Tuesday, 14 May 2013
அறிவில்லாமல் வெளியுறவு கொள்கை குறித்து பேசுவதா?: மோடி மீது குர்ஷித் காட்டம்!
சூரத்: "தமக்கு சம்பந்தப்படாத விசயங்களில் போதிய அறிவில்லாமல் மோடி பேசக்கூடாது" இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மோடியைக் காட்டமாக விமர்சித்து பேசியுள்ளார். குஜராத் மாநில 53-வது ஆண்டு தினத்தையொட்டி அமெரிக்காவில் உள்ள குஜராத் மக்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் மோடி பேசும்போது, "சீனா விவகாரத்தில் காங்கிரஸ் அரசின் வெளியுறவுக் கொள்கை, 120 கோடி இந்திய மக்களின் நம்பிக்கையை தகர்த்துவிட்டது" என்று விமர்சனம் செய்திருந்தார்.
கைபர்-பக்துன்கவா சட்ட சபையில் ஆட்சி அமைக்கும் இம்ரான்கான் தலிபான்களின் நெருக்கடியை சமாளிப்பாரா?
கைபர்-பக்துன்கவா சட்ட சபையில் ஆட்சி அமைக்கும் இம்ரான்கான் தலிபான்களின் நெருக்கடியை சமாளிப்பாரா? என அரசியல் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி 35 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து கட்சி தொடங்கிய 17 ஆண்டுகளில் இம்ரான்கான் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார்.
Subscribe to:
Posts (Atom)