Wednesday 31 July 2013

போலி என்கவுண்டருக்கு சி.பி.ஐ விசாரணை தொடங்க வேண்டும்! : பாப்புலர் ஃப்ரண்ட்!

டில்லி: போலி போலி என்கவுண்டருக்கு வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியிறுத்தியுள்ளது. இதுதொடர்பாக டில்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலாளர் இல்யாஸ் தும்பே அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,

Tuesday 30 July 2013

சர்வதேச குத்ஸ் தினம் - ஆகஸ்ட் 2


உலக வரைப்படத்தில் தீவிரவாதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு நாடு, தனக்கென்று வரையறுக்கப்பட்ட எல்லை கோடுகள் எதுவும் இல்லாத தேசம், தேவைப்படும்போது அப்பாவிகளின் நிலங்களை அபகரித்து தன்னுடன் இணைத்து கொள்ளும் நாடு, ஐக்கிய நாடுகளின் சபையின் தீர்மானங்களை பல முறை மீறிய நாடு, இப்படு தேவையற்ற பல சிறப்புகளை பெற்ற தேசம் தான் இஸ்ரேல். புனித பூமியான ஃபலஸ்தீன் மற்றும் முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் ஆகிய பிரதேசங்களில் இவர்கள் கொலை செய்வதற்கு தயங்காதவர்கள் இவ்று பச்சிளம் பாலகர்களையும் கொலை செய்ய தயக்கம் காட்டுவதில்லை.

Monday 29 July 2013

ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்டர் மும்மூர்த்திகள்களும் ஹிந்துத்துவ அரசியலும்!

கடந்த, சில தினங்களுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர். ரமேஷ் சேலத்தில் சில மர்ம நபர்களால், அவரது அலுவலக வளாகத்திலேய சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலைவெறி தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை, முஸ்லிம் சமூகத்துடன் இணைத்து பத்திரிகைகளும், ஊடகங்கலும் செய்தி வெளிஇடுவது சமுகத்தில் இருக்கும் நல்லிணக்கத்திற்கு இழுக்காகும்.

நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!

சேலம்: சமூகத்தை புணரமைக்கும் பணியில் பெண்களின் பங்கு இன்றியமையாதது . அதை நிறைவேற்றும் நோக்கில் தேசிய அளவில் உருவாக்கப்பட்டது தான் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட். மாதாந்திர ஒழுக்கப் பயிற்சி முகாம் , விழிப்புணர்வு பிரச்சாங்கள், கருத்தரங்குகள், குடும்ப நல ஆலோசனைகள் உட்பட பெண் சமூகத்தை முன்னேற்றும் விதமாக பல சமூகப் பணிகளை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் செய்து வருகின்றது.

காரைக்கால்: பா.ஜ.க வன்முறையால் பாதிக்கப்பட்டோரை பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் நேரில் சந்திப்பு!

காரைக்கால்: பா.ஜ.கவின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கடந்த 22.07.2013 அன்று தமிழகம் முழுவது பா.ஜ.க. பந்த் அறிவித்திருந்தது. இந்த பந்த் தோல்வியடைந்துள்ளது என்றாலும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் பா.ஜ.கவினர் வன்முறையில் ஈடுபட்டனர்.

Tuesday 23 July 2013

செனையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!

சென்னை: வருடத்திற்கு ஒரு முறை சுழற்சியாக ரமலான் மாதம் நம்மை வந்தடைகிறது. அம்மாதத்தில் பயற்சி முகாம் அமைத்து, நாம் நோன்பு நோற்க நம்மோடு தங்கியிருந்து ஆன்மீக பயிற்சியளித்து, பாவங்கள் அகற்றி, பலஹீனமான ஈமானைப் பலப்படுத்தி, தொலைநோக்கு பார்வையுடன் சமூகத்தை வழிநடத்தி, போராட்ட குணத்துடன் வெற்றியை நோக்கி அழைத்து செல்கிறது. இந்த புனித ரமலான் மாதத்தில் சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டும், சமூகத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு இடங்களில் ஜமாத்தார்களை ஒருங்கினைக்கும் விதமாக இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

பந்த் என்னும் பெயரில் பா.ஜ.க வினர் வன்முறையாட்டம்! பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

சென்னை: பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் (52) சேலத்தில் சில மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பாஜக சார்பாக இன்று (22.07.2013 ) தமிழகம் முழுவதும் முழு கடை அடைப்பிற்கு பா.ஜ.க அழைப்பு விடுத்துள்ளது. பாஜக சார்பில் நடைபெற்ற இந்த பந்தில் தமிழகம் முழுவதும் பெரும்பான்யான பகுதிகளில் வன்முறை வெடித்தது. பாஜகவின் வன்முறை நடவடிக்கைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

Friday 19 July 2013

எஸ்.டி.பி.ஐ கட்சியை கண்டு பயந்து நடுங்கும் பாஜக!


சமீபகாலமாக தமிழகத்தில் மீண்டும் காலூன்ற மதவாத கட்சியான பாரதீய ஜனதாகட்சி கடும் முயற்சி எடுத்து வருகிறது.காங்கிரஸ் கட்சிக்கு மாற்றுக்கட்சி தாங்கள் தான் எனவும்,நரேந்திர மோடிக்கு தான் பிரதமர் ஆகும் தகுதி உள்ளது என கூறிக்கொண்டு கூட்டங்கள் போடுவதும்,இந்துத்வா தலைவர்களுக்கு ஏற்படும் சொந்தப்பிரச்சனைகளை மத ரீதியாக திசை திருப்புவதும் தொடர்கதையாகி போனது. இவர்கள் தொந்தரவு தாங்க முடியாமல் காவல்துறையும் அப்பாவி பொதுஜனங்கள் மீது வழக்கு போடுவதும் பிறகு நீதிமன்றம் விடுவிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Wednesday 17 July 2013

ஸ்கூல் சலோ: 3.3 கோடி ரூபாய் பள்ளிக்கூட சாதனங்களை வழங்கியது பாப்புலர் ஃப்ரண்ட்!

புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டுதோறும் நடத்தி வரும் ஸ்கூல் சலோ திட்டத்தில் இந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக 3 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஸ்கூல் கிட்டுக்களை (பள்ளிக்கூட சாதனங்கள்) வழங்கியுள்ளது. மொத்தம் 1,16, 595 ஸ்கூல் கிட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

கோவை சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்கு ரமலான் நோன்புக்கான மளிகை பொருட்கள்!- எஸ்.டி.பி.ஐ வழங்கியது!

கோவை மத்திய சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்கு ரமலானை முன்னிட்டு அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் கோவை மாவட்ட SDPI கட்சியின் சார்பில் இன்று (17.07.2013) வழங்கப்பட்டது. 

பாப்புலர் ஃப்ரண்ட் அளித்த புகாரில் ப்ரஸ் கவுன்சில் நடவடிக்கை! - ஐ.பி, என். ஐ.ஏவுக்கு நோட்டீஸ்!

புதுடெல்லி: நற்பெயரை கெடுக்கும் வகையில் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து 10 நாளிதழ்களுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அளித்த புகாரில் ஐ.பி மற்றும் என்.ஐ.ஏவுக்கு ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. நேற்று டெல்லியில் நடந்த அமர்வில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அளித்த புகாரில் வாதம் கேட்டபிறகு நோட்டீஸ் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.

Monday 15 July 2013

பாப்புலர் ஃப்ரண்ட்-ன் பணி தொடர உங்கள் உதவிகளை வாரி வழங்குங்கள்!

 தன்னலம் பார்க்காமல் முஸ்லிம் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து போராடும் பாப்புலர் ஃப்ரண்ட் பணி தொடர உங்கள் சதக்கா,ஜகாத் மற்றும் நன்கொடைகளை வாரி வழங்குங்கள்.

Friday 12 July 2013

முத்துப்பேட்டை: மக்களுக்கு பயனில்லாத பேரூராட்சியின் திட்டம்! தடுத்து நிறுத்திய எஸ்.டி.பி.ஐ

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள பட்டறை குளம் நீண்ட நாட்களாக அசுத்தமான நிலையில் இருந்துவருகிறது. குளத்தை சுத்தம் செய்து தூறுவாரவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

Thursday 11 July 2013

தக்வாவை குறிவைப்போம்! - மாநில தலைவர் பாப்புலர் ஃப்ரண்ட்!


அல்லாஹுவின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்...

வருடத்திற்கு ஒரு முறை சுழற்சியாக ரமலான் மாதம் நம்மை வந்தடைகிறது. அம்மாதத்தில் பயற்சி முகாம் அமைத்து, நாம் நோன்பு நோற்க நம்மோடு தங்கியிருந்து ஆன்மீக பயிற்சியளித்து,பாவங்கள் அகற்றி,பலஹீனமான ஈமானைப் பலப்படுத்தி,தொலைநோக்கு பார்வையுடன் சமூகத்தை வழிநடத்தி ,போராட்ட குணத்துடன் வெற்றியை நோக்கி அழைத்து செல்கிறது.

Tuesday 9 July 2013

கூத்தாநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கல்வி உதவி தொகை விழிப்புணர்வு முகாம்!

திருவாரூர்: சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான நிதிகள் திரும்ப அனுப்பப்பட்ட நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த ஐந்து வருடங்களாக மத்திய அரசின் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான விழிப்புணர்வு மற்றும் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பயனடைந்தனர்.

வெள்ளை மற்றும் கறுப்புத் தாடிக்காரர்களின் உருவப்பொம்மையை எரித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

புதுடெல்லி: இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகளை போலி என்கவுண்டரில் அநியாயமாக படுகொலைச் செய்த சம்பவத்திற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. போலி செய்திகளை பரப்பி விசாரணை திசை திருப்புவதற்கான சில ஐ.பி அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் நடத்தும் முயற்சிகளை கேம்பஸ் ஃப்ரண்ட் கண்டித்துள்ளது.

Friday 5 July 2013

முத்துப்பேட்டையில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி SDPI கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வலியுறுத்தியும்,  பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலரை (E.O) பணி அமர்த்த கோரியும், குப்பைகளை அகற்றாமல் தொடரும் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும், சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்யாததை கண்டித்தும், SDPI கட்சி சார்பாக நேற்று (04/07/13) காலை 10.30 மணி அளவில் பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இர்ஷத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு : CBI க்கு பாப்புலர் ஃப்ரண்ட் வாழ்த்து!

புதுடில்லி: இர்ஷத் ஜஹான் மற்றும் 3 போருடைய போலி என்கவுண்டர் சம்பந்தமான உண்மைகளை வெளிக்கொண்டுவந்த சிபிஐக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முர்ஸி வெளியேற்றம், அரபுலக ஜனநாயகத்திற்கு பின்னடைவு! - பாப்புலர் ஃப்ரண்ட்!

புதுடெல்லி: எகிப்தில் முதன் முறையாக ஜனநாயக ரீதியில் தேந்தெடுக்கப்பட்ட எகிப்து ஜனாதிபதியை ஆயுத படையை (இராணுவத்தை) கொண்டு வெளியேற்றியது மிகவும் கவலைக்குரியது என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் தெவித்துள்ளார்.

பெங்களூர் குண்டு வெடிப்பு: கூட்டமைப்பினர் கர்நாடக முதலமைச்சரிடம் கோரிக்கை!

கர்நாடக : முதல்வர் சித்தாரமையாவை இன்று (04.07.2013) தமிழ்நாடு அனைத்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்தனர். அப்போது கீழ்க்கண்ட கோரிக்கைகள் முதலமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.

Thursday 4 July 2013

எகிப்த்: அறுபது வருடப் பிரச்சினைகளை ஒரு வருடத்தில் எவ்வாறு தீர்க்க முடியும்?- யூசுஃப் அல் கர்ளாவி!

ஒன்பது சாகாப்தங்கள் அடங்கிக் கிடந்த எகிப்தியர்களுக்கு ஜனநாயக முறைப்படி தேர்வான  ஜனாதிபதி முர்ஸியுடன் ஒருவருடம் பொறுமையாக இருக்க முடியவில்லை..! ராபியத்துல் அதவிய்யாஹ்வில் கூடிய எகிப்தின் சட்டபூர்வமானஅரசையும் மக்களையும் மாத்திரமல்ல தஹ்ரீரிலே குழுமி நின்று கோஷ மிட்ட எதிரணியினரையும் இலக்கு வைத்தே இராணுவம் சதிப் புரட்சியை செய்துள்ளது என்பதனை எகிப்தியர்கள் உணர நீண்ட காலம் பிடிக்காது.

இஷ்ரத் உள்ளிட்ட நால்வரின் என்கவுண்டர் போலியானது! சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 அப்பாவிகள் குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் என்பது அம்மாநில போலீசாரும் ஐ.பி யும் இணைந்து நடத்திய ‘போலி என்கவுன்ட்டர்’ நடவடிக்கை என்று சிபிஐ இன்று தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் அராஜகம்!-முஹம்மது முர்ஸியை ஆட்சியில் இருந்து நீக்கியது ராணுவம்!

கெய்ரோ: 30 வருடங்கள் நீண்ட ஹுஸ்னி முபாரக்கின் அராஜகமான சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து மக்கள் நடத்திய எழுச்சிப்போராட்டத்தின் இறுதியில் எகிப்தில் முதன் முறையாக நடந்த ஜனநாயகரீதியான தேர்தலில் பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றிப் பெற்ற முஹம்மது முர்ஸியை அந்நாட்டின் ராணுவம் ஆட்சியில் இருந்து அகற்றியுள்ளது. அதிபர் முர்ஸியை ஆட்சியில் இருந்து வெளியேற்றியதாக ராணுவம் அறிவித்துள்ளது.

2013 ம் ஆண்டிற்கான கல்வி உதவி தொகை திட்டம் அறிவித்தது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா!

புதுடெல்லி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கடந்த மூன்று மாதங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற "பள்ளி செல்வோம்" பிரச்சாரத்தின் இறுதியாக பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் மாணவர்களுக்காக கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் தங்கள் மேற்படிப்பை தடையில்லாமல் தொடர்வதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இத்திட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

Tuesday 2 July 2013

உத்தரகண்ட் நிவாரண நிதியாக ரூ. 10 லட்சம் வழங்கியது பாப்புலர் ஃப்ரண்ட்!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்தனர் இலட்சகணக்கானோர் வீடுகளை இழந்தனர்.மேலும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக