Friday 24 June 2011

கர்நாடகா:ஹன்ஸூர் மாணவர்கள் படுகொலையில் கெ.எஃப்.டியை தொடர்பு படுத்தும் மர்மம்-சங்க்பரிவாரின் சதிச்செயல்

மைசூர்:கர்நாடகா மாநிலம் ஹன்ஸூரில் பணத்திற்காக இரண்டு மாணவர்கள் கடத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கலைக்கப்பட்ட கர்நாடகா ஃபாரம் ஃபார் டிக்னிடி (கே.எஃப்.டி) அமைப்பை தொடர்புபடுத்துவதில் மர்மம் நீடிக்கிறது.



2007-ஆம் ஆண்டு பிப்ருவரி மாதம் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வைத்து நடந்த எம்பவர் இந்தியா மாநாட்டில் கேரளாவின் என்.டி.எஃப், தமிழ்நாட்டின் எம்.என்.பி, கர்நாடகாவின் கே.எஃப்.டி ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு உருவானதுடன் கே.எஃப்.டி உள்ளிட்ட மூன்று அமைப்புகளும் கலைக்கப்பட்டன.

ஆனால், கடந்த வாரம் நடந்த சம்பவத்துடன் தற்போது செயல்படாத கலைக்கப்பட்ட கே.எஃப்.டியை தொடர்புபடுத்தியதன் பின்னணியில் சங்க்பரிவாரின் ரகசிய அஜண்டா இருப்பதாக கருதப்படுகிறது. மாணவர்கள் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் கே.எஃப்.டி உறுப்பினர்கள் என கர்நாடகா மாநில பா.ஜ.க அரசின் உள்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் கூறியுள்ளனர். இதன் பின்னணியில் மர்மம் உள்ளது. மேலும் இதன் பின்னணியில் திறமையான கும்பல் செயல்படுவதாக கருதப்படுகிறது.

கைது நடந்தவுடன் ஆன்லைன் அறிவுக்கருவூலமான விக்கிபீடியாவில் கெ.எஃப்.டியைக் குறித்த கட்டுரையில் இச்சம்பவத்தை சேர்த்தவர்கள் மாணவர்கள் கொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. பணத்திற்காக ஹிந்துக்களை கடத்தி சென்று கொலை செய்த வழக்கில் கே.எஃப்.டி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வமைப்பு உடனடியாக தடை செய்யப்படும் எனவும் விக்கிபீடியா கட்டுரை கூறுகிறது. பொதுவாக வரவிருக்கும் சம்பவங்களை முன்னுரைத்தல் விக்கிபீடியாவின் வழக்கம் அல்ல.பா.ஜ.கவின் விருப்பத்தை எடிட்டர் இதில் உட்படுத்தியுள்ளார் என்பது இதிலிருந்து புரிந்துக்கொள்ளலாம்.

மாணவர்கள் கொலை சம்பவத்துடன் கே.எஃப்.டியை இணைப்பதில் மர்மம் உள்ளதாக கர்நாடகா பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் இல்லியாஸ் முஹம்மது தும்பே தெரிவித்துள்ளார். பாப்புலர் ஃப்ரண்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியைத்தான் பா.ஜ.க அரசும், போலீசும் சேர்ந்து நடத்துகின்றன.

மாணவர்கள் கொலையை எதிர்த்து துவக்கம் முதலே களத்தில் நிற்கும் இயக்கம் தான் பாப்புலர் ஃப்ரண்ட். கொலைகளுக்கு பின்னணியில் செயல்பட்டுள்ள உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்திற்கு முன்னால் நிறுத்த பாப்புலர் ஃப்ரண்ட் எல்லாவித உதவிகளையும் போலீஸிற்கு வாக்குறுதியளிக்கிறது என இல்லியாஸ் தும்பே தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment