Tuesday, 28 June 2011
இ-சலான், நடமாடும் தானியங்கி சிக்னல்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
சென்னை: (டிஎன்எஸ்) இன்று (ஜுன் 28) தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் உடனடி அபராதங்களுக்கு மின்னணு ரசீது வழங்கும் திட்டத்தையும் , எளிதில் எடுத்துச் செல்லத்தக்க சூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவி முறையினையும் தொடங்கி வைத்தார்.
புதுவை சபாநாயகராக என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. சபாபதி போட்டியின்றி தேர்வு
புதுவை சட்டசபை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் சபாபதி எம்.எல்.ஏ. சட்டசபை செயலாளர் சிவ பிரகாசத்திடம் மனு தாக்கல் செய்தார். அப்போது முதல் அமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
மக்களிடம் ஆட்சியை ஒப்படைக்க ராணுவ ஆட்சியாளர்கள் விருப்பம்
எகிப்தில் விரைவில் தேர்தல் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியிடம் பொறுப்பை ஒப்படைக்க ராணுவ ஆட்சியாளர்கள் விருப்பம் தெரிவித்து இருப்பதாக அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஜான் மிக்கெய்ன் தெரிவித்துள்ளார்.
தற்போது ஆட்சி செய்து வரும் ராணுவ ஆட்சியாளர்கள் முபாரக்கிற்கு ஆதரவானவர்கள், ஆதலால் விரைவில் அவர்களை ஆட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும். புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் வரை தேர்தல் நடத்த தாமதம் செய்தால் இது இஸ்லாமிய கட்சிகளுக்கு ஆதரவாகிவிடும் என்று மதச்சார்பற்ற மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

திருவாரூர் மாவட்ட பி.ஆர்.ஓ. பொறுப்பேற்பு
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக எம். ராஜேந்திரன் (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த இவர் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வந்தார். அண்மையில் தமிழக அரசு தமிழகம் முழுவதும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.
இதில் திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியிட மாறுதல் பெற்ற ராஜேந்திரன், திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இங்கு பணியாற்றிய செந்தில்குமார் திண்டுக்கல் மாவட்டத்துக்கு பணியிட மாறுதலில் சென்றார்.

சோட்டா ராஜன் உத்தரவால் பத்திரிகையாளரைக் கொன்றோம்
பத்திரிகையாளர் ஜோதிர்மய தேவ் கொலை வழக்கு தொடர்பாக மும்பையில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட 7 பேர். (வலது) கொலையாளிகள் பயன்படுத்திய ஆயுதங்கள்
மும்பை, ஜூன் 27: எண்ணெய் மாஃபியா கும்பலால் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட பத்திரிகையாளர் ஜோதிர்மய தேவ் கொலை வழக்கு தொடர்பாக 7 பேரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சட்டத்தின் ஓட்டைகள்!
நமது நாட்டில் சட்டம் இயற்றுவதில் நாம் காட்டும் சுறுசுறுப்பையும் வேகத்தையும் அந்தச் சட்டங்களை முறைப்படி நடைமுறைப்படுத்துவதில் காட்டுவதில்லை என்பதற்குப் பல உதாரணங்களைக் கூற முடியும். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உணவு என்று கடந்த ஐந்து ஆறு வருடங்களில் மெய்சிலிர்க்க வைக்கும் பல சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இதனாலெல்லாம் பட்டினி கிடப்பவர்களின் எண்ணிக்கையோ, பள்ளிக்குப் போகாத குழந்தைகளின் எண்ணிக்கையோ குறைந்திருக்கிறதா என்பது உலகறிந்த ரகசியம்.
மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து வீடியோ ஆதாரங்களுடன் சைதை துரைசாமி வழக்கு
சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் மோசடி செய்து மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வீடியோ ஆதாரங்களுடன் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சைதை துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய்
டெல்லி: இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறைச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது இவர் பிரான்ஸ் நாட்டுக்கான இந்தியத் தூதராக உள்ளார்.
வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த நிருபமா ராவ் அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவர் அமெரிக்காவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட உள்ளார்.
வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த நிருபமா ராவ் அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவர் அமெரிக்காவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட உள்ளார்.
லிபிய அதிபர் மும்மர் கடாபிக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட்
லிபிய அதிபர் மும்மர் கடாபி, அவரது மகன் சைப் அல் இஸ்லாம், உளவுத்துறைத் தலைவர் அப்துல்லா அல் சனுசி ஆகியோருக்கு கைது வாரண்ட்டை பிறப்பித்துள்ளது தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்.
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தியதாகவும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி உத்தரவிட்டதாகவும் கடாபி மீது நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தியதாகவும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி உத்தரவிட்டதாகவும் கடாபி மீது நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
வகுப்புவாத வன்முறையின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும்-எகிப்து
கெய்ரோ:எகிப்தில் அண்மையில் நடந்த வகுப்புவாத வன்முறையின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் செயல்பட்டுள்ளதாக எகிப்தின் துணைப்பிரதமர் யஹ்யா அல் ஜமால் தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சியை தடுப்பதற்காக இவ்விரு நாடுகளும் வகுப்புவாதத்தை வளர்த்துவதாக அவர் தேசிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சீனாவில் பிரபல மனித உரிமை ஆர்வலர் விடுதலை
சீனாவின் பிரபல மனித உரிமை ஆர்வலர் ஹூ ஜியா மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். எதிர்காலத்தில் தாம் மிகுந்த கவனத்துடன் இருப்பேன் என அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் எனது பெற்றோர், எனது மனைவி மற்றும் எனது குழந்தை ஆகியோருக்காக நிறைய செய்ய வேண்டி உள்ளதை உணர்ந்தேன். எனது குடும்பத்தினருக்காக ஒன்றுமே செய்யவில்லை என நெகிழ்ச்சியுடன் அவர் கூறினார்.
Subscribe to:
Posts (Atom)