Thursday, 20 October 2011

உலகில் 85 கோடி பேர் பசியின் கொடுமையில்…


பசியாலும்ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் உலகில்85 கோடிப்பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா அறிவித்துள்ளது. ஒரு நேர உணவுக்காக ஏங்கும் சிறுவர்கள் பலர் இன்று ஏழை நாடுகளில் உள்ளனர்;. மக்கள் தொகை வளர்ச்சியை ஒப்பிடும்போதுஉணவுப் பொருட்களின் உற்பத்தி குறைவாகவே உள்ளது. உலகில் 85 கோடிப்பேர் பசியாலும்,ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 82 கோடிப் பேர்இந்தியா உள்ளிட்ட வளரும்நாடுகளை சேர்ந்தவர்கள். ஆண்டு தோறும் பட்டினியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கைமூன்று கோடியே 50லட்சத்துக்கும் அதிகம்.இந்த எண்ணிக்கையை பாதியாக குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டும்ஒவ்வொரு ஆண்டும் பட்டினி மரணங்கள் அதிகரித்து வருகின்றன. 

No comments:

Post a Comment