கல்வித் துறையில் முஸ்லிம்கள் சந்திக்கும் சவால்கள் குறித்த பொதுக்கூட்டம் மும்பையில் வருகிற 29, 30–ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்க உள்ளது. இதில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பங்கேற்கிறார். ‘மவுலானா ஆசாத் விச்சார் மஞ்ச்’ என்ற அமைப்பு சார்பில் கல்வித்துறையில் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த 2 நாட்கள் பொதுக்கூட்டம் மும்பை கலினா பகுதியில் உள்ள பல்கலைக்கழக மைதானத்தில் வருகிற 29 மற்றும் 30–ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.
Monday, 13 May 2013
மூன்றாவது முறையாக பாகிஸ்தான் பிரதமராகிறார் நவாஸ் ஷெரிஃப்!
பாகிஸ்தான் தேர்தலில், நவாஸ் ஷெரிஃப்பின் கட்சி 107 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற்ற 272 தொகுதிகளில் 235 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் நவாஸ் ஷெரிஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 107 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க மொத்தம் 137 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இருப்பினும், நவாஸ் ஷெரிஃப் கட்சி, சிறிய கட்சிகளி்ன் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
பெங்களூர் குண்டுவெடிப்பு! சிம்கார்டு ஆதாரத்தை மறைக்க முயற்சி?
பெங்களூர் மல்லேஸ்வரம் பாஜக அலுவலகம் அருகே, கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சிம் கார்டு ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவருக்கு உரியது என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தொடர்பை மறைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Posts (Atom)