Friday 2 December 2011

இஸ்லாத்திக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களுக்கு துருக்கிபிரதமர் கண்டனம் தெரிவிப்பு...



இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரங்கள் துருக்கி எதிர்ப்புத்தெரிவித்துள்ளதுடன், மேற்குநாடுகளில் ஏற்பட்டுள்ள இஸ்லாத்தின் மீதான அச்சத்தை இல்லாதொழிப்பதற்காக முஸ்லிம்கள் ஒன்றுபடுமாறும் அந்நாட்டுப் பிரதமர் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.சில மேற்கத்தைய சக்திகளினால் இஸ்லாத்திக்கு எதரான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன் முஸ்லிம்களை பயங்கரவாதம்,மற்றும் மோதல்கள் போன்றவைகளுடன் அவைகள் தொடர்புபடுத்தி வருதாகவும் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான ஆபிரிக்க நாடுமற்றும் முஸ்லிம் நாடுகளை உள்ளடக்கிய தலைவர்களின் மகாநாட்டில் இரண்டாவது நாளன்று உரை நிகழ்த்தும்போது அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக்கும் ஊடகங்கள்...



பாட்னா: பீஹா மாநிலம் மதுபானி மாவட்டதில் கடந்த 24ஆம் தேதி ஜமாலி மற்றும் முஹம்மது அஜ்மல் ஆகிய இரு இஇளைஞர்களை டெல்லி காவல்துறையினர் அப்பகுதி காவல்துறையினரின் உதவியோடு  கைது செய்தனர். அவர்கள் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது? அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை டெல்லி காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் சில பத்திரிக்கைகள் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தீவிரவாதத்தோடு தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்டுள்ளனர். 
 

பாப்புலர் ஃப்ரண்ட் : முஸ்லிம் சமூகத்திற்கான ஒரே தீர்வு!


முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் நவம்பர் 27, 2011 ஆம் தேதி பொன் எழுத்துக்களால் பதியப்படவேண்டிய நாள். புதுடெல்லி புகழ்பெற்ற ராம்லீலா மைதானத்தில் 27ஆம் தேதி குவிந்த மக்கள் வெள்ளம் ஆதிக்க சக்திகள் மற்றும் வகுப்புவாத சக்திகளின் முடிவு நாள் நெருங்கிக்கொண்டே வருவதை உணர்த்துவதாக அமைந்தது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய “சமூக நீதி மாநாடு” என்ற நிகழ்ச்சிதான் வட இந்தியாவில் அதுவும் ராம்லீலா மைதானத்தில் முஸ்லிம்களால் நடத்தப்பட்ட மிகப்பெரும் நிகழ்ச்சி என்ற செய்தி வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. தென் இந்தியாவைக் காட்டிலும் வட இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது. பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற‌ எல்லாதுறைகளிலும் பின் தங்கியே இருக்கும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மிகப்பெரும் சவாலாக இருப்பது அரச பயங்கரவாதமும், வகுப்புவாத சக்திகளுமேயாகும்.
ராஜஸ்தான், பீஹார், அஸ்ஸாம், உத்திரபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் வாழும் முஸ்லிம்களின் நிலை கொடுமையானது. நித்தம் நித்தம் கல்வரம், பல்லாயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கொடூரமான முறையில்