தொழில் கூட்டாளி மோசம் செய்துவிட்டதால் இந்தியாவை சேர்ந்த ஒருவர் தனது 3 வயது மகளுடன் 6 மாத காலமாக பஹ்ரைன் வீதிகளில் தங்கி வரும் செய்தி அந்நாட்டின் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
இந்தியாவை சேர்ந்தவர் முகம்மது சிக்கந்தர் சாம்ராட். இவரது மனைவி அனிஷா. பஹ்ரைனில் நர்சாக வேலை செய்து வந்தார்.பஹ்ரைன் நாட்டுக்காரர் ஒருவருக்கு கிரானைட் மற்றும் மார்பிள் கற்களை வாங்கி தரும் தரகராக சிக்கந்தர் சாம்ராட்டும் பஹ்ரைனில் தங்கி தொழில் செய்து வந்தார்.
இவரது தொழில் கூட்டாளி சுமார் 65 ஆயிரம் பஹ்ரைன் தினார்களை மோசடி செய்துவிட்டார். அதனால், 2010ம் ஆண்டு பிறந்த மகளுக்கு பணம் இல்லாத காரணத்தால் பாஸ்போர்ட் வாங்க முடியாமல் போனது.
இதற்கிடையில், மனைவியின் நர்ஸ் வேலைக்கான ஒப்பந்தமும் காலாவதியாகி விட்டது. குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாத சாம்ராட், மனைவி, பிள்ளைகளை இந்தியாவுக்கு அனுப்பிவிட முடிவு செய்தார்.
கடைசி மகளுக்கு பாஸ்போர்ட் எடுக்காததால் அவளை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டு மோசடி செய்த பஹ்ரைன் ஆசாமி மீது கோர்ட்டில் வழக்கு போட்டு விட்டு நீதி தேவனின் தீர்ப்புக்காக காத்திருக்கிறார். வக்கீலுக்கு கொடுக்க பணம் இல்லாததால் பல வக்கீல்கள் இவரது வழக்கில் ஆஜராகாமல் இழுத்தடித்துக்கொண்டு வருகின்றனர்.
குடித்தனம் இருக்கும் வீட்டின் வாடகை பாக்கி ஆயிரம் தினாருக்கு மேல் ஏறிவிட்ட நிலையில் 3 வயது மகளை பார்த்துகொள்ள யாரும் இல்லாததால் வேலைக்கு கூட செல்லாமல் பூங்கா, மசூதி, கார் நிறுத்துமிடம் என கடந்த 6 மாத காலமாக சரியான உணவு இல்லாமல் சிக்கந்தர் வெட்டவெளியில் மகளுடன் காலம் கடத்தி வருகிறார்.
No comments:
Post a Comment