Tuesday 31 May 2011

பெற்றோரின் கவனக்குறைவால் 3 வயது சிறுவன் பூட்டிய காருக்குள் மரணம்!


சென்னை பல்லாவரம் புறநகர் பகுதியில் வசிக்கும் நியாமதுல்லா (37) மற்றும் அவரது மனைவி மும்தாஜ் பேகம் (36) உறவினரின் மரணத்தையொட்டி துக்கம் விசாரிக்க திருவிக நகருக்கு தங்கள் மூன்று வயது மகன் அஸ்மதுல்லாவுடன் சென்றுள்ளனர்.
பகல் 1:00 மணியளவில் உறவினரின் வீட்டுக்குச்சென்ற அவர்கள், மகன் காரில் உறங்கியதைக் கவனிக்காமல் கணவருடன் சென்றிருக்கூடும் என்று மனைவியும், மனைவியுடன் இருக்கக்கூடும் என்று கணவரும் நினைத்துக் கொண்டு இருந்துள்ளனர்.

துக்கவீட்டில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இருவரும் மூன்றுமணி நேரம் கழித்தே சந்தித்துள்ளனர். அப்போது குழந்தை எங்கே என்று ஒருவரை ஒருவர் விசாரிக்கும்போதுதான் பின்சீட்டின் உறங்கியதை உணர்ந்து பதறியபடி காரை நோக்கிச்சென்றுள்ளனர்.

சிறுமியை கற்பழித்த இருவருவருக்கு நடுத்தெருவில் தூக்குதண்டனை!


ஈரான் நாட்டில் 9 வயது சிறுமியை கற்பழித்த இருவருக்கு நடுத்தெருவில் மக்கள் பார்வையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான மற்றும் விபச்சார வழக்கிற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். சில மாதங்களுக்கு முன் 9 வயது சிறுமியை கற்பழித்து அதை வீடியோ எடுத்த வழக்கில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நேற்று தெருவில் மக்கள் முன்னிலையில் வைத்து தூக்கு நிறைவேற்றப்பட்டது. காவல்துறை வாகனத்தின் மேல் இருவரையும் நிற்க வைத்து பின் தூக்கில் தொங்கவிட்டு பின் வாகனம் நகற்றப்பட்டது. பின் உயிர் பிரிந்தப்பின் இருவது உடலையும் சிறுது நேரம் தொங்கவிடப்பட்டு பின் காவல்துறையினர் உடலை கொண்டு சென்றனர். இதை ஆயிரகணக்கான மக்கள் பார்த்தனர்.

இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள்!

உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து 1987 ம் ஆண்டு மே மாதம் 31 ஆம் நாளை சிறப்பு நாளாக அறிவித்தது.

உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது. 

பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் இரண்டாவது இடம் பிடித்தவர்க்கு பாப்புலர் ப்ரண்ட் பாராட்டு...


பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மேலப்பாளைய மாணவன் சதாம் உசேன் மாநில அளவில் 495  மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மேலும் மாவட்ட அளவில் முதலும் பிடிதுள்ளார்.நெல்லை மாவட்ட பாப்புலர் ப்ரண்ட் சார்பாக  இவரை பாராட்டிகேடயமும் பரிசும் வழங்கியது .இந்த நிகழ்ச்சியில் பாப்புலர் ப்ரண்ட் மாவட்ட செயலாளர் ஹைதர் அலி, நகர தலைவர் மூஸல் காலிம் .நகர செயல்குழு உறுப்பினர் பால் மைதீன் ஆகியோர் கலந்து கொண்டு அந்த மாணவனை வாழ்த்தினர்.

பள்ளி செல்வோம் விழிப்புணர்வு பேரணி...


பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூரில் பள்ளி செல்வோம் பிரச்சார பேரணி நடைபெற்றது. கடந்த‌ 29.05.2011 அன்று மாலை 3 மணி அளவில் இப்பேரணி நடைபெற்றது. வி.களத்தூர் சந்தை அருகில் இருக்கின்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகம் அருகிலிருந்து இப்பேரணி தொடங்கியது.  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தற்போது மேற்கொண்டு வரும் பிரச்சாரம் "பள்ளி செல்வோம்" என்பதாகும்.


இந்த இரு மாதங்களுக்கு நாடு முழுவதும் கல்வி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள்,

நல்லெண்ணையும் அதன் மருத்துவ குணமும்!!


*  நல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது.

எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

*  நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.

அல் குத்ஸ் ஆக்கிரமிக்கப்பட்டு 44 ஆண்டுகள்...


அல்குத்ஸ் – பைத்துல் முகத்தஸ் – இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால்  ஆக்கிரமிக்கப்பட்டு   44 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது அதை நினைவு கூறும் முகமாக பலஸ்தீன் வாலிபர் அமைப்பு -The Muslim Youth Association- நாடு பூராவும் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள்,  பேரணிகள் ஆகியவற்றை நடாத்துமாறு பலஸ்தீன மக்களை கோரியுள்ளது.    எதிர் வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி பலஸ்தீன் கிழக்கு ஜெருசலத்தில் அமைந்துள்ள அல் குத்ஸ் – பைத்துல் முகத்தஸ்- முஸ்லிம் உம்மாஹ்வின் முதல் கிப்லா,   ஜெருசலம், மேற்கு கரை ஆகியன 1967 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.

Know Islam இஸ்லாத்தை அறிந்து கொள்வோம் : தென்காசி கருத்தரங்கம்


know islam workshop
A part of the women audience of Know islam workshop held at Tenkasi (TN)

இஸ்லாத்தை அறிந்து கொள்வோம் எங்கின்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் தென்காசியில் மே 29 அன்று விடிஎஸ்ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது. சுமார் 500 பேருக்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று பயனடைந்துள்ளனர்.
நம்மை சீரமைப்போம் என்கிற தலைப்பில் ஜாஃபர் அலி உஸ்மானி அவர்கள் தனி மனித ஒழுக்கத்தின் அவசியம் குறித்தும் அவை செம்மையாக சீராக பேணப்படாமல் விட்டுவிடப்பட்டால் சீரழிந்து போய்விடும் என்பதை தக்க உதாரணத்துடன் விளக்கினார். ஒரு விவசாய நிலம் முறையாக உழுது களையெடுக்கப்பட்டு நீர் பாசனத்தை சரியான தருணத்தில் பாய்ச்சி கண்ணும் கருத்துமாக உரமிட்டு பயிரிட்டு அருவடை செய்தால் தான் அந்த விவசாயிக்கு எதிர்பார்த்த பலனைத்தரும் அதே போல குழந்தைகளையும் சீரும் சிறப்புமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தொடர வேண்டும் இதுபோன்ற பேச்சுவார்த்தைகள்!


May 31, சில நாட்களுக்கு முன் பங்களாதேசில் நடந்த கிரிகெட் போட்டியில்,
இந்திய பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பின் நல்ல தொடக்கமாக,

இன்று இரு நாட்டின் தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

மாவீரன் கர்கரே உடைய மரணத்திருக்கு முன் இதுபோல் பேச்சுவார்தைகள் நடக்கும்போதெல்லாம் இந்தியாவில் எங்காவது குண்டுவெடிப்புகள் நடக்கும்.