Thursday 4 July 2013

எகிப்த்: அறுபது வருடப் பிரச்சினைகளை ஒரு வருடத்தில் எவ்வாறு தீர்க்க முடியும்?- யூசுஃப் அல் கர்ளாவி!

ஒன்பது சாகாப்தங்கள் அடங்கிக் கிடந்த எகிப்தியர்களுக்கு ஜனநாயக முறைப்படி தேர்வான  ஜனாதிபதி முர்ஸியுடன் ஒருவருடம் பொறுமையாக இருக்க முடியவில்லை..! ராபியத்துல் அதவிய்யாஹ்வில் கூடிய எகிப்தின் சட்டபூர்வமானஅரசையும் மக்களையும் மாத்திரமல்ல தஹ்ரீரிலே குழுமி நின்று கோஷ மிட்ட எதிரணியினரையும் இலக்கு வைத்தே இராணுவம் சதிப் புரட்சியை செய்துள்ளது என்பதனை எகிப்தியர்கள் உணர நீண்ட காலம் பிடிக்காது.

இஷ்ரத் உள்ளிட்ட நால்வரின் என்கவுண்டர் போலியானது! சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 அப்பாவிகள் குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் என்பது அம்மாநில போலீசாரும் ஐ.பி யும் இணைந்து நடத்திய ‘போலி என்கவுன்ட்டர்’ நடவடிக்கை என்று சிபிஐ இன்று தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் அராஜகம்!-முஹம்மது முர்ஸியை ஆட்சியில் இருந்து நீக்கியது ராணுவம்!

கெய்ரோ: 30 வருடங்கள் நீண்ட ஹுஸ்னி முபாரக்கின் அராஜகமான சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து மக்கள் நடத்திய எழுச்சிப்போராட்டத்தின் இறுதியில் எகிப்தில் முதன் முறையாக நடந்த ஜனநாயகரீதியான தேர்தலில் பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றிப் பெற்ற முஹம்மது முர்ஸியை அந்நாட்டின் ராணுவம் ஆட்சியில் இருந்து அகற்றியுள்ளது. அதிபர் முர்ஸியை ஆட்சியில் இருந்து வெளியேற்றியதாக ராணுவம் அறிவித்துள்ளது.

2013 ம் ஆண்டிற்கான கல்வி உதவி தொகை திட்டம் அறிவித்தது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா!

புதுடெல்லி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கடந்த மூன்று மாதங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற "பள்ளி செல்வோம்" பிரச்சாரத்தின் இறுதியாக பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் மாணவர்களுக்காக கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் தங்கள் மேற்படிப்பை தடையில்லாமல் தொடர்வதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இத்திட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.