சி.ஐ.ஏ அமெரிக்க செனட் மற்றும் பல நிறுவனங்களின் இணையத்தளங்களில் ஊடுறுவிய குற்றத்துக்காக 19 வயது பிரிட்டிஷ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் சிறு வயது முதலே மன உளைச்சல் மற்றும் உணர்ச்சி வசப்படல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர் என்று அவரின் தாயார் றீட்டா கிளியர்லி தெரிவித்துள்ளார்.
இவர் 10 வயதிலேயே தற்கொலை செய்ய முயன்றவர் என்றும் அவர் கூறியுள்ளார். இவர் ஐந்து வயதிலேயே பாடசாலையில் இருந்து முதற் தடவையாக விலக்கப்பட்டார்.
அதன் பிறகு பெரும்பாலும் ஒரு துறவி போல் தமது குடும்பத்துக்குச் சொந்தமான எஸக்ஸ் பங்களாவில் தனது படுக்கை அறையிலேயே பெரும்பாலான காலத்தைக் கழித்தவர்.
அவசியத் தேவைக்காக மட்டும் தான் அந்த அறையிலிருந்து வெளிவருவார். இணையத் தளத்திலேயே இவரின் காலம் கழிந்தது. இவருடைய அறைக்குள் கிழமைக்கு ஒரு தடவை தாயார் சென்று சுத்தப்படுத்துவார்.
அதைத் தவிர வேறு யாரும் செல்ல முடியாது. இவர் சிறு பிள்ளையாக இருக்கின்ற போது அச்சம் என்பதே கிடையாது. போக்குவரத்து நெரிசல் மிக்க வீதிகளின் நடுவே பாய்ந்து ஓடுவார். வீட்டுக்குள் நெருப்பை மூட்டி வேடிக்கைப் பார்ப்பார்.
எந்த விளைவையும் எதிர்கொள்ளும் துணிச்சல் இருந்தது. என்னுடைய மகன் எனக்கு ஒரு குழந்தை போல். அவரைக் காப்பாற்ற நான் என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன் என்று சி.ஐ.ஏ யை கதிகலங்கச் செய்துள்ள இந்த கணணி மாயாஜால இளைஞனின் தாய் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க, பிரிட்டிஷ் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை மூலம் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்ட இவர் தற்போது பிரிட்டிஷ் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். விரைவில் இவர் மேலதிக விசாரணைகளுக்காக அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படவுள்ளார்.
No comments:
Post a Comment