Sunday, 1 September 2013

முத்துப்பேட்டையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று நாடகமாடும் காவல்துறை! -அப்பாவி முஸ்லிம்கள் மீது வழக்கு பதிவு!


முத்துப்பேட்டையில் நடக்கவுள்ள சர்ச்சைக்குரிய ஊர்வலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமலிருக்க இருதரப்பிலிருந்தும் 10 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.


வழக்கு விவரம் : ராஜேந்திரன், முருகானந்தம், விக்னேஷ், ரமேஷ், செந்தில்நாதன், சலீம், பயாஸ் அஹ்மத், அக்பர் அலி, நைனா முஹம்மத், ஷேக் முஹைதீன்.

இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், உண்மையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தடுக்கவேண்டும் என்றால் அதற்கு தொடர்புடைய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும். அதை விட்டுவிட்டு வெறும் கணக்கு காண்பிப்பதற்காக பிரச்சனைக்குரிய தரப்பில் வழக்கு பதிவு செய்து நாடகமாடுகிறது, பிரச்சனையை ஏற்படுத்துபவர்களை வெளியில் திரியவிட்டு வேடிக்கைப்பார்க்கிறது காவல்துறை.

அதேபோல் எந்த குற்றப்பின்னனியும் இல்லாத அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவுசெய்துள்ளது. குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தில் யாரும் சட்டம் படித்து வழக்கறிஞர் ஆகிவிடக்கூடாது என்ற நோக்கத்தில், (BL) சட்டம் படித்துவரும் மாணவன் முத்துப்பேட்டை ஆசாத் நகரை சேர்ந்த அக்பர் அலி மீது காழ்புணர்ச்சி காரணமாக வழக்கு பதிவு செய்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஆக முத்துப்பேட்டையில் உண்மையில் கலவரத்தை ஏற்படுத்துபவர்களை வெளியில் திரியவிட்டு வேடிக்கை பார்த்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுவிடக்கூடாது என்று சொல்லி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையும், மாணவர்களையும் கைது செய்ய துடிப்பது காவல்துறையா? அல்லது காவித்துறையா? என்று கேள்வியை எழுப்பச்செய்கிறது.

No comments:

Post a Comment