Friday, 24 June 2011

சென்னை: தமிழகத்தில் வரும் டிசம்பரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் வரும் டிசம்பரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.


இந்த ஜாதிவாரி கணக்கெடுப்புடன் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் குறித்த விவரங்களும் தொகுக்கப்படவுள்ளன.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்தக் கணக்கெடுப்பு டிசம்பருக்குத் தள்ளிப் போகிறது.

வேலைவாய்ப்பு, கல்வியில் உரிய இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில் இந்தியாவில் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் உள்பட பெருவாரியான அரசியல் கட்டசிகள் கோரி வருகின்றன.
குறிப்பாக திமுக, பாமக, சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, மதசார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் கட்சி ஆகியவை கோரி வருகின்றன.
இந்தக் கட்சிகளின் நெருக்குதல் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறையும், இந்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகமும் இணைந்து இதை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கடைசியாக ஜாதிவாரியான கணக்கெடுப்பு இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் 1931ம் ஆண்டு ஆங்கிலேயே அரசால் நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு முறையான ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தவே இல்லை.

மத்திய அரசுத் துறைகள் இந்தக் கணக்கெடுப்பை நடத்தினாலும் தமிழகதில் களப்பணியில் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களே இந்தப் பணியை செய்வர் என்று தெரிகிறது.

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்புப் பணியில் பிற்படுத்தப்பட்டோர்- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை முக்கிய பங்காற்ற உள்ளது.

No comments:

Post a Comment