சீனாவின் பிரபல மனித உரிமை ஆர்வலர் ஹூ ஜியா மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். எதிர்காலத்தில் தாம் மிகுந்த கவனத்துடன் இருப்பேன் என அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் எனது பெற்றோர், எனது மனைவி மற்றும் எனது குழந்தை ஆகியோருக்காக நிறைய செய்ய வேண்டி உள்ளதை உணர்ந்தேன். எனது குடும்பத்தினருக்காக ஒன்றுமே செய்யவில்லை என நெகிழ்ச்சியுடன் அவர் கூறினார்.
சீனாவின் நல்ல குடிமகனாக நிர்வாக முறையுடன் மோதல் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என பெற்றோர் அறிவுறுத்தி உள்ளனர். அரசு அதிகாரத்தில் மக்களின் கௌரவ நிலை மீறப்படுகிறது.
எனது பெற்றோருக்கு நான் சொல்வது எல்லாம் எதிர்காலத்தில் நான் கவனமாக இருப்பேன் என்பது தான் என்று அந்த இளம் மனித உரிமை ஆர்வலர் உறுதி மிக்க குரலில் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை சீன நிர்வாகத்தினர் இவரை விடுதலை செய்தனர். சீன அரசுடன் சர்ச்சை ஏற்படுத்திய சீனக் கலைஞர் அய்வெய் விடுதலை செய்யப்பட்ட சில நாட்களில் இவர் விடுதலை ஆகி உள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அந்த போட்டிக்கு முன்பாக சீனாவின் மனித உரிமைகள் குறித்து 37 வயது ஹூ தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதினார். நாட்டில் பிரிவினையைத் தூண்டுவதாக சீன அரசு அவரை கைது செய்து மூன்றரை ஆண்டுகள் சிறையில் வைத்தது.
No comments:
Post a Comment