Tuesday, 31 May 2011

சிறுமியை கற்பழித்த இருவருவருக்கு நடுத்தெருவில் தூக்குதண்டனை!


ஈரான் நாட்டில் 9 வயது சிறுமியை கற்பழித்த இருவருக்கு நடுத்தெருவில் மக்கள் பார்வையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான மற்றும் விபச்சார வழக்கிற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். சில மாதங்களுக்கு முன் 9 வயது சிறுமியை கற்பழித்து அதை வீடியோ எடுத்த வழக்கில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நேற்று தெருவில் மக்கள் முன்னிலையில் வைத்து தூக்கு நிறைவேற்றப்பட்டது. காவல்துறை வாகனத்தின் மேல் இருவரையும் நிற்க வைத்து பின் தூக்கில் தொங்கவிட்டு பின் வாகனம் நகற்றப்பட்டது. பின் உயிர் பிரிந்தப்பின் இருவது உடலையும் சிறுது நேரம் தொங்கவிடப்பட்டு பின் காவல்துறையினர் உடலை கொண்டு சென்றனர். இதை ஆயிரகணக்கான மக்கள் பார்த்தனர்.
ஈரானில் இருந்து வெளிவரும் பத்திரிக்கையான ஈமா (IMA) கூடியிருந்த பொதுமக்கள் 'இந்த தீர்ப்புக்கு நன்றி தெரிவித்தாக' செய்தி வெளியிட்டுள்ளது. ஊடங்கள் அடிப்படையில் கணக்கிட்டால் இந்த வருடத்தின் 145வது மரண தண்டனை இதுவாகும் என்று 'அசோசியேட்டட் பிரஸ்' தெரிவித்துள்ளது. சென்ற வருடம் 179 மரண தண்டனை ஈரானில் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன, ஆனால் இதை விட அதிக மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக மனித உரிமை கழகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான், அதிக மரண தண்டனைகள் வழங்கும் நாடாக உலக அளவில் முதலில் இருக்கும் சினாவிற்கு அடுத்தபடியாக உள்ளது குறிப்பிடதக்கது. 

No comments:

Post a Comment