனுக்கு எதிராகத்தான் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டனர்.

இறுதியில் இந்தியாவில் ஓவியங்கள் வரைவதற்கான வாய்ப்புகள் மங்கியதை தொடர்ந்து ஹுஸைன் வெளிநாடுகளுக்கு சென்றார். பிறந்த நாட்டில் வாழமுடியாத இந்த ஓவியக்கலைஞருக்கு கத்தநாடு குடியுரிமை கெளரவித்தது.பின்னர் லண்டனிலும், கத்தரிலும் தனது வாழ்க்கையை கழித்தார் ஹுஸைன்.

சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் கூட இந்தியாவுக்கு திரும்பிவருவதை குறித்து தனது விருப்பத்தை வெளியிட்டார் அவர்.

ஹுஸைன் கூறினார்:எனது இதயம் எப்பொழுதும் இந்தியாவிலேயே இருக்கிறது.அது என்னுடைய நேசத்திற்குரிய தேசமாகும்.

No comments:

Post a Comment