Thursday 2 June 2011

மாணவிகளுக்கான மேல்நிலை கல்வியை இலவசமாக வழங்கும் மனிதநேய அறக்கட்டளை


சென்னை: "பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படும் என மனிதநேய அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி தெரிவித்துள்ளார்.
  
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராமப்புற ஏழை மாணவிகள் மத்தியில், ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். பற்றிய விழிப்புணர்வு வேண்டும். அண்ணா பல்கலை, அரசு மருத்துவக் கல்லூரிகளில், உயர்கல்வி பயில அவர்களுக்கு இடம் கிடைக்க வேண்டும். இவற்றை கருத்தில்கொண்டு, பத்தாம் வகுப்பு தேர்வில், தமிழ் வழியில் பயின்று,

மாவீரன் மருத நாயகம்....


ரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது.
1997ல் கலைஞானி என திரையுலகம் வர்ணிக்கும் பிரபல நடிகர் கமல்ஹாசன் மிகப் பெரிய வரலாற்று படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார்.

அப்படத்தின் தொடக்க விழாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அன்றும் முதல்வராக இருந்த கலைஞர் மூப்பனார் உள்ளிட்ட புகழ் பெற்றவர்கள் எல்லாம் கலந்து கொண்டதால் அப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பெற்றது.

காஸா ரபாஹ் எல்லை மீது மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் !


MuthupetPFI: எகிப்து, காஸா ரபாஹ் எல்லை கடந்த மாதம் சனிக்கிழமை -28.05.2011- தொடக்கம் நிரந்தரமாக திறந்துள்ளதாகவும் பலஸ்தீனர்கள் தடைகள் அற்ற போக்குவரத்து செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்ட போதும் நேற்று புதன் கிழமை முதல் தினம் ஒன்றுக்கு 350 பேர் மட்டும் எல்லையை கடந்து செல்ல அனுமதிக்கபடுவர் என்று எகிப்து இராணுவ இடைக்கால நிர்வாகம் அறிவித்துள்ளதாக ஹமாஸ்  தெரிவித்துள்ளது.

பேராசிரியை இல்ஹாம் அல் கர்ளாவி...


"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி"
என்று அன்று பாடிவைத்தான், பாரதி.

நவீன உலகில் எத்தனையோ பெண்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்களாய், பல்துறை நிபுணிகளாய், சாதனையாளர்களாய்த் திகழ்ந்து வருகின்றனர்.

"இஸ்லாமிய மார்க்கம் பெண்களை அடக்கி ஒடுக்கி அவர்களின் உரிமைகளைப் பறித்துள்ளது; ஃபர்தாவுக்குள் அவர்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறது" என்றெல்லாம் உலகெங்கிலும் பல கூக்குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. மார்க்கம் என்ற பெயரால் பெண்களுக்கு இறைவன் கொடையாக அளித்துள்ள திறமைகளை வெளிப்படுத்த விடாமல் மூலையில் முடக்கிப் போடும் சுயநலவாதிகளான ஒருசில ஆண்களால் இந்தக் கோஷம் மேலும் மேலும் வலுப்பெற்று வருவதையும்

ஜிமெயில் பாஸ்வேர்ட்களை சீன ஹேக்கர்கள் திருடி வருகின்றனர்-கூகுள்

சான்பிரான்ஸிஸ்கோ சீனாவிலிருந்து செயல்படும் ஹேக்கர் கும்பல், ஜிமெயிலைப் பயன்படுத்தி வரும் நூற்றுக்கணக்கானோரின் பாஸ்வேர்ட்களை திருடி விட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அந்த ஜிமெயில்களின் பயன்பாடுகளை இந்த ஹேக்கர்கள் கண்காணித்து பல்வேறு குழப்ப வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி குறைவுக்கு முக்கிய காரணம் ஊழலே: முதல்வர் ஜெயலலிதா!


தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பெரிய அளவில் நடந்துள்ள ஊழலே, மின் உற்பத்தி குறைவுக்கு முக்கிய காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
 புனித ஜார்ஜ் கோட்டை, தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியபோது முதல்வர் ஜெயலலிதா, ”மின் உற்பத்தி குறைவுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பெரிய அளவில் நடந்துள்ள ஊழல்தான். அதிலும் முக்கியமாக தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதுதான்.” என்று  கூறியுள்ளார்.
மேலும் சில கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், அதிகாரத்தில் உள்ளவர்கள் பலத்த கமிஷன் பெறுவதற்காக, வேண்டுமென்றே மின் உற்பத்தி குறைக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களிடமிருந்து பெருந்தொகை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது என்ற புகாரும் எழுந்துள்ளது. 

ஹலால் பீர் அருந்துவதற்கு தடை


படாங் செராய்:மலேசியாவில் தற்போது விற்பனையாகும் ஹலால் பீரை முஸ்லீம் மக்கள் அருந்துவதை உடன் நிறுத்துமாறு மலேசிய அரசு அறிவித்துள்ளது. குறிப்பிட்ட பானம், “ஹலால் முறைப்படி தயாரிக்கப்பட்ட பீர்” என்ற விளம்பரத்துடன் அங்கு விற்பனையாகின்றது.

தேசிய பத்வா குழுவின்படி உணவிலும் பாணத்திலும் அனுமதித்துள்ள ஆல்கஹால் அளவை விட அதிக சதவிகிதம் இருக்கிறது என்று மலேசிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமரின் இலாகாக்களை கவனிக்கும் அமைச்சர் டேடுக் ஜமீல் பகாரம், ஹலால் பீர் பற்றிய இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தயாநிதி வீடு-சன் டிவி அலுவலத்திற்கிடையே ரகசிய எக்ஸ்சேஞ்ச்-ரூ. 400 கோடி இழப்பு என சிபிஐ புகார்


ஏர் செல் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தற்போது மேலும் ஒரு மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ளார். தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையே தகவல்தொடர்புக்காக 323 இணைப்புகளைக் கொண்ட ஒரு சட்டவிரோதமான, பிரத்யேக எக்ஸ்சேஞ்சையே அமைத்துள்ளார். இதில் ஒரு இணைப்பிலிருந்து மட்டும் மாதம் ஒன்றுக்கு 48 லட்சம் தொலைபேசி அழைப்புகள் பேசப்பட்டுள்ளன. இந்த வகையில் மொத்தமாக ரூ. 400 கோடி அளவுக்கு பிஎஸ்என்எல்லுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ கணக்கிட்டுள்ளது.

இப்படி ஒரு தனிப்பட்ட சட்டவிரோதமான எக்ஸ்சேஞ்ச் தயாநிதி மாறன் வீட்டில் இயங்கி வருவதாக முன்பே கூறப்பட்டது. ஆனால் அதை அப்போது தயாநிதி மாறன் மறுத்து விட்டார். அந்த சமயத்தில் அவருக்கும், திமுகவுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் நல்லுறவு இருந்தது. அதேபோல காங்கிரஸ் கட்சியும், திமுகவுடன் ஒட்டி உறவாடி வந்தது.இதனால் அந்தப் புகார் குறித்து விசாரிக்கப்படாமலேயே அமுக்கப்பட்டு விட்டது.

ஃபுளோடில்லா-2 கப்பல்களைத் தாக்க இஸ்ரேல் முன்னாயத்தம்?


எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி ஐரோப்பாவில் இருந்து காஸாவை நோக்கிப் பயணப்பட இருக்கும் ஃப்ரீடம் ஃபுளோடில்லா – 2 கப்பல்களை இடைநிறுத்துவதற்கு ராஜதந்திர நடவடிக்கைகளைக் கைக்கொள்ளும் முயற்சிகளில் இஸ்ரேல் ஈடுபடப் போவதில்லை. மாறாக, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கடற்படையின் கட்டளைகளுக்குக் கீழ்படிய மறுக்கும் யார் மீதும் பலப்பிரயோகம் செய்ய அது தயங்காது என இஸ்ரேலிய செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலிய ஹாரெட்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ஃப்ரீடம் ஃபுளோடில்லா – 2 கப்பல்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கடற்படையின் உத்தரவுகளை ஏற்க மறுத்து காஸா கடற்கரையை அண்மிக்குமாக இருந்தால், அவற்றின்மீது தாக்குதல் நடாத்துவதை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ தடுக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல்: வாஜ்பாய்க்கு சி.பி.ஐ சம்மன் அனுப்ப முடிவு!


டெல்லி:  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு தீவிரவிசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் 1999-ம் ஆண்டு சிறிது காலம் தொலை தொடர்புத் துறையை வாஜ்பாய் தன் வசம் வைத்திருந்தார்.

இதனால் அவருக்கு, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக என்ன நடந்தது என்று முழுமையாக தெரிந்து இருக்கும் என்ற அடிப்படையில் அவருக்கு சம்மன் அனுப்ப சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு முடிவு செய்துள்ளது. 

ஊழலுக்கு எதிராக போராடும் பாபா ராம்தேவின் சொத்து மதிப்பு 1100 கோடி


புதுடெல்லி:ஊழலுக்கு கறுப்பு பணம் பதுக்கலுக்கும் எதிராக உண்ணாவிரதப்போராட்டத்தம் நடத்த இருக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குரு பாபா ராம்தேவின் 1100 கோடி ஆகும்.
உத்தரகண்டில் உள்ள ஹரித்துவாரில் பதஞ்சலி யோகாபீட அறக்கட்டளையின் கீழ் ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன. தனது யோகா வகுப்புகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க அஸ்தா டி.வி என்ற தொலைக்காட்சி சேனலும் இந்த யோகா குருவுக்கு சொந்தம்.

தனிமையில் தியானம் நடத்துவதற்காக ஸ்காட்லாந்தில் கும்ப்ரே தீவை இரண்டு மில்லியன் ஃபவுண்டிற்கு சொந்தமாக்கியுள்ளார் பாபா ராம்தேவ். பதஞ்சலி யோகா பீட அறக்கட்டளை மட்டுமல்ல கூடவே திவ்ய யோகா மந்திர் அறக்கட்டளை,பாரத் ஸ்வாபிமான் அறக்கட்டளை ஆகியன ராம் தேவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.