Tuesday 28 June 2011

தமிழக அமைச்சரவையில் மாற்றம்- சிறுபான்மை நலத்துறை புதிய அமைச்சராக முகம்மது ஜான் நியமனம்

தமிழக அமைச்சரவையில் இன்று சிறிய அளவிலான மாற்ற் மேற்கொள்ளபப்ட்டது. புதிய அமைச்சராக ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. முகம்மது ஜான் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் புதன்கிழமை பதவியேற்கிறார்.



 
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் மரியம் பிச்சை. ஆனால் எம்.எல்.ஏவாக பதவியேற்பதற்கு முன்பாகவே அவர் சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.

இந்த நிலையில் தற்போது அவரது இலாகாவுக்கு புதிய அமைச்சரை முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.

ராணிப்பேட்டையிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முகம்மது ஜான் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக செயல்படுவார். புதன்கிழமையன்று இவர் பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

இலாகாக்கள் மாற்றம்

இதேபோல வேறு சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளன.

மு.சி.சம்பத் வசம் இருந்த ஊரக வளர்ச்சித்துறை சி.சணமுகவேலுவுக்குத் தரப்பட்டுள்ளது. எஸ்.பி. வேலுமணி வகித்து வந்த திட்ட அமலாக்கம் சம்பத்திடம் தரப்பட்டுள்ளது.

சண்முகவேலுவிடம் இருந்த தொழில்துறை எஸ்.பி.வேலுமணிக்கு தரப்பட்டுள்ளது.

கால்நடை மற்றும் பால்வளத்துறை கருப்பசாமியிடமிருந்து என்.ஆர்.சிவபதிக்கும், சிவபதியிடமிருந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை கருப்பசாமிக்கும் தரப்பட்டுள்ளது.

டி.எம்.சின்னையா சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை அமைச்சராக நீடிப்பார். மரியம் பிச்சை வகித்து வந்த துறைகளை இவர்தான் இத்தனை நாட்களாக கூடுதல் பொறுப்பாக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment