உலக வரைப்படத்தில் தீவிரவாதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு நாடு, தனக்கென்று வரையறுக்கப்பட்ட எல்லை கோடுகள் எதுவும் இல்லாத தேசம், தேவைப்படும்போது அப்பாவிகளின் நிலங்களை அபகரித்து தன்னுடன் இணைத்து கொள்ளும் நாடு, ஐக்கிய நாடுகளின் சபையின் தீர்மானங்களை பல முறை மீறிய நாடு, இப்படு தேவையற்ற பல சிறப்புகளை பெற்ற தேசம் தான் இஸ்ரேல். புனித பூமியான ஃபலஸ்தீன் மற்றும் முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் ஆகிய பிரதேசங்களில் இவர்கள் கொலை செய்வதற்கு தயங்காதவர்கள் இவ்று பச்சிளம் பாலகர்களையும் கொலை செய்ய தயக்கம் காட்டுவதில்லை.