Muthupet PFI : காபூல் நகர மேயராக சுருங்கியுள்ள ஹமீத் கர்ஸாஈ 2001 இல் அமெரிக்கா ஆப்கானை ஆக்கிரமித்தபோது அமெரிக்கக் காங்கிரஸின் தலையாட்டி பொம்மையாக நிலைநிறுத்தப்பட்டார். ஆப்கான் குண்டுகள், மனிதப் பிணங்கள் இரத்தக் கறைகள் படிந்த தேசமாகவே உடைத்து உருமாற்றப்படுகின்றது. தெற்காசியாவில் எழுச்சிபெறும் இஸ்லாமிய அலைகளை தடுத்து நிறுத்த 90 களில் சி.ஐ.ஏ. தீட்டிய திட்டமும் இன்றைய பயங்கரவாதத்திற்கெதிரான ஒபாமாவின் போரும் கருத்திலும் உள்ளடக்கத்திலும் எவ்விதத்திலும் வேறுபடவில்லை. வரலாறு நிச்சயம் இவர்களை மன்னிக்காது.
Monday, 6 June 2011
பாபா ராம்தேவின் உண்ணாவிரதம்: காமெடியா, அழுகாச்சி காவியமா?
“இது இரண்டாம் ஜாலியன்வாலாபாக்” என்கிறார்கள் பாபா ராம் தேவ்வின் பக்தர்கள்…
“இது இரண்டாம் எமர்ஜென்சி; முந்தயதை எப்படி எதிர்த்தோமோ அப்படியே இதையும் எதிர்ப்போம்” என்று அறிவித்துள்ளது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.
இவர்கள் கொடுக்கும் பில்டப்பைக் கண்டு யாரும் மிரண்டு விட வேண்டாம்.. இந்த சவடால்களின் பின்னணியை சுருக்கமாக பார்க்கலாம்.
அதாகப்பட்டது தில்லி ராம் லீலா மைதானத்தில் கருப்புப் பணத்தை மீட்க அரசை நடவடிக்கை எடுக்கக் கோரி பதினெட்டு கோடி செலவில் உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவையும் அவரது அடிப்பொடிகளையும் கடந்த சனிக்கிழமை இரவு போலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர். அப்போது சில கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசியவுடனேயே அங்கிருந்த மான்கரேத்தே வீரர்கள் குபீர் என்று பாய்ச்சல் காட்டியுள்ளனர். இந்த புறமுதுகுப் போரின் விளைவாய் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
ராம் தேவுக்கு காவியைவிட வெள்ளையே பெட்டர்: லாலு!
ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்ட பிரபல யோகா சாமியார் பாபா ராம்தேவுக்கு காவி உடையை விட வெள்ளை உடையே பொருத்தமானது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
பாபா ராம்தேவ் குறித்து கருத்துக் கூறிய லாலு பிரசாத், ஒரு சாது எவ்வாறு பேச வேண்டுமோ அவ்வாறு ராம்தேவ் பேசவில்லை என்று கூறினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன்னுடைய வேலைகளுக்காக பாபா ராம்தேவை பயன்படுத்திக் கொள்கிறது என்பது மிகவும் ஆபத்தானது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாபா ராம்தேவை முன்னிலைப்படுத்த முயல்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பாபா ராம்தேவ் குறித்து கருத்துக் கூறிய லாலு பிரசாத், ஒரு சாது எவ்வாறு பேச வேண்டுமோ அவ்வாறு ராம்தேவ் பேசவில்லை என்று கூறினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன்னுடைய வேலைகளுக்காக பாபா ராம்தேவை பயன்படுத்திக் கொள்கிறது என்பது மிகவும் ஆபத்தானது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாபா ராம்தேவை முன்னிலைப்படுத்த முயல்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
கைதுச் செய்து பார் என சவால்விட்ட ராம்தேவ் பெண்வேடத்தில் தப்ப முயன்றார்...
புதுடெல்லி:எனக்கு மரணத்திற்கு கூட பயமில்லை. என்னை கைது செய்ய மத்திய அரசுக்கு துணிச்சல் உண்டா? என சவால் விட்டவாறு ஹைடெக் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குரு போலீஸார் சுற்றி வளைத்தவுடன் கைதுக்கு பயந்து பெண் வேடத்தில் தப்ப முயன்றார்.
நேற்று அதிகாலை ராம்லீலா மைதானத்தில் பல்வேறு நகைச்சுவையான நாடக காட்சிகள் அரங்கேறின. பெரும் போலீஸ் படையுடன் ராம் லீலா மைதானத்தை போலீசார் சுற்றி வளைத்தவுடன் அதுவரை சவடால் விட்ட ராம்தேவ் போலீஸின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு மக்கள் கூட்டத்தில் ஓடி மறைந்தார். ஒரு மணிநேர தேடலுக்கு பிறகு பெண் வேடமிட்ட ராம்தேவை பெண்கள் பகுதியிலிருந்து போலீசார் பிடித்தனர்.
வெளிநாடுகளை ஆக்கிரமித்துள்ள இந்திய ஹிந்துத்துவா!!
JUNE 6, ராம்தேவுக்கு ஆதரவாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உண்ணாவரதம் இருந்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக விஸ்வஹிந்து பரிசத்தின் பல்வேறு கிளைகள் அமெரிக்காவில் எல்லா மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இவர்களோடு சேர்ந்து அமெரிக்காவில் உள்ள மற்ற ஹிந்துத்துவ இயக்கங்களும் சேர்ந்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.
இந்திய வரலாற்றில் மிகமோசமான நாள்!! மோடி அறிவிப்பு!!
ஆமதாபாத், ஜூன் 6: பாபா ராம்தேவோடு உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது இந்திய வரலாற்றில் மிகமோசமான நாள் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கருத்துத் தெரிவித்துள்ளார்.
* இந்திய வரல்லாற்றில் எது மோசமான நாள் தெரியுமா? திருவாளர் மோடி அவர்களே, உங்கள் காவி கும்பலைச்சேர்ந்த கோட்சே தேசபிதா காந்தியை கொன்றது இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான் யாராலும் மறுக்க முடியாது.
Subscribe to:
Posts (Atom)