Tuesday 28 June 2011

கம்போடியா இனப்படுகொலை வழக்கு

கம்போடியாவில்  இடம்பெற்ற
இனப்படுகொலைக்காக விசாரணை நடத்தும்
நீதிமன்றம் தலைநகர் நாம்பென்னில்
விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பொல்பொட் தலைமையிலான கெமரூஜ் என்ற கம்யூனிசக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் 1970களின் இறுதியில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் கம்போடியர்கள் கொல்லப்பட்டனர்.


கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல், பசி பட்டினி மற்றும் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் என பல விடயங்கள் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரி்க்க காரணமானது.

பல தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில், கெமரூஜ் கட்சியைச் சேர்ந்த, இன்று உயிருடன் இருக்கின்ற நான்கு மூத்த உறுப்பினர்கள், ஐநாவின் அனுசரணை தீர்ப்பாயத்துக்கு முன்னால் நிற்கின்றார்கள். ஆரம்ப கட்ட விசாரணைகள் இந்த வாரம் ஆரம்பித்துள்ளது.

நால்வரும் தம் மீதான
குற்றச்சாட்டுக்களை மறுக்கின்றனர்
இன்று வயது முதிர்ந்த நிலையில், நீதியின் விசாரணையில் இருக்கின்ற, இந்த மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் ஒரு காலத்தில் கம்போடியாவில் மிகவும் அதிகாரமும் செல்வாக்கும் மிக்க நபர்களில் சிலர்.

தலைவருக்கு அடுத்தபடியா இரண்டாவது இடத்தில் இருந்த ‘ப்ரதர் நம்பர் டூ’ என்று அழைக்கப்பட்ட நுவோன் ச்சீயெ இவர்களில் ஒருவர். கெமரூஜ் வெளியுறவுத்துறை அமைச்சர் இயேங் சாரி இவர்களில் இன்னொரு முக்கியமான புள்ளி.

நான்கு ஆண்டு கால கெமரூஜ் ஆட்சியில் புரியப்பட்ட கொடுமைகளுக்காக இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக இப்போது இவர்கள் மீது நீதி விசாரணை வந்திருக்கின்றது.

1998 இல் உயிரிழந்த
கெமரூஜ்தலைவர் பொல் பொட்
இந்த வழக்கில் நாலாயிரம் பேர் சிவில் தரப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அதாவது அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட இவர்களின் சாட்சியங்களும் வழக்கு விசாரணைகளின் போது பதிவு செய்யப்படவுள்ளன.

இந்த வழக்கு விசாரணைகள் நீண்ட காலம் எடுக்கின்றன என்பது தான் பெரிய கவலையாக இருக்கின்றன. இந்த சிறப்பு தீர்ப்பாயம் பணியாற்றத் தொடங்கி ஆறு ஆண்டுகளாகி விட்டன. வழக்கு விசாரணைகள் பூர்த்தியடைய இன்னும் பல ஆண்டுகள் எடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment