Thursday, 20 October 2011

பூத் அலுவலர்களின் தபால் ஓட்டுக்களை திருடிய திட்டக்குடி போஸ்ட் மாஸ்டர் கைது


திட்டக்குடி: வாக்குச் சாவடி அலுவலர்கள் போட வேண்டிய தபால் ஓட்டுக்களை திருடி விட்டதாக திட்டக்குடியில் போஸ்ட் மாஸ்டர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள வாகையூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (45). இவர் தொழுதூர் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிகிறார். மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து கடந்த 17-ந் தேதி வாக்குச்சாவடி அலுவலர்கள் போட வேண்டிய ஓட்டுகளை தபால் மூலம் அனுப்பி இருந்தனர்.

உலகில் 85 கோடி பேர் பசியின் கொடுமையில்…


பசியாலும்ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் உலகில்85 கோடிப்பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா அறிவித்துள்ளது. ஒரு நேர உணவுக்காக ஏங்கும் சிறுவர்கள் பலர் இன்று ஏழை நாடுகளில் உள்ளனர்;. மக்கள் தொகை வளர்ச்சியை ஒப்பிடும்போதுஉணவுப் பொருட்களின் உற்பத்தி குறைவாகவே உள்ளது. உலகில் 85 கோடிப்பேர் பசியாலும்,ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 82 கோடிப் பேர்இந்தியா உள்ளிட்ட வளரும்நாடுகளை சேர்ந்தவர்கள். ஆண்டு தோறும் பட்டினியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கைமூன்று கோடியே 50லட்சத்துக்கும் அதிகம்.இந்த எண்ணிக்கையை பாதியாக குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டும்ஒவ்வொரு ஆண்டும் பட்டினி மரணங்கள் அதிகரித்து வருகின்றன. 

ஹசாரேவிடம் ஒரு மாணவனின் கேள்விகள்...



மாணவன் : குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்குள் லோக்பால் மசோதா கொண்டுவரவில்லை என்றால் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் எனப் பிரச்சாரம் செய்யப் போவதாகச் சொல்லியுள்ளீர்கள். அப்படிச் சொன்னது பத்திரிகையில் வந்துள்ளது. அது உண்மைதானா?

அன்னா : ஆம் உண்மையே.

மாணவன் : அப்படியானால் காங்கிரஸ் அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துவிட் டால், காங்கிரசுக்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்வீர்களா?

அன்னா : நான் அப்படிச் சொல்ல வில்லையே.

சித்திபேட்டில் குர்ஆன் அவமதிப்பு: நீதி விசாரணை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை


ஹைதராபாத் 11 அக்டோபர், 2011: ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டத்தில் சித்திபேட் என்கின்ற ஊரில் சில கயவர்களால் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன் அவமதிக்கப்பட்டுள்ளது. இதனை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய செயலை கண்டிக்கும் விதமாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுபான்மை முஸ்லிம்கள் இளைஞர்களை தடியடி நடத்தி போலீஸார் கலைத்துள்ளனர். இது தொடர்பாக உடனே நீதி விசாரணை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் மாநில அரசை வலியுறுத்துகிறது. 

கடந்த சனிக்கிழமை 8ஆம் தேதி அன்று துர்கா சிலை வழிபடுதலின் போது சில வகுப்புவாத சக்திகளால் திருக்குர்ஆன் அவமதிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாள் காலையில் அந்த பகுதி முஸ்லிம்கள் தெருவோரங்களில் குர்ஆனி பக்கங்கள் கிழிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர். முந்தைய இரவில் நடந்த பண்டிகையின் போதுதான் சில கயவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள் என்பதை அறிந்து கொண்ட முஸ்லிம்கள், நீதி வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தடியடி நடத்தி கலைத்துள்ளனர். 

ராஜஸ்தானில் தொடங்கிய பிரச்சார பொதுக்கூட்டம்..


சவாய் மதோபூர்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக அடுத்த மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகள் "சமூக நீதி மாநாடு" டெல்லியில் பிரசித்திப்பெற்ற இடமான ராம்லீலா மைதானத்தில் வைத்து நடக்க இருக்கிறது. இதன் பிரச்சாரங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலத்திலும் மாநாட்டிற்கான பிரச்சாரம் நேற்று முதல் தொடங்கியது. வரலாற்று சிறப்புமிக்க நகரமான சவாய் மதோபூரில் நேற்று சுமார் ஐயாயிரம் பேர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்துடன் மாநாட்டிற்கான பிரச்சாரம் அம்மாநிலத்தில் தொடங்கியது.



குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும் காவல்துறையும் ஊடகங்களும் : நீதிபதி மார்க்கண்டே கட்ஜு கண்டனம்



புது டெல்லி : "நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் போக்கை காவல்துறையும் ஊடகங்களும் கையாள்வது வெட்கக்கேடானது" என்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற நீதிபதியும், தற்போதைய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவருமான மார்க்கண்டே கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்தார்.