Friday, 24 June 2011

பிலிப்பின்ஸ் நாட்டில் வெள்ளம்: 50,000 பேர் இடமாற்றம்

மணிலா- பிலிப்பின்ஸ் நாட்டில் கடும் மழை, வெள்ளம் காரணமாக 50 ஆயிரம் பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


கேடன்டுவான்ஸ் மாகாணத்தில், கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால், பல நகரங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

போலீஸ் உயரதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் சொத்து வந்தது எப்படி?

கோவை: தமிழக போலீசில் பணியாற்றும் உயரதிகாரிகளில் சிலர், வருமானத்துக்கும் அதிகமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு சொத்துகளை, பினாமி பெயரில் வாங்கிப் போட்டிருப்பதாக அரசுக்கு புகார் சென்றுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து ரகசியமாக விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


சென்னை: தமிழகத்தில் வரும் டிசம்பரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் வரும் டிசம்பரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.


ஆப்கனில் இருந்து வீரர்களை திரும்ப அழைக்க பிரான்ஸ் முடிவு

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரான்சும் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள 4 ஆயிரம் ராணுவ வீரர்கள‌ை வாபஸ் பெறப்போவதாக அந்நாட்டு அதிபர் நேற்று தெரிவித்தார்.


ஆப்கனில் நடப்பாண்டில் 10 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்பட்டு 2012ம் ஆண்டில் மொத்தம் 33 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்படுவார்கள் ‌என அதிபர் ஒபாமா அறிவித்தார்.

கர்நாடகா:ஹன்ஸூர் மாணவர்கள் படுகொலையில் கெ.எஃப்.டியை தொடர்பு படுத்தும் மர்மம்-சங்க்பரிவாரின் சதிச்செயல்

மைசூர்:கர்நாடகா மாநிலம் ஹன்ஸூரில் பணத்திற்காக இரண்டு மாணவர்கள் கடத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கலைக்கப்பட்ட கர்நாடகா ஃபாரம் ஃபார் டிக்னிடி (கே.எஃப்.டி) அமைப்பை தொடர்புபடுத்துவதில் மர்மம் நீடிக்கிறது.



ரூ.10 லட்சம் வரையிலான கல்விக் கடன்களுக்கு வட்டி ரத்து!

"பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் இருந்து, தொழில் கல்விக்காக ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்ற மாணவர்களின் வட்டியை இனிமேல் அரசே செலுத்தும்" என மத்திய அரசு அறிவித்துள்ளது.


தொழில் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வங்கிகள் மூலமாக கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வங்கிக் கடன் பெற்ற ஏழை மாணவர்களின் வட்டியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2009-10 கல்வி ஆண்டு முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது. மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டமானது, இந்திய வங்கிகள் சங்கத்தின் கீழ் உள்ள வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"அனைத்து வழிகளிலும் பெற்றோரின் ஆண்டு மொத்த வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் உள்ள, பொருளாதார நிலையில் நலிவுற்ற மாணவர்களுக்காக 2009-10 கல்வி ஆண்டிலிருந்து இந்தத் திட்டம் அறிமுகப் படுத்தப்படுகிறது. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் படிக்கும் நலிவடைந்த மாணவர்கள், ரூ.10 லட்சம் வரை கடன் பெற்றிருந்தால் வட்டியை அரசே செலுத்தும்.

இதற்காக, மாநில அரசின் உரிய அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்து மாவட்ட, வட்ட, யூனியன் அளவிலான அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்குமாறு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வட்டி ரத்து சலுகையைப் பெற கல்விக் கடன் பெற்ற வங்கிக் கிளையின் அதிகாரிகளை மாணவர்கள் அணுகி விண்ணப்பம் அளிக்கலாம்.

இந்தத் திட்டத்தை அமல் படுத்துமாறு இந்திய வங்கிகள் சங்கத்தில் உள்ள உறுப்பு வங்கிகள் அனைத்தும் கேட்டுக் கொள்ளப்படுகின்றன. இந்தச் சலுகை திட்டம் தொடர்பான இதர விபரங்களை மத்திய மனித வள மேம்பாடு அமைச்சகத்தின் இணைய தளத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். சட்டப்படி உரிய அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட ஆண்டு வருமான சான்றிதழுடன் விண்ணப்பித்ததும் கல்விக் கடனுக்கான வட்டித் தொகை வரவு வைக்கப்படும்.

இதற்கான, விண்ணப்பங்களை அந்தந்த வங்கிக் கிளைகளில் அளிப்பதற்கான கடைசித் தேதி ஜுலை 20 ஆகும்." என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க பயப்படாது! அஹ்மது நிஜாத்

தெஹ்ரான்: ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதற்கு பயப்படவில்லை ஆனால் அப்படி செய்ய எங்களுக்கு விருப்பம் இல்லை என்று ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத் கூறியுள்ளார் வியாழக்கிழமையன்று அரசு தொலைக்காட்சி ஒன்றில் இச்செய்தி வெளியிடப்பட்டது


இணையதளங்களில் தகவல்களை திருடியவர் ஒரு மனநோயாளி

சி.ஐ.ஏ அமெரிக்க செனட் மற்றும் பல நிறுவனங்களின் இணையத்தளங்களில் ஊடுறுவிய குற்றத்துக்காக 19 வயது பிரிட்டிஷ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவர் சிறு வயது முதலே மன உளைச்சல் மற்றும் உணர்ச்சி வசப்படல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர் என்று அவரின் தாயார் றீட்டா கிளியர்லி தெரிவித்துள்ளார்.

மரணத்தை கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம்: கடாபி

நூறாண்டுகள் ஆனாலும் மேற்கத்திய படைகளை எதிர்த்து சண்டையிடுவோம். சாவுக்கு அஞ்ச மாட்டோம் என லிபியா தலைவர் கடாபி தெரிவித்துள்ளார்.


லிபியாவில் அதிபர் கடாபியை பதவி விலகக்கோரி அதிருப்தியாளர்கள் நேட்டோ படைகளின் உதவியுடன் போராடி வருகின்றனர்.