Monday 30 May 2011

யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர்...


உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின் 

யுவான் ரிட்லி (Yvonne Ridley), நம்மில் பலருக்கும் நன்கு தெரிந்த பெயர். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர். பத்திரிக்கையாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என்று பல பரிமாணங்களை கொண்டவர். 

இவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி சுருக்கமாக...

அது செப்டம்பர் 2001 ன் பிற்பகுதி, சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் பிரிட்டனின் சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்காக பணியாற்றிய நேரம். உலகம், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்களால் ஸ்தம்பித்திருந்த நேரம். அமெரிக்காவின் சந்தேகக் கண்கள் அப்கானிஸ்தான் மீதும், அதனை ஆளும் தாலிபான்களின் மீதும் வலுவாக விழுந்திருந்த சமயம்.

மரியம் பிச்சை மரணத்திற்கு காரணமான லாரி டிரைவர் பிடிபட்டார்...


அமைச்சர் மரியம் பிச்சை மரணத்திற்கு காரணமான லாரி பிடிபட்டது.  லாரி டிரைவரும் பிடிபட்டான்.   லாரி உரிமையாளரையும் கைது செய்து விசாரணை செய்ய போலீஸ் முடிவு செய்துள்ளது.

சென்னையில் எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு விழாவிற்காக அமைச்சர் மரியம்பிச்சை, திருச்சியில் இருந்து காரில் கடந்த 23ம் தேதி சென்றபோது, பாடாலூர் அருகே காரும், லாரியும் மோதி விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில் அமைச்சர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் மர்மம் இருப்பதால், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் முஸ்லிம் பெண் !!!

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் அவர்கள் எல்லோரும் மேற்கத்திய நாடுகளையும் , ஜப்பான், சீனாவையும் சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள். முதல் முறையாக பாலஸ்தீனத்தை சேர்ந்த பெண் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தது இருக்கிறார். இந்த சாதனையை நிகழ்த்திய முதல் முஸ்லிம் பெண் இவர் ஆவார்.

இவர் பெயர் சுசானே அல் கூபி. 44 வயதான இவர் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர் என்றபோதிலும் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்.

இவர் முதன் முதலில் தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சரோ சிகரத்தில் ஏறி, இந்த சிகரத்தில் ஏறிய முதல் அரேபிய பெண் என்ற பெருமை பெற்றார். பிறகு பிரான்சில் உள்ள பிளாங் மலைச் சிகரம், ரஷியாவில் உள்ள எல்புரூஸ் சிகரம் ஆகியவற்றில் ஏறி சாதனை படைத்தார். இப்போது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தது இருக்கிறார். 

துபாயில் உள்ள போன் அண்ட் ஜாயிண்ட் மையத்தில் துணை தலைவராக பார்த்து வந்த வேலையை மலை ஏறுவதற்காக ராஜினாமா செய்தார். உலகத்தில் முஸ்லிம் பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டுவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன் என்று கூறுகிறார். 

மோடி ஆட்சியில் "குஜராத்தில்" கடும் குடிநீர் பஞ்சம்!!


குஜராத்தில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது.

தலைநகர் அகமதாபாத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பொது குழாயில் குடிநீருக்காக பெண்கள் இப்படி காத்துக்கிடக்கின்றனர்.

மக்கள் உயிர் வாழ அடிப்படை தேவையான தண்ணீர் வசதியை ஒழுங்கு செய்து கொடுக்க முடியாதவன்தான் இனப்படுகொலை பயங்கரவாதி மோடி.

இவர்தான் இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராம்,  இந்த மாநிலம்தான் இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாம்,

ஷார்ஜாவில் வெகு சிறப்பாக நடைபெற்ற “ஆரோக்கியமான இஸ்லாமிய குடும்பம்"


எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) ஏற்பாடு செய்திருந்த “ஆரோக்கியமான இஸ்லாமிய குடும்பம்” என்ற குடும்ப நிகழ்ச்சி 22.04.11 வெள்ளியன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. ஷார்ஜாவிலுள்ள ரையான் ஸ்டார் இண்டர்நேஷனல் ஸ்கூலில் நடைபெற்ற இந்த இனிய மாலை நிகழ்ச்சியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்குபெற்று பயனடைந்தனர். முன்னதாக, திருமறை வசனங்களை ஓதி சகோ. அப்துல் கஃபூர் அவர்கள் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பின்னர் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். E.I.F.F.-ன் பணிகள் குறித்த அறிமுகவுரையை அதன் பொருளாளர் சகோ. அஷ்ரஃப் அலீ அவர்கள் நிகழ்த்தினார்.

ஊழல் புரியும் உயர் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்க சட்டம்?


புதுடெல்லி:ஊழல் புரியும் உயர் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை உள்ளிட்ட கடும் தண்டனை வழங்க லோக்பால் மசோதா வரைவில் வழிவகைச்செய்யப்படும் என கருதப்படுகிறது.
டெல்லியில் இன்று(திங்கள்கிழமை) கூடும் லோக்பால் வரைவுக் குழு கூட்டத்தில் இந்தக் கருத்து வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.

ஊழல் புரியும் அதிகாரிகளுக்கு குறைந்தது ஒருவருடமாவது தண்டனை வழங்க வழி வகைச்செய்யப்படும் என லோக்பால் மசோதா வரைவு குழுவில் இடம்பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். ஊழல் குற்றம் சாட்டப்படும் நபரின் பதவி உயர்வதுக்கு ஒப்ப தண்டனையும் கடுமையும் அதிகரிக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என அன்னா ஹஸாரேயின் தலைமையிலான மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

எகிப்து-ஈரா​ன் இடையே உறவில் முன்னேற்றம்​:மேற்குலகம் அஞ்சுகிறது​-ஈரான்


டெஹ்ரான்:எகிப்தின் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்கு பிறகு எகிப்து-ஈரான் இடையே வளர்ந்து வரும் உறவு மேற்குலகம்,அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளதாக ஈரானின் பாராளுமன்ற விவகார துறையின் துணை தலைவரான முஹம்மது ரிஸா மிர் தஜ்ஜெத்தினி தெரிவித்துள்ளார்.

எகிப்து – ஈரான் இடையே உறவு பலப்படுவது பிராந்தியத்தின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுக்குறித்து மேற்கு உலகிற்கு நன்றாக தெரியும். ஆதலால் டெஹ்ரான் – கெய்ரோ இடையேயான உறவை முறிக்க அவர்கள் என்ன விலையையும் கொடுக்க தயாராக இருப்பார்கள் என முஹம்மது ரிஸா IRNA செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகிறார். சமீபத்தில் எகிப்தின் மத – கலாச்சார துறைகளைச்சார்ந்த பிரபலமானவர்கள் ஈரானுக்கு வருகை தந்து சந்திப்பு நடத்தியதை முஹம்மது ரிஸா சுட்டிக்காட்டுகிறார்.

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் ஊழலா?

சென்னை : முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான, புதிய அரசின் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் இன்று கோட்டையில் நடக்கிறது.

இக்கூட்டத்தில் இலவச அரிசி திட்டம், திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு இலவச தங்கம் உள்ளிட்ட திட்டங்களை மக்களுக்கு சேரும் வகையில் அமல்படுத்துவது குறித்து அமைச்சர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்படும்.

பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வான மாணவ, மாணவியருக்கு லேப்-டாப் வழங்குதல், தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணயம் தொடர்பான பிரச்னை, கவர்னர் உரையில் இடம் பெறும் திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.

எத்தனை காலம்தான் "ஏமாற்றுவார்" இந்த நாட்டிலே!!

சத்தீஷ்கார் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெறுகிறது.

அந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ரூ.5-க்கு 1 கிலோ பருப்பு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

அந்த தொடக்க விழாவில் பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரி கலந்து கொண்டு திட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.

அந்த விழாவில் பேசிய நிதின் கட்காரி, உலக அளவில் தீவிரவாதம் வளர்ந்து வருவதால் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று தெரிவித்தார்.