நூறாண்டுகள் ஆனாலும் மேற்கத்திய படைகளை எதிர்த்து சண்டையிடுவோம். சாவுக்கு அஞ்ச மாட்டோம் என லிபியா தலைவர் கடாபி தெரிவித்துள்ளார்.
லிபியாவில் அதிபர் கடாபியை பதவி விலகக்கோரி அதிருப்தியாளர்கள் நேட்டோ படைகளின் உதவியுடன் போராடி வருகின்றனர்.
அதிருப்தியாளர்கள் மீது கடாபி ஆதரவு படைகள் தாக்குதல் நடத்துவதால் அதை எதிர்த்து நேட்டோ படைகள் கடாபி ஆதரவாளர்கள் தங்கியுள்ள கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன. இதில் கடாபியின் நண்பர் ஹெமிதியும், அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர்.
அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தொலைக்காட்சியில் பேசிய கடாபி கூறியதாவது: நேட்டோ படைகள் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தாமல் மக்கள் வசிக்கும் பகுதியில் தாக்குதலை தொடர்கின்றன. இதை ஐ.நா பார்வையாளர்கள் பார்வையிட வேண்டும்.
எத்தனை ஆண்டுகளானாலும் மேற்கத்திய படைகளை எதிர்த்து போராட தயாராக இருக்கிறோம். சாவுக்கு நாங்கள் அஞ்சவில்லை. நூறாண்டுகள் ஆனாலும் நேட்டோ படைகளை எதிர்த்து நின்று சண்டையிடுவோம்.
No comments:
Post a Comment