Tuesday, 17 September 2013

8 மாவட்ட காவல்துறையின் உச்சக்கட்ட பாதுகாப்பில் முத்துப்பேட்டை! -இது தேவையா?

முத்துப்பேட்டையில் இன்று விநாயகர் ஊர்வலம் நடைபெறுவதையொட்டி, திருவாரூர், நாகை, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், புதுகோட்டை, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களின் காவல்துறையின் உச்சக்கட்ட பாதுகாப்பில் இருக்கின்றது மற்றும்  ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனமும் இன்று முத்துப்பேட்டையை நோக்கி இருக்கின்றது.


சுமார் 100 டி.எஸ்.பி, 200 இன்ஸ்பெக்டர், 300 சப் இன்ஸ்பெக்டர், 1 ஐ.ஜி, 1 டி.ஐ.ஜி, 2 எஸ்.பி. என மொத்தம் 3500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

19 சிலையை கரைப்பதற்கு இவ்வளவு பெரிய பரபரப்பும், பாதுகாப்பும், மக்களின் வரி பணம் செலவு செய்ய படுவதும் தேவைதானா? என்ற கேள்வி முத்துப்பேட்டை மக்களிடத்தில் நிலவி வருகிறது.

இந்த ஊர்வலத்தின் பாதுகாப்பிற்காக மட்டும் பல லட்சம் ருபாய் செலவு செய்யபடுகிறது. அதுமட்டுமல்லாமல் அன்றாடம் வேலை பார்த்து பொழப்பை நடத்திவரும் தொழிலாளிகளின் வாழ்வாதாரம் முடக்கபடுகிறது. வியாபாரிகளும் வியாபாரம் செய்ய முடியாத நிலை, பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர்கள் பயப்படும் நிலை, இப்படி இந்த ஊர்வலத்தின் மூலம் ஊர் மக்கள் அனைவருக்கும் மிகுந்த வேதனையையும், கஷ்டத்தையும் ஏற்படுகின்றது.

இப்படி அணைத்து மக்களின் இயல்பு வாழ்கையை பாதிக்க செய்து, 8 மாவட்ட காவல்துறையை ஊருக்கு அழைத்து, மக்களின் பணத்தை வீணாக செலவு செய்து, ஊரை பரபரப்பாக்கி, சுமார் 10 கி.கீ. கடந்து வந்து  அந்த சிலையை கரைக்கவேண்டுமா? என்பது முத்துப்பேட்டை மக்களின் கேள்வியாக உள்ளது.

எனவே தமிழக அரசு தலையிட்டு முறையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வளவு செலவு செய்யாமலும், பரபரப்பை ஏற்படுத்தாமலும்  அவர்களின் அருகாமையிலேயே சிலையை கரைபதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த ஊர்வலத்தின் மூலம் ஆதாயம் தேட நினைபவர்கள் மீது முறையான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு செய்தால் மட்டுமே முத்துப்பேட்டை அமைதி பூங்காவாக மாறும் என்று மக்கள் திடமாக நம்புகின்றனர்.

No comments:

Post a Comment